search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
    • ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழுத்தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.


    கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2ஆயிரத்து 791 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.11 -க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.‌24.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 544 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    • உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம்.
    • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது.

    பல்லடம் :

    இன்றைய சூழலில் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை கடந்து எப்பாடுபட்டாவது மகசூல் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இருப்பினும் சில விவசாயிகள் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சாகுபடி செய்கின்றனர். இதற்காக தடைக்கற்களை உடைத்தெறிந்து தங்கள் இலக்கை அடைகின்றனர். அவ்வாறு பல்லடத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனையை துவக்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம். அதிகாலை நேரம் என்பதாலும் இதர காய்கறியுடன் விற்பனை செய்வதாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது. எனவே இயற்கை காய்கறிகளை விரும்பும் மக்களுக்கு அவை முறையாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து பிரத்யேகமான இயற்கை காய்கறி விற்பனை அங்காடி திறக்கவும் திட்டமிட்டு துவக்கியுள்ளோம். பனப்பாளையத்தில், சிவன் காய்கறி அங்காடி என்ற பெயரில் ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று மாலை 3மணி முதல் 6மணி வரை இயங்கி வருகிறது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    இயற்கை காய்கறி விற்பனை செய்ய, விவசாயிகள் அங்காடி தேடி வருவதாக தகவல் கிடைத்ததும், தங்களுக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தாமாக முன்வந்து அளித்துள்ளார் கண் தான அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜன்.அவர் கூறுகையில், எவ்வளவோ சிரமத்துக்கு இடையே, இயற்கை விவசாயம் செய்கின்றனர். இதை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும்.இது இயற்கை விவசாயிகளுக்கு செய்த உதவியாக கருதுகிறேன் என்றார்.

    • பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.
    • பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.

    தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் ராமச்சந்திரன் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர், நான்கு ரோடு, சிவா தியேட்டர் கார்னர், பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த பிச்சைபாண்டி மகன் சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பரமத்தி வேலூர் அருகே எல்லை மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த கீழ பாலபட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்ப வரது மகன் நிஷாந்த்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
    • தொழில்துறையினர், விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.

    திருப்பூர் :

    தென்னை விவசாயிகள் வளர்ச்சி பெறவும், மக்களுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்கவும் பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ஏராளமான தொழில்துறையினர், விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானத்துக்கு தென்னீரா பெயரிட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விற்பனையை அதிகரிக்க செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.இதற்கான முயற்சியாக. சென்னை, கோவையில் நடக்கும் பொருட்காட்சி, கண்காட்சி ஆகியவற்றிலும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 5 ஆயிரம் பேக்குகள் விற்பனையாகி வருகின்றன. தமிழகத்தில், 50 ஆயிரம் பேக்குகள் தினசரி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றி வருகிறோம். எதிர்வரும் நாட்களில் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தென்னீரா விற்பனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • குமாரபாளையம் நகரில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மையங்கள் அதிகம் உள்ளன.
    • தற்போது கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சிலை வாங்க வரும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகரில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மையங்கள் அதிகம் உள்ளன. தற்போது கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சிலை வாங்க வரும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது பற்றி சிலை தயாரிக்கும் வியாபாரிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இந்த ஓரிரு நாட்கள் தான் வியாபாரம் நடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையால் சிலை விற்பனையை பெரிதும் பாதித்து வருகிறது. ஓரிரு நாட்கள் மழை இல்லாமல் இருந்தால் சிலை வியாபாரம் நன்றாக இருக்கும் என்றனர்.

    • ஏலத்திற்கு 1825 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பதியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு 1825 மூட்டைபருத்தி வந்திருந்தது.

    இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ.12,019 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.56.70 லட்சம். அடுத்த வாரம் புதன்கிழமை ஆயுதபூஜை என்பதால் ஒருநாள் முன்னதாக 30ந்தேதி ( செவ்வாய்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறும் சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 59.45 லட்சத்துக்கு விற்பனைஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.93 1/2குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 554தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.50-க்கும், குறைந்த விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.23.70-க்கும் என ரூ.1 லட்சத்து 36ஆயிரத்து 86-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 560.96 1/2குவிண்டால் எடை கொண்ட 1164 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ80.70-க்கும், குறைந்த விலையாக ரூ75.99-க்கும் சராசரி விலையாக ரூ79.79-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.76.69-க்கும், குறைந்த விலையாக ரூ.60.29-க்கும், சராசரி விலையாக ரூ.73.39-க்கும் என ரூ.42லட்சத்து 8ஆயிரத்து 556-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 240.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் ரூ. 1 கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .80-க்கும், குறைந்த விலையாக ரூ.63 .29-க்கும் சராசரி விலையாக 68 .20 -க்கும்என ரூ.16 லட்சத்து 646-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.59 லட்சத்து45ஆயிரத்து288-க்கு விற்பனை ஆனது.

