search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223246"

    • மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியதில் 2 பேரை கைது செய்தனர்.
    • பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, ரெயில்வே போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், நேற்று இரவு மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனை நடத்தினர்.

    பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 35

    கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்திய நெல்லை பாளையங்கோட்டை, நயினார் தெருவை சேர்ந்த வேல்முருகன், மணிகண்டன் (வயது 32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரை செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் சுரேஷ் குமார் (வயது 44 ). நெல்லை மாவட்டம் வெள்ளக்கல்லை சேர்ந்த ராமையா என்பவரது மகன் முருகன் (42). இவர் தற்போது பொல்லிக்காளிபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் இருவரிடமிருந்து 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வினீத் 2பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்தார். இதனை தொடர்ந்து 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 40).

    இவர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வைத்துள்ள பெட்டிக்கடை யில் அரசால் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் அம்ஜத்தின் கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.2,190 பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

    • புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருச்சுழி அருகே உள்ள மேலக்கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 94 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் பூமிநாதன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஸ்ரீவில்லி புத்தூர் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 14 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் பால கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தூர் அருகே நத்தத்துபட்டி பகுதியில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.

    • மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ரெயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    அதிரடி சோதனை

    போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா சோதனையில் மேற்கொண்டு வருகி றார்கள்.

    மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ரெயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ் பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயிலில் கடத்திய கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    கஞ்சா வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனியின் மேற்பார்வையில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார், மேலூர் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் மேலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கீழையூர்-அட்டப்பட்டி சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்ேடா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை மறித்தனர். அப்போது அதில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது 20 மூடைகளில் 240 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து புகையிலை பொருட்களையும், ஆட்ேடா, 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மேலூர் ஜோதிநகர் சித்திக் (47), அண்ணாகலணி சாகுல்ஹமீது (56), காந்திஜிபூங்கா அலிப்கான் (47) என தெரியவந்தது.

    இவர்களை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா ? வேறு எங்கு பெரிய அளவில் பதுக்கி வைத்துள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
    • கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு தென்றல் நகரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா என 12 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.

    இவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரம் ஆகும். இதை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • படம் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) மூன்றாவது திருத்த விதிகள், 2022 இன் கீழ் திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 1, 2022 முதல் பொருந்தும்.

    நாட்டில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் 'புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம் பிரசுரிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. படம் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர், 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லுது பேக்கேஜ் செயயப்படும் புகையிலை பொருட்களில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய சுகாதார எச்சரிக்கைகளின்படி, 'புகையிலை பயன்பத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்' என்று கூடிய சுகாதார எச்சரிக்கை புகைப்படம் இடம்பெறும்.

    அதன்படி, ஜூலை 21, 2022 தேதியிட்ட 2008 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகளில் திருத்தம் மூலம் புதிய சுகாதார எச்சரிக்கைகளை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) மூன்றாவது திருத்த விதிகள், 2022 இன் கீழ் திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 1, 2022 முதல் பொருந்தும்.

    வழிகாட்டுதல்களை மீறுவது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை) சட்டம், 2003ன் பிரிவு 20ன் படி சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் வந்து நின்றது.

    அவனியாபுரம்

    அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல் உதவி ஆணையாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் வந்து நிற்கவே அதனை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட 124.320 கிலோ புகையிலை இருப்பதை கண்டு பிடித்தனர்.

    காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் விற்பனை செய்வதற்காக புகையிலையை கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தையும், தடை செய்யப்பட்ட புகையிலையையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் ராஜா(42), தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த திருப்பதி மகன் பாலமுருகன் (36)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

     பல்லடம், ஜூலை.22-

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டரில் மூட்டையுடன் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் நல்லான்(வயது 26) என்பது தெரியவந்தது அவரிடமிருந்து 51கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீவில்லி புத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சு பூ தெரு சந்திப்பில் கொத்தங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 28), ஸ்ரீவில்லிபுத்தூர் முடுக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (41) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 28 கிலோ 584 கிராம் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 856 ஆகும்.

    இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சோதனை நடத்தினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் எழுத்தாணிக்கார தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த 2,229 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக வில்லாபுரம் சக்திவேல் நகரைச் சேர்ந்த அசோக்குமார் (51) என்பவரை கைது செய்தனர்.

    ×