என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள்"
- ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.
- தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.
புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:
ஊழியர்களின் ஓய்வு காரணமாக ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தக் கொள்கையும் இல்லை.
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.
தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.
மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறித்த விஷயம் மாநிலப் பட்டியலில் வருவதால், அத்தகைய தரவு எதுவும் அரசாங்கத்தில் மையமாகப் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.
- இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.
- சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பாக தஞ்சை ஆற்றுப்பாலத்தில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அதேபோல் தஞ்சை மேம்பாலம், ரயிலடியில் உள்ள கீழ்பாலம், மேரிஸ் கார்னரில் உள்ள மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.
மேலும் இதே போல் சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி, மாநகராட்சி துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
- வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.
இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
- ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.
இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
- நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்கள் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இந்த தற்காலிக விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகையின்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நிர்வகிக்கப்படும் குடிநீர் வழங்கும் பணிக்கும் ஊழியர்கள் வராததால் அந்த பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.
நாளையும் போராட்டம் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். அரசு ஊழியர்களின் இந்த நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.
- சேலத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் இன்று முதல் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
- வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சேலம்:
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
- மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிப்பு.
- ஏற்கனவே, பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட சாலைகளிலும், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும், கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு ரூ 500 சன்மானமாக வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளரிடமிருந்து ரூ17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மாடுகளால் ஏற்படும் விபத்திற்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை 37 மாடுகள் பிடிபட்டது. இதில் 28 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அழைத்துச் சென்றனர். மீதமுள்ள 9 மாடுகள் தற்போது நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
- மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மாநகராட்சி அனைத்துபிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் ஆகியவை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதற்கு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், வருவாய் உதவியாளர் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி செல்வமணி, துப்புரவுபணி மேற்பார்வையாளர் சங்க நிர்வாகி கலியபெருமாள், மருந்தாளுனர் சங்க நிர்வாகி இளந்தமிழன், துப்புரவு பணியாளர் சங்க மநில தலைவர் ராமன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஜெய்ராஜ் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்: 152-ன்படி இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் அவுட் "சோர்சிங் மூலம் இனி வரும் காலங்களில் நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி நிறைவு செய்து பேசினார். முடிவில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகி மூர்த்தி நன்றி கூறினார்.
- சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.
- 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஊர்வலம் சென்றனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். காய்கறி, உணவூட்ட செலவினத்தை அந்தந்த மாதத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
- பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.
பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,
அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள் நோயாளிகளாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி
ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.
இது குறித்து துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், எங்களுக்கு முறையான சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றனர்.