search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வருவாய்துறையினர் தடை விதித்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.
    • மேலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் கன மழை பெய்து வருவதன் காரணமாக அங்கு உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வருவாய்துறையினர் தடை விதித்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    அதன்படி, பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன்எளம் பள்ளி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் தடுப்பணை, ஜேடர்பா ளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிபாளையம் பரிசல் துறை, ஆனங்கூர், அய்யம்பாளையம் பரிசல்துறை, பிலிக்கல் பாளையம் பரிசல் துறை, கொந்தளம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி வேலூர், பாலப்பட்டி, மோகனூர் வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள், ஆடு, மாடுகளை காவிரி ஆற்றில் குளிப்பாட்டவும், மீன் பிடிக்கவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பரமத்தி வேலூர் தாசில்தார் சிவகுமார் மற்றும் மோகனூர் தாசில்தார் ஜானகி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் காவிரி கரை யோரம் குடி இருக்கும் பொது மக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றும், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் தெரிவித்துள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் பரமத்தி வேலூர் வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கையைெயாட்டி தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 13-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 13 -ந் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனா பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and Children (Regulation) Act 2014-ன் கீழ் பதிவு செய்ய தெரிவிக்கப் பட்டுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35-36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண் : 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பிரிவு 12ன் உட்பிரிவு 1, 2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட பிரிவுகள் 5, 6 மற்றும் 12-ன் கீழ் எந்த விதிகளுக்கும் இணங்க தவறிய எந்த ஒரு நபரும் வழக்கில் தண்டிக்கப்படுவார். முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம்அபராதமும், இரண்டாவது அல்லது அதை தொடர்ந்து குற்றமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் .

    அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and children (Regulation) Act 2014-ன் கீழ் 30.9.2022க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

    சீர்காழி :

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 79 வருவாய் கிராமங்களும் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளது.

    இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகர் பகுதியில் சார்ந்து உள்ளனர்.

    இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டுக்களில் தொங்கி கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது.

    இந்நிலையில் சீர்காழி டி.எஸ்.பி. (பொ) ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் புதியபேருந்து நிலையம் பகுதியில் பள்ளி நேரங்களில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்தனர்.

    அப்போது நகர பஸ்களில் தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

    இடம் இல்லாமல் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை அந்த பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு அடுத்து வரும் பஸ்களில் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்தலாம் என்றும் கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகர் பொது மக்களின் தேவைக்காக குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாலை வசதி, கழிவுநீர் சுத்தகரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கீழக்கரை நகராட்சி மேற்கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டு முடிவடைய குறுகிய காலங்களே உள்ள நிலையில் இதுவரை சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றப்படுவதற்கான கட்டணங்கள் ஆகியவைக்கான மொத்த கேட்பு தொகை ரூ.3 கோடியே 39 லட்சத்து 37ஆயிரம். அதில் இதுவரை 45 லட்சத்து 3 ஆயிரம் மட்டுமே வசூ லிக்கப்பட்டுள்ளது.

    சிலர் செலுத்த வேண்டிய வரியினங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தங்களது வரி இனங்களை வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலோ அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ நிலுவையின்றி தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • தமிழக அரசு உத் தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாகும்
    • காவல்துறை மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படாது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு குறித்து துறை அலு வலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

    தமிழக அரசு உத் தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாகும். எனவே, அரசுபணியாளர் கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது ஹெல்மட் அணி யாமலும், மூன்று நபர்கள் பயணிக்கும் பணியாளர் களுக்கும், பொதுமக்களுக் கும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குவதால் பெரும் பாலான சாலை விபத் துகள் ஏற்படுவதாகவும், விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஹெல்மட் அணிவதன் மூலம் தனது உயிருக்கு மட்டுமல்லாது தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பான சூழ்நி லையை உருவாக்குவதில் பொதுமக்களுக்கு முன்மா திரியாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கடந்த மாதம் மாவட் டத்தில் நடைபெற்ற விபத் துகள் அதற்கான காரணம், அதனை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித் தும் வட்டார போக்குவ ரத்து அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்களிடையே விவாதிக் கப்பட்டதோடு, சாலை விபத்து அதிகமாக ஏற்படும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கவும், பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் காவல்துறை மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்ப டாது எனவும், ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை வைக்கவும் வேகத் தடை மற்றும் சாலையின் நடுப்பகுதியில் வெள்ளைக் கோடு ஏற்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர் மேல் மங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி. நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம் உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப் பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

    இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

    • 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றங்கரைேயார மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைகை ஆற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம்.

    மதுரை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 71 அடி உயர வைகை அணையில் 70 அடி என்ற அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. வைகை ஆற்றுக்கு உபரியாக வரும் தண்ணீர், அப்படியே ஆற்றுக்குள் திறந்து விடப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில், வைகை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பருவமழை படிப்படியாக குறைய தொடங்கியது. வைகை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி அடியாக குறைந்தது.

    இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வைகை அணை ஏற்கனவே 70 அடியை தொட்டுவிட்டதால், பெருமளவில் உபரி நீரை திறந்து விடுவது என்று பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் கவனம், பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைகை ஆற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

    கரூர்:

    கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ளநீர் 1.60 லட்சத்திற்கு (கனஅடி) மேல் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1.60 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல், காவிரி ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் இருக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது."

    • காரைக்காலில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மீன்வளத் துறையில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல் பட்டால், சட்டரீதி யான நடவ டிக்கை பாயும். என, மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டி யன், இது குறித்து வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத் தில்உள்ளஇறால் வளர்ப்புபண்ணை உரி மையாளர்கள் தங்கள் இறால் பண்ணைகளை பதிவு செய்யவும், பதிவை புதுப்பித்து கொள்ளவும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் எளி மைபடுத்தியுள்ளது. ௨ ஹெக்டேருக்கு மேல் அளவுள்ள இறால் பண்ணை களை, மாவட்ட அளவிலான குழ பரிந்துரை செய்து மாநில குழுவிற்க்கு அனுப்பி, பிறகு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு பதிவு செய்ய அனுப்புவது என்ற நடைமுறையை எளிமை யாக்கி உள்ளது. தற்போது அந்தந்த மாவட்டங்களிலே விண்ணப்பித்து அதற்கென உள்ள குழு மூலம் பரிந்துரை செய்து நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப் பட்டுள்ளது.

    மேலும், 2 மாதத்திற்குள் பதிவு தேதி முடிய உள்ள பதிவுகளை புதுப்பித்து கொள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் கட லோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு, நேரிடையாகவே உரிய ஆவணங்களுடன் அனுப்பி பதிவை புதுப்பித்து கொ ள்ளலாம். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத இறால் பண்ணைகள் செயல்பட அனுமதியில்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத இறால் வளர்ப்பு பண்ணை கள் இறால் வளர்ப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டால் தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிகை பாயும் என்பதை காரைக்கால் மீன் வளத்துறை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாலை முதல் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் குமாரபாளை யம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே ஏறிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூருகையில், காவிரியில் அதிக நீர் வந்து கொண்டி ருப்பதால் கலெக்டரின் உத்தரவின் பேரில், கரை யோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம். மேலும் தங்குவதற்கு தேவை யான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.

    மேலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மேலும் நாளை(3-ந் தேதி)யும் இதுபோல் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

    இந்த சூழலில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை மையம், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது குறிப்பிட த்தக்கது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை(3-ந் தேதி)யும் இதுபோல் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும் இந்த நாட்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தடைக் காலம் முடிந்து நேற்று குளச்சல் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலத்த காற்று காரணமாக உடனடியாக கரை திரும்பி விட்டனர்.

    ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்தமோகன் ஆகியோர் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தீயணைப்பு படையினர் உரிய பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் அரக்கோணத்தில் இருந்து 2 கம்பெனி பேரிடர் மீட்பு குழுவினரும் குமரி மாவட்டம் வந்தனர். இந்த குழுவில் இருந்த 40 வீரர்களும் உடனடியாக வெள்ளம் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் கிள்ளியூர், விளவங்கோடு தாலுகாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் பாது காப்பு நடவடிக்கையாக கடலோரம் மற்றும் நீரோடை பகுதி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு மாற்ற ப்பட்டுள்ளனர்.

    குமரி மாவட்ட தீய ணைப்பு அதிகாரி தென்னரசு கூறுகையில், இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு படையினர் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்றார்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் வருகிற 4-ந்தேதி வரை இடி-மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் 2 மாவட்டங்களுக்கும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.வெள்ள பாதிப்புகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 04622-501012 என்ற தொலைபேசி எண்ணை கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் 04633-290548 என்ற எண்ணை அறிவித்துள்ளார்.

    நீர்நிலைகளின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

    ரெட் அலர்ட் அறிவிப்பையொட்டி 2 மாவட்டங்களிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். வருகிற 4-ந்தேதி வரையிலும் தீயணைப்பு துறையினர் விடுப்பு எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து மீட்பு, பாதுகாப்பு உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக சரிந்து காணப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 6.70 அடியாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2½ உயர்ந்துள்ளது.

    இன்று காலை அணை யின் நீர்மட்டம் 9.20 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் மழையும் பெய்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 71, பெருஞ்சாணி 61, சிற்றாறு-1 60.6, சிற்றாறு-2 60.,2 பூதப்பாண்டி 35.2, களியல் 71.4, கன்னிமார் 51.4, கொட்டாரம் 26.2, குழித்துறை 61, மயிலாடி 36.6, நாகர்கோவில் 43, புத்தன்அணை 59.4, சுருளோடு 44.6, தக்கலை 46.3, குளச்சல் 22.4, இரணியல் 37.4, பாலமோர் 70.2, மாம்பழத்துறை யாறு 76, திற்பரப்பு 58.6, ஆரல்வாய்மொழி 24, கோழி போர்விளை 7.8, அடையா மடை 73, குருந்தன்கோடு 29, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைக்கிடங்கு 74, முக்கடல் 37.2.

    ×