search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
    • ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.

    இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.
    • சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பாக தஞ்சை ஆற்றுப்பாலத்தில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    அதேபோல் தஞ்சை மேம்பாலம், ரயிலடியில் உள்ள கீழ்பாலம், மேரிஸ் கார்னரில் உள்ள மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.

    மேலும் இதே போல் சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி, மாநகராட்சி துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியா ற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தன்னி ச்சையாக அறிவித்துள்ளதை ஏற்று கொள்ள முடியாது.

    ஏ. ஐ. டி .யூ .சி. சம்மேளனம் சார்பில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாகபோனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    எனவே உடனடி யாக அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி 25 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட வேண்டும்.

    அதேபோல அரசின் நலத்திட்டங்களையும், அரசிற்கு வருவாய் ஈட்டி வருகின்ற நுகர்பொருள் வாணிப கழகம், டாஸ்மாக், ஆவின் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தெரிவித்து உள்ளார்.

    • சுங்கச்சாவடியில் ஆட்குறை–ப்பு நடவடிக்கை–க்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது.

    பெரம்பலூர்,

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை மற்றும் உளுந்தூர் பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள், இரண்டு சுங்கச்சாவடிகளிலம் தற்போது என்ன நிலவரம் உள்ளதோ அதன்படியே வாகனங்கள் சென்று வர வேண்டும். நிர்வாகம் புதிய ஆட்களை பணியமர்த்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் அமைதி வழியிலேயே போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ரெயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    சேலம்:

    ரெயில்வே துறையை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ெரயில் நிலையங்களையும், விரைவு ரெயில்களையும் தனியார் மயக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது.
    • இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    சேலம்:

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேசன் கடை பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரேசன் கடை, அங்கன்வாடி பணிக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த தேர்வில் லஞ்சம், முறைகேடு ஆகியவை விளையாடியது. இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் ரேசன் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையினால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க அமைப்புகள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தன.

    இதையடுத்து ரேசன் கடைகளில் காலியாக உள்ள ஊழியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி வருகிற நவம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்களை செய்து அரசாைண வெளியிடப்பட்டுள்ளன.

    இப்பணிகளுக்கு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. அதன் பிறகு நேர்முகத்தேர்வு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 2-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை வெளி நபா்களுக்கு வழங்குதலைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் மின்வாரிய அலுவலகங்களில் புதிய ஊழியா்கள் நியமனம் அந்தந்த அலுவலகம் தரப்பிலே நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது அரசு ஒப்புதல் அளித்த பின்னர் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த உத்தரவை ரத்து செய்யக்கோருதல் மற்றும் துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை வெளி நபா்களுக்கு வழங்குதலைக் கைவிட வேண்டும். முத்தரப்பு பேச்சுவாா்த்தை ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

    கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் குருவேல் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் காசிநாதன், பொறி யாளா்கள் சங்கத் தலைவா் கங்காதரன், செயலாளர் மலைச்சாமி, ஐக்கியப் பொறியாளா்கள் சங்கச் செயலாளர் ரவி, மாநிலச் செயலாளர் சாமியய்யா உள்பட மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
    • பி.பி- 2 ஐ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பி.பி- 2 ஐ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    கணக்காளர் களத்தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மாநில துணைத்தலைவர் சந்திரகுமார் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மின்வாரிய பொறியாளர் சங்கம் வட்ட செயலாளர் சுமன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் புஷ்பராஜ், சிவகர்ராஜ், ராஜா, மாரியப்பன் உள்பட ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸ் மற்றும் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மருத்துவ முகாமை தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்தார். ரெயில்வே அஞ்சலக மெயில் சர்வீஸ் ஆவணக்காப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கேன்சர் சென்டர் நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் இருதய பாதிப்பு , மூளை தண்டு வட பாதிப்பு, மார்பு நோய், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்தார்.

    இந்த முகாமில் தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் முனியசாமி , டீனா, அனுசுயா, ஜீவானந்தம், மணிவண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    • இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தனியார் கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தினரிடம் ஊழியர்கள் சம்பளம் கேட்டு வந்துள்ளனர். பல முறை கேட்டும் சம்பளம் வழங்கப்படாதால் நடவடிக்கை எடுக்க வேண்டி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கட்டுமான நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படாததால் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டோர் கட்டுமான அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டுமான நிறுவனத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×