search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223651"

    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை
    • விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் இன்று ஏராளமானோர் புனித நீராட குவிந்திருந்தனர்.

    அந்த பகுதியில் காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கரை ஒதுங்கினார். இது குறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு இறந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்த லெட்சு மணன் (வயது 61) என்பதும், வெள்ளமடம் பகுதி யில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் இன்று அதிகாலை தை அமாவாசையையொட்டி புனித நீராடுவதற்காக கன்னியாகுமரிக்கு சென்றார்.

    பின்னர் அவர் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கடலில் முழ்கி பலியாகி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    • தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
    • மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதனால் அந்த பகுதியே குதுகலமானது.

    பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

    இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.
    • வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

    கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

    பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
    • சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோமாக எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மனைவி கண் எதிரே பரிதாபம்
    • கன்னியா குமரி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

    இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார் வையிட்டனர்.

    அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியி ல் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்துஉள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

    இதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கன்னியா குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார்அங்குவிரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
    • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

    இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

    முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

    ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

    • பைக் ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயா ராகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங் களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் புத்தாண்டு கொண் டாட்டங்கள் ஓட்டல்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நாகர்கோவிலில் உள்ள ஓட்டல்களிலும் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள லெமூர்பீச், சங்குதுறை , கன்னியாகுமரி பீச், முட்டம் பீச், சொத்த விளை பீச், மேலும் பீச்சில் உள்ள பூங்காக்கள், முட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகங்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.

    இன்று இரவு பொது மக்களுக்கோ போக்கு வரத்துகோ இடையுறு ஏற்ப டும் படி சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாடத்தின்போது இளைஞர்களால் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்ப டாத வண்ணம் இளை ஞர்களின் பெற்றோர் உறுதி செய்யவேண்டும். புத்தாண்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்கு களையும் பறிமுதல் செய் யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்' செய்வது, அஜாக்கிரதையாகவும், அதி வேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்தி விட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல் களை அருகிலுள்ள ேபாலீஸ் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் அனை வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்ற வர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சி யான முறையில் புத்தாண்டி னை கொண்டாடவும், பொது மக்கள் அனை வருக்கும் மாவட்ட போலீஸ் துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    • ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர் விழுந்து தத்தளித்து மாயமானார்.
    • மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், இவருக்கு சொந்தமான படகில் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன்,பெருமாள், சூரியமூர்த்தி ஆகியோருடன் கடந்த 27-ம் தேதி காலை கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர்.

    இதனை அறிந்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் விபத்துக்குள்ளான பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது .

    இதனை அறிந்த மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் உடலை கைப்பற்றி போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த பெருமாளுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • துறைமுகம் வெறிச்சோடியது
    • புயல், மழை எச்சரிக்கை எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல் மழை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி அவ்வப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது.

    மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவந்தனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதள மாகக்கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த3மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரை யோரமாக நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது.

    இதேபோல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம் கீழம ணக்குடி, மணக்குடி, பள்ளம் ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரை கிராமங்களிலும் பெரும்பா லான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

     நாகப்பட்டினம்:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

    இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர்.

    இதனால் இன்று நாகை, அக்கரைபேட்மாடை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    700 விசைப்–படகுகள், 3000 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் பேசும் போது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களை மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய எம்.பி. விஜய் வசந்த் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நிரந்தரமாக கடல் சுவர் எழுப்ப வேண் டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்டு வருவ தற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப் டர் இறங்குதளம் மற்றும் அதிவேக படகுகள் ஆகியவற்றை கொண்ட கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தை அமைத்து குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
    • ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த ௪-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்க ப்பட்டது. மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    ×