search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    விசேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் தேவை அதிகரிக்கும் நிலையில் பூக்கள் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம்.

    அதிலும் பனிப்பொழிவு, மழை மற்றும் பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் பூக்கள் விலை அதிக அளவு உயரும்.

    இந்த நிலையில் இன்று முருகர் சுவாமிக்கு உகந்த தைப்பூச நாள் என்பதால் பூக்களின் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இன்று பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது.

    அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.400, அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது. இந்த பூக்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.

    நாளையில் இருந்து பூக்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

    • போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
    • மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.
    • சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.

     அவினாசி:

    சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சேவூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான மோ்வின் (வயது 40) என்பவரை கைது செய்தனா். இதே போல சேவூா் கைகாட்டி பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.

    • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

    கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.

    மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.

    இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள்.
    • கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 14 மனுக்களை பெற்றார். அதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்கள்.

    காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581) மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் குற்றபதிவேடு கூடம் துணை சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கேன்னடி. மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் உப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
    • பொங்கல் தினத்தன்று உப்பு வாங்கி சாமிக்கு வைத்து பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் உப்பு விற்பனை ஜோராக நடைபெற்றது.

    அன்னதானப்பட்டி,

     தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை மளிகைக் கடையில் வாங்கி வந்து, அவற்றை கோவில்களில் சாமிக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

    தொடர்ந்து அவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வங்கள், பணம் பெருகும் என்பது மரபு வழி ஐதீகம் ஆகும். இதனால் நேற்று முன்தினம் சூரியப் பொங்கல் , நேற்று மாட்டுப்பொங்கல், இன்று கரி நாள் ஆகிய தினங்களில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மளிகைக் கடைகளில் உப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சாலையோரங்களிலும் தற்காலிக உப்பு கடைகள் அதிகளவில் முளைத்து இருந்தன. சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகளில் உப்பு வாங்க பெண்கள் கூட்டம், கூட்டமாக அதிகளவில் குவித்தனர்.

    • கிழங்குகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகம்
    • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியினருக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது ஐதீகம். அதன்படி குமரி மாவட்டத்தில் புதுமணத் தம்பதியினருக்கு சீர்வரிசை பொருள்களை பெற்றோர் வழங்கி வருகிறார்கள். சீர்வரிசை பொருள்களாக பொங்கல் பானை,கரும்பு புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கடை வீதிகளில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான பானைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். வட சேரி மார்க்கெட் அப்டா மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் கிழங்கு வகை களின் விலையும் அதிகமாக இருந்தது.

    கட்டபொம்மன் சந்திப்பு வடசேரி பகுதிகளில் சாலையோரங்களில் கிழங்கு வகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது.மேலும் பொங்கல் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பனை ஓலைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் குலைகள், கிழங்கு வகைகளையும் பொது மக்கள் வாங்கி சென்றனர்.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மார்த்தாண்டம் தக்கலை இரணியல் அஞ்சு கிராமம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. துணிக்கடைகளில் புத்தா டைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

    நாளை 15-ந் தேதி காலையில் வீடுகள் முன்பும் கோவில்கள் முன்பும் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்ய உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் ஆகும். 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.எனவே சுற்றுலா தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, சொத்த விளை குளச்சல் வட்டக் கோட்டை பீச் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திற்பரப்பு அருவியிலும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தூர் தொட்டில் பாலம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

    • மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.
    • கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    அந்தியூர்:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஈரோடு மாவட்ட த்தில் பொங்கல் வைக்க ேதவையான பானை மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண பொடிகள், வண்ண கயிறுகள் விற்பனை அதி கரித்து வருகிறது.

    மேலும் கிராம பகுதி களில் சந்தை மற்றும் கடை வீதிகளில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனை அதி களவில் நடந்து வருகிறது.

    இதே போல் அந்தியூர் பகுதிக்கு சுற்று வட்டார பகுதிகளான தவிட்டு ப்பாளையம், வெள்ளை யம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், காட்டூர், பச்சாபாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், மூல க்கடை, செல்லம் பாளையம், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து பானை மற்றும் மளிகை பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் பொங்கல் வைப்பதற்கு தேவையான மண் பானைகள், கரும்பு களை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். இதனால் அந்தியூர் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாட்டுப் பொங்கல் அன்று விவ சாயிகள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கொம்புகளுக்கு வண்ண கயிறுகளை கட்டி மாடுகளுக்கு பூஜை செய்வார்கள்.

    மேலும் அந்தியூர் பகுதியில் மாடுகள் எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்க மாடுகள் போன்று மண்ணினால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை வாங்கியும் தங்கள் குல தெய்வங்கள் முன் வைத்து பூஜை செய்து மாடுகளுக்கு, படைத்த உணவுகளை கொடுப்பது வழக்கம்.

    இதனால் அந்தியூர் பாலம் அருகே மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.

