search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
    • 14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 19,98,458 பயனாளிகளுக்கு முதல் தவணையும் 18,74,807 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணையும், 39,983 பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தற்போது 15.7.22 முதல் 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள 32-வது மெகா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துகொள்ள வேண்டுமாய் கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,677 மையங்களில் 32-வது தடுப்பூசி முகாம்
    • மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தகவல்

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நாளை (24-ந்) 32-வது தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில் 12 -18 வயதுடைய கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி வரும் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2ம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாதகால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    இதேபோல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இன்னும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 43,447 பேர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடைய நபர்கள் 5,68,757 பேர். கரூர் மாவட்டத்தி ல் உள்ள இவர்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை ( 24)ஜ%*ஜநடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமந்திரின் பென்சன் திட்ட தொடக்க முகாம் நடைபெற்றது
    • 18 முதல் 40வயது உடையவர்களை பதிவு செய்து தொடங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பிரதமந்திரின் பென்சன் திட்ட தொடக்க முகாம் நடந்தது. கண்டியாநத்தம் கிராம சேவை மையக்கட்டிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் மூலம் பிரதம மந்திரியின் பென்சன் திட்டத்தில் 18 முதல் 40வயது உடையவர்களை இந்த திட்டத்தில் பதிவு செய்து தொடங்கப்பட்டது. இந்த முகமினை ஊராட்சித்தலைவர் செல்விமுருகேசன் தொடங்கிவைத்தார். ஊராட்சி உறுப்பினர்கள் அழகப்பன், சரோஜாதேவி, ஊராட்சி செயலர் அழகப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தைச்சேர்ந்த அருள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கைபேசி ஆகியவைகளுடன் பதிவு செய்து பிரதம மந்திரின் பென்சன் திட்டத்தில் சேர்த்து தொடங்கிவைத்தார்.

    • கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.

    இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • 75 பேர் தானம் செய்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக ரத்ததான முகாம் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 75 பேர் ரத்ததானம் வழங்கினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியினர் ரத்ததான சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • மதுரையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது வெள்ளிக் கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி மதுரையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளன. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ, சுருக்கெழுத்து, தட்டச்சர், டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி முடித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

    இதற்காக அவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் (http://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

    தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்து உள்ளார்.

    • மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் தனியார் முன்னனி நிறுவனங்கள் மூலமாக, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • இதில் 16 நிறுவனங்கள் பங்கேற்றன.
    • சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் எனது நகரம் எனது பெருமை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் எனது நகரம் எனது பெருமை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இடையே கொளத்தூர் நகரத்தை தூய்மையான நகரமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தம்மாள், பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    மேலும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் பொழுது மஞ்சள் பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது என்ற கருத்தும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

    • நஷ்ட ஈடு வழக்கு தொடருதல் மற்றும் சமரச தீர்வு காணும் முறைகள் ஆகியவற்றை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக செயலாளர் தலைமையில் துறையூர் ரோட்டில் உள்ள கே.கே.பி நூற்பாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு பற்றிய முகாம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட சட்டப் பணிக்குழுவின் செயலளார் விஜய்கார்த்திக், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், தொழிலாளர்கள் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் விபத்திற்கு நஷ்ட ஈடு பெறும் முறை மற்றும் தொழிலாளர் துணை ஆணையரிடம் நஷ்ட ஈடு வழக்கு தொடருதல் மற்றும் சமரச தீர்வு காணும் முறைகள் ஆகியவற்றை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.

    மதுரை குட்வில் சமூக நற்பணி மன்ற திட்ட அலுவலர் ஜேம்ஸ், போதை பொருள் தவிர்ப்பு ஆகியவற்றை பற்றி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

    இம்முகாமிற்கு கே.கே.பி குழும தலைவர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழும உறுப்பினர் ஆண்டனி செய்திருந்தார்.

    • சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது என்று நீதிபதி சுனில்ராஜா பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத் தலைவா் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    பணிநிறைவு சி.ஐ.டி. அண்ணா மலை வரவேற்றார். வழக்கறிஞா்கள் சுடர்முத்தையா, ராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமாசித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பேசினர்.

    நீதிபதி சுனில்ராஜா பேசியதாவது:-

    இந்த குழுவின் நோக்கம் என்னவென்றால் சட்டத்தின் முன் அனை வரும் சமம். ஏழை, வசதி படைத்தவன் என்ற வேறுபாடு கிடையாது. வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது.

    நீண்ட காலமாக நடந்து வரும் வழக்குகளை மக்கள் நீதிமன்றம் சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம். அப்படி தீர்வு கிடைக்கப் பெற்றவா்களுக்கு வழக்குக்காக தங்கள் செலவு செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த முகாமில் அதிமாக பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்றார்.

    நிகழ்ச்சியில் வழக்கறி ஞா்கள் மாலதி, சாமி, குமார், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தா லிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திரு மலைக்கு மார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார். ஏற்பாடு களை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.

    • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ள
    • மைய நூலகத்தில் நாளை நடைபெறுகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (20-ந்தேதி, புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் முதியோர்களுக்கு ஏற்படும் இதய நோய், ஆஸ்த்துமா, மூட்டு வலிகள், சத்து குறைபாடு, கண்நோய், மலக்கட்டு, தூக்கமின்மை, வயிற்றுப்புண்கள், சர்க்கரை நோய், ரத்த சோகை ஆகிய நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் நூலகத்திற்கு படிக்க வரும் மாணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

    ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு இருப்பவர்களும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடலாம். மேலும் ஆண்களுக்கு ஏற்படும் பிராஸ்டேட் வீக்கம் (புரஸ்தகோளதாபிதம்) நோய்க்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக கோளாறு, கல் அடைப்பு, பித்தப்பை கற்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மார்பக கட்டி, கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி உள்ளிட்ட நோய்களுக்கும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • காசநோய் விழிப்புணர்வு முகாமிற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மாவட்ட நல கல்வி அலுவலர் மாரிமுத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்டதுணை இயக்குனர் காசநோய் பிரிவு டாக்டர் வெள்ளைச்சாமி பேசியபோது,

    தற்போது தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களில் சென்று ஆய்வு செய்தால் மிகப்பெரிய செலவினங்களால் பொதுமக்கள் பாதித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசின் சார்பிலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்வதற்காக இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் காச நோய் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு அந்த வாகனத்துடன் வந்து காசநோய் பரிசோதனை செய்யப்படும் எனவும், பரிசோதனை முடிவின்படி காசநோய் இருப்பது தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து காசநோயிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் எனவும், இதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.தொடர்ந்து காசநோய் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், முதல் நிலை காச நோய் மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார பார்வையாளர் ராம்திவ்யா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×