search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
    • கிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அரிகிருஷ்ணன் (வயது 67). கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த குரங்குகள் வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன.
    • ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன. நடை பாதையில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களை விரட்டி பிடித்து பறித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்இந்நிலையில் ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதை அறிந்த சமூக ஆர்வலர் ஹில்சன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேப்பூர் கால்நடை டாக்டர் வசந்த் மற்றும் விருத்தாசலம் வனச்சரகத்தின் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து அந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது, குரங்கு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து மீண்டும் அந்த குரங்கை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த சமூக ஆர்வலர் ஹில்சனுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.

    • வைரமுத்து 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.
    • விஷம் குடித்த வைரமுத்து தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டி கீழதெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் வைரமுத்து(வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 11-ந்தேதி மாலை அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் அவர் விஷம் குடித்தார். அதன்பின்னர் அவர் தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று வைரமுத்து உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக வைரமுத்து உப்புச்சத்து நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான பாண்டியராஜிக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
    • மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(வயது 39). விவசாயி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    பாண்டியராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவரை, மனைவி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார்.
    • இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர்.

    சேலம்:

    கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார். இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர். ஆனால் அவர் சாப்–பி–டா–த–தால், பெற்–றோர் திட்டி உள்–ள–னர். இதில் மன வேதனை அடைந்த மாணவி வீட்–டில் இருந்த எறும்பு மருந்தை (விஷம்) குடித்து விட்டு 9-ந் தேதி அன்று பள்–ளிக்கு சென்–றுள்–ளார். அங்கு மயக்–கம் அடைந்–த மாண–வியை கூட–மலை அரசு ஆரம்ப சுகா–தார நிலை–யத்–தில் சேர்த்–த–னர். முத–லு–தவி சிகிச்சை அளிக்–கப்–பட்டு, மேல் சிகிச்–சைக்–காக ஆத்–தூர் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு அவ–ருக்கு தீவிர சிகிச்சை அளிக்–கப்–பட்டு வரு–கிறது. இது–கு–றித்து கெங்–க–வல்லி போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கி–றார்–கள்.

    • இளம்பெண்-மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்

    விருதுநகர்

    விருதுநகர் சின்னவாடியூரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சவுந்தரலட்சுமி(23). சம்பவத்தன்று ஆடு மேய்ச்சல் தொடர்பாக மகளை பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சவுந்தரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரலட்சுமி இறந்தார். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள செங்மடை கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(72). இவரது மகன் ஜெயபாண்டி வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயும், மகனும் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அழகம்மாள் விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மகள் நாகஜோதி கொடுத்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திர விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமரேசன் (51).இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் அவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் வாங்கி, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரே சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    பவானி

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.

    இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மங்காட்டுவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டயாலிஸ் செய்துவந்தார் இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். இதை அவரது இளைய மகன் பார்த்து உடனே ஆற்றூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு 2 நாள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மூத்தமகன் ஷாஜி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகரை பெற்றுக்கொண்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
    • அதேபகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    வெள்ளகோவில்,ஜன.19-

    வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரில் விஷம் கலந்துள்ளதாக வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    இந்நிலையில் கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனா்.

    • கனகம்மாளை அவரது மகள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
    • விஷம் குடித்த கனகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி கனகம்மாள்(வயது 63). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் மயக்கநிலையில் கிடந்தார். உடனே அவரது மகள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கனகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகம்மாளுக்கு பார்வை குறைபாடு காரணமாக சிகிச்சை அளித்ததில் அவருக்கு சரிவர குணமாகவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.
    • இவர் பெற்றோர் அறிவுரை கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பருத்தி கோட்டை விளை காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.

    இவரை பெற்றோர் அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜின் பிரகாஷ் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தாய் மேரி விஜிலா இதை பார்த்து அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை விஜின் பிரகாஷ் உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக தாய் மேரி விஜிலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×