    இந்த பானைகள் ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் மாடுகள்உருவ பொம்மைகள் சிறியது 100 ரூபாய் முதல் பெரியது 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    • காய்கறிகள் விலை கடும் உயர்வு
    • கத்திரிக்காய் கிலோ ரூ.110-க்கு விற்பனை

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள்குலை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓசூர், மேட்டுப்பாளையம், பெங்களூரு, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தற்பொழுது காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் ரூ.35-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.96-க்கு விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் கத்திரிக்காய் விலை ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. வரிக்கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் விலை கடந்த 2 நாட்களாக ரூ.50 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. தடியங்காய், வெள்ளரிக்காய்களின் வரத்து அடியோடு குறைந்ததையடுத்து விலை உயர்ந்துள்ளது.

    தடியங்காய் கிலோ ரூ.36 வெள்ளரிக்காய் ரூ.56-க்கு விற்கப்பட்டது. முருங்கைக்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்கப்பட்டது. பல்லாரி ரூ.36, இஞ்சி ரூ.76, சேனை ரூ. 46, வழுதலங்காய் ரூ.56, பச்சை மிளகாய் ரூ.70, கேரட் ரூ.66, முட்டைகோஸ் ரூ.36, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.56, உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் ரூ.70-க்கு விற்கப்பட்டது.தக்காளி விலையை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரு கிேலா ரூ.33-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் , வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறி விலை உயர்ந்திருக்கும். அதேபோல் இந்த ஆண்டும் காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.காய்கறி வரத்து குறைவே இதற்கு காரணமாகும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இருந்து வெள்ளரிக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.தற்பொழுது விவசாயிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து உள்ளூர் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது என்றார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை விற்பனை செய்தனர்.

    பூதலூர்:

    பொங்கல் பண்டி கையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி பாசன பகுதிகளில் ஏராளமான பரப்பில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.

    பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக அரசு கொள்முதல் செய்தது போக எஞ்சியுள்ள கரும்புகளை விவசாயிகள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் தங்கள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள வாழ ஏலமையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று திருக்காட்டுப்பள்ளி வாழை ஏலமையத்திற்கு ஏராளமான பூவன், ரஸ்தாலி தார்கள் வந்திருந்தன.

    பச்சைநாடன் சற்று குறைவாகவே வந்திருந்தது.

    விற்பனைக்கு வந்து இருந்த தார்கள்விவசாயிகளுக்கு கட்டுப்படியான அளவிலேயே ஏலம் போனதாக தெரிவித்தார்.

    அதேபோல மஞ்சள் கொத்து விற்பனையும் செங்கரும்பு விற்பனையும் மெதுவாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, மற்றும் வாழை விற்பனை முழு வீட்டில் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
    • சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.

    சேலம்:

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் கொண்டாட்டம்

    அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி மேலே வரும்போது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்வார்கள். பொங்கல், கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பழங்களைக் கொண்டு இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.

    இதையொட்டி, சேலத்தில் கரும்பு, மஞ்சள், பூைஜ பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. அதுபோல் ஜவுளி நிறுவனங்களில் புது துணி எடுக்க பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

    கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.

    ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். சிறு, சிறு ஜவுளி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், லீ பஜார், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.

    தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைத்து விற்பனைக்கு மஞ்சள் குலைகள், கரும்புகள் குவித்து வைத்துள்ளனர். தினசரி சந்தைகள், வாழை பழங்கள் விற்பனை கடைகளும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர்.

    மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்

    16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்ப னைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ளவலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

    இவர்கள் பெரும்பாலும் அயோத்தி யாப்பட்ட ணத்திற்கு வந்து தங்கள் கால்ந டைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்க யிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    • சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள பெரிய புடலங்காய்.
    • 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 3 அடி வரை நீளமுள்ள உள்ள புடலங்காய் விற்பனைக்கு வருவது வழக்கமாகும்.இந்த நிலையில் உழவர் சந்தைக்கு இன்று 6 அடி நீளமுள்ள பெரிய

    புடலங்காய் விற்ப னைக்கு வந்தது. சேலம்

    மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வள்ளி ( வயது 60) என்பவரின் தோட்டத்தில் இந்த புடலங்காய்கள் விளைந்துள்ளது.

    இப்போது விற்ப னைக்கு வந்துள்ள புட லங்காய்கள் நாட்டு ரக பச்சை வரி புடலங்காய்கள் ஆகும். பந்தலில் விளைவித்த புடலங்காய்கள் என்பதால் இவை வழக்கமான புடலங்காய்களை விட நீளமான அளவில் உள்ளது. மேலும் இவற்றின் சுவை மற்ற ரகங்களை விட நன்றாகவே இருக்கும். 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவை வழக்கமான புடலங்காய்களை காட்டிலும் நீளமாக, பெரிய அளவில் இருப்பதால் இந்த புடலங்காய்களை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை சீசன் காரணமாக இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும். என உழவர் சந்தை வேளாண் அலுவலர் மகேந்திரன் தகவல் தெரிவித்தார்.

    ×