search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223308"

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
    • குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வும், மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடந்து முடிந்துள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந் தேதி) தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடத்தப்படுகிறது.

    தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. குமரி மாவட் டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்குநரக அறிவுறுத்தல்படி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று பிற மாவட்ட விடைத்தாள்கள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் படந்தாலுமூடு தூய இருதய மெட்ரிக் மேல்நிலைபள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி ஆகிய இரு மையங்களும் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந்தேதி) முதன்மை கண்காணிப் பாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவர்கள் இன்று காலை 9 மணிக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு விடுப்பு அனுமதியில்லை என்றும், மருத்துவ விடுப்பில் ஆசிரி யர்கள் இருப்பின் தலைமை ஆசிரியர், தாளாளர் பரிந்துரையுடன் முகாம் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாடவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி, அறிவியல், கணினி தொழில்நுட்பம், வணி கவியல், கணக்குபதிவியல், பொருளியல் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 300 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப் பாளர்களாகவும், கூர்ந் தாய்வு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை போன்று உதவித்தேர்வர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் சுமார் 1200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பிய விடைத்தாள்கள்.
    • பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக திருட்டு.

    காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி படிப்புக்கான ஆன்லைன் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விரகனூரில் பழைய பேப்பர் குடோனில் விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

    மதுரையில் பழைய பேப்பர் கடையில் இருந்து பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையில் பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    காணாமல்போன விடைத்தாள்கள் மீட்கப்பட்ட நிலையில், அதுபற்றி விரிவாக விசாரிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×