search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்கள் நாளை நடக்கிறது.
    • 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:-பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு எளம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தொண்டமாந்துறை (கிழக்கு), குன்னம் வட்டாரத்திற்கு புதுவேட்டக்குடி, ஆலத்தூர் வட்டாரத்திற்கு மேலமாத்தூர் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் அளித்தனர்.
    • முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, மனச் சிதைவு பாதிப்பிலிருந்து மீளுவது போன்ற நோய்களுக்கு மனநல திட்டம் தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் அளித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் சேரன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்கள் நாளை நடக்கிறது.
    • 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:- அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு கோவில் எசனை (கிழக்கு), உடையார்பாளையம் வட்டாரத்திற்கு அங்கராயநல்லூர் (மேல்பாகம்), செந்துறை வட்டாரத்திற்கு தளவாய் (தெற்கு), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு அழகாபுரம் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம், நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, தலைமை வகித்து முகமை தொடங்கி வைத்தார். நல்லூர் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இந்த சிறப்பு கால்நடை முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் , கன்றுகுட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டன.

    முகாமில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட விவசாயி களுக்கு விருதுகளையும் வழங்கினார். முகாமிற்கு பாமகவுண்டம்பாளையம், பொதிகை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். முகாமில் ஊராட்சித் துணைத் தலைவர், வாழ் உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் தரும புரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனி யார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

    ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஐ.டி.ஐ ல் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு பயிற்சியாளர்களும் முகாமில் கலந்துக் கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

    மேலும், இதுநாள் வரை ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், தொழிற்பழகுநர் பயிற்சி பெற தயார்நிலையில் உள்ளவர்களும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், விவரங்களுக்கு தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 94999–37454, 94887–09322 மற்றும் 94422–86874 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது
    • வாலாஜா ஊராட்சியில்

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த வாலாஜா நகர ஊராட்சியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த சிறப்பு முகாம் நிறைவுப்பெற்றது.

    நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிதுரை தலைமை வகித்தார். மாவடட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ.குணசேகரன் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி, மாணவர்கள் அனைவரும் சமுதாய தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் ஜெ.சார்லஸ் நன்றி தெரிவித்தார். இந்த ஏழு நாள்கள் நடைபெற்ற முகாமில், மரக்கன்றுகள் நடுதல், கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணி, பொது மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், போதை ஓழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

    • கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப்பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி, டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவர்த்தி பெறலாம்.

    இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

    செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது
    • 12-ந்தேதி நடைபெற உள்ளது

    கரூர்

    தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வெண்ணைமலை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 12-ந்தேதி (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) நடைபெற உள்ளது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ- 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (சி.ஓ.இ. தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உள்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுனர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுனர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களை அறியும் பொருட்டு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூர் என்ற முகவரியில் நேரிலும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ரத்த தான முகாம் நடைபெற்றது
    • முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை சார்பில் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், முத்துக்குமார், பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் இயக்க தலைவர் சரவணகுமார், துணைத்தலைவர் யோகராசா, செயலாளர் வெள்ளைச்சாமி, இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, முத்துக்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்றது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரங்கோடு சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமை தாங்கினார். பந்தலூர் தாசில்தார் நடேசன், பிதிர்காடு வனச்சரகர் ரவி, துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரங்கோடு படச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, சாலை, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது
    • விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமைவகித்தார். கிராம ஊராட்சி ஆணையர் குமரன் முன்னிலைவகித்தார். சமூகபாதுகாப்புத்திட்ட தாசில்தார் பழனிச்சாமி முகாமினை தொடங்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கோகிலா, எழும்பு முறிவு மருத்துவர் நெடுங்கிள்ளி , மனநலமருத்துவர் அஜய், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரவர்த்தனா, கண் மருத்துவர் அகல்யா ஆகியோர் பரிசோதனைசெய்து தேசிய அடையாள அட்டை, மருத்துவ உதவி, தேவையான உபகரணங்கள் எம்எஸ்ஐடி கிட் போன்றவைகள் வழங்கம்பணியில் ஈடுபட்டனர். இதில் துணைஆணையர்கள் கற்புக்கரசி, நல்லமுத்து, ராஜேந்திரன், சிறப்பாசிரியர்கள், தொண்டுநிறுவன பிரிநிதிகள், உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×