    • ஓட்டல்களில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் மதுரையில் அதிகரிக்கும் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • சென்னை, கோவை உள்ளி–ட்ட பெருநகரங்களில் அடிக்கடி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மதுரை

    இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டு உணவுகளை தவிர்த்து ஓட்டலில் சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் புற்றீசல்கள் ேபால் ஓட்டல்கள் வீதிக்கு வீதி முளைத்துள்ளன. மேலும் சைனீஸ், தாய்லாந்து உள்பட வெளிநாட்டு உணவு வகைகளும் தற்போது பிரபலமாகி வருகிறது. மதுரையிலும் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதை தவிர்த்து சாலையோர ைகயேந்திபவன் உணவகமும் அதிகளவில் உள்ளது. மேலும் வடை, பானிபூரி போன்ற துரித உணவு கடைகளும் உள்ளன. கடைகள் அதிகரித்து வரும் நிலையில் தரமான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    குறிப்பாக அசைவ ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகள், 2, 3 நாட்கள் பயன்படுத்தும் சால்னா போன்றவை மக்களுக்கு விநியோகிக்கப்டுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புரோட்டாவிற்கு தரமற்ற எண்ணையை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து தெப்ப–க்குளம் பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராமையா பாண்டியன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 கிலோ கெட்டுப்போன பழங்கள், 25 கிலோ கெட்டுப்ேபான இறைச்சி, 23 கிலோ பழைய புரோட்டா, தரமற்ற 10 லிட்டர் குழம்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.

    தெப்பக்குளம் மட்டுமின்றி நகரில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அசைவ, சைவ ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்க்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் தெருக்களில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி உள்ள பகுதியில் கடை அமைத்து உணவு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    உணவு பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்த வரும் நிலையில் அதற்கேற்ப வகையில் தரமான உணவு பொருட்கள் வழங்கவேண்டும். ஆனால் 75 சதவீத ஓட்டல்களில் ஏதேனும் வகையில் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மதுரையில் பல மாதங்களுக்கு பின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

    இந்த சோதனையை மாதந்தோறும் நடத்தினால் பொதுமக்களுக்கு தரமான உணவுகள் கிடைக்க வழிவகை ஏற்படும். சென்னை, கோவை உள்ளி–ட்ட பெருநகரங்களில் அடிக்கடி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் விற்பனைக்கு வந்த வண்ணமய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் 50ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    • இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    இந்துக்களின் முக்கிய பண்டி கையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாட ப்படுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் அனுமதிக்கப்பட்டு ள்ளதால் விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக மதுரையில் மாட்டுத்தாவணி, திருப்பரங்குன்றம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாட்டுத்தாவணி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வண்ணமயமான விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    இந்த சிலைகள் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50,ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளும் தயார் செய்யப்படுகிறது. மேலும் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு ஆர்டர் செய்தால் சிலைகளை தயார் செய்து கொடுப்பதாகவும் கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆர்டர்களும் தற்போது அதிகமாக வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு சிங்கம், மான், மயில் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.இந்த ஆண்டு சதுர்த்தி விழாவை ஒட்டி 3 நாட்கள் வழிபாடு செய்து பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தேவையான ஏற்பாடுகளையும், மதுரை மாவட்டத்தில் அதற்குரிய இடங்களையும் போலீசார் தீவிரமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் இந்து அமைப்பு கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை பல்வேறு நிபந்தனைகளை அடிப்படையில் அனுமதிக்க வும் முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது
    • 1 அடி முதல் 15 அடி வரை பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து, கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில்,ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.

    கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர், காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று கூறினார்.

    • தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு லைன்மேடு, வேலு புதுத் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஜபர்லால் (வயது 19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
    • 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 74 மாடுகள் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.73 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப்பசு விற்பனையானது.

    ×