search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224170"

    • பொதுமக்கள் போராட்ட அறிவிப்பு
    • அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ளது லட்சுமிபுரம் சானல். பேச்சிப்பாறை அணை நீர் இந்த சானல் வழியாக லட்சுமிபுரம், கருமங்கூடல், நடுவூர்க்கரை, மண்டைக்காடு, உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட அணை நீர் உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி ஆகிய பகுதிகளுக்கு செல்லவில்லை. லட்சுமிபுரம் சானலில் குளச்சல் பிரிவு ஷட்டர் திறக்கப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து அப்பகுதிக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர்கள் டோமினிக் ததேயூஸ், ரூபன் பொன்மணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் லட்சுமிபுரம் சானல் சந்திப்பில் போராட்டம் நடத்த கூடினர்.

    இது குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து தண்ணீர் விட உத்தரவிட்டனர். இதையடுத்து சானல் ஊழியர் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து விட்டார். இதனால் செம்மண்குளம், உடையார்விளை, அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 சதவீத தள்ளுபடியில் விற்பனை
    • சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற நியூ ஜனதா புட்வேர்ஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் செயல் பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளு படி வழங்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேர்ஸ், தனது 3-வது புதிய ஷோரூமை குளச்சல் காந்தி ஜங்சன் அருகே அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவுக்கு வந்தவர்களை நிறுவன உரிமையாளர் கமல் நாசர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

    நியூ ஜனதா புட்வேர்சில் அனைத்து வகையான உயர்தர சப்பல்கள், ஷூக்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவி களுக்கான ஷூக்கள், ஷாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளு படியில் விற்பனை செய் யப்படுகிறது.

    மேலும், இங்கு மண மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சப்பல்களும், கால்வலி, மூட்டுவலி ஆர்த்தோ சப் பல்களும் கிடைக்கும்.

    விகேசி, வாக்கரூ, ஏரோ வாக், இந்துஸ், பாரகான், ஸ்மார்ஸ், நெக்ஸோ போன்ற கம்பெனி சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. இதுபோல் சில கம்பெனி பேன்சி சப்பல்க ளுக்கு தள்ளுபடி வழங்க ப்படுகிறது.

    எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பது உங்கள் வருகையே. புதிய ஷோரூமிலும் உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    • வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்
    • விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

    இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 20 விசைப்படகுகள் இன்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் திரும்பின. இதில் ஒரு படகில் திரட்சி எனப்படும் 4 ராட்சத திருக்கை மீன்சிக்கியது. அவை தலா 700 கிலோ எடை கொண்டதாக இருந்ததால் இந்த மீன்களை கரை சேர்க்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் 4 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.

    துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.வியாபாரிகள் இந்த மீனை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.

    மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.

    அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.

    என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.

    நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    • கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.
    • உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை வேளை களில் பொதுமக்கள் பொழுது போக்க மற்றும் காற்று வாங்க வந்து செல்வர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் அனுமதியின்றி இங்கு மது விற்பனை செய்யப்ப டுவதாக குளச்சல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே அங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலா ளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொரு ளாளர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • பங்குமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
    • திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை திருப்பலி மற்றும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7-ம் நாள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருச்சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு திருத்தலம் சென்றடைந்தது.பவனியின்போது பங்கு மக்கள் உள்பட திரளானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையின் புகழ்பாடி சென்றனர்.

    பவனியில் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், பங்குப்பணியாளர்கள் டைனிசியஸ்,ஜாண் வினோ, விஜின் பிரைட்,அருள் சகோதரிகள் மற்றும் பங்குநிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கோடிமுனை பங்குப்பணி யாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்குப்பணியாளர் ஜோசப் அருளுரை ஆற்றினார்.

    8 ம் நாள் (இன்று) காலை நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, 9-ம் நாள் காலை திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை, 10-ம் நாள் காலை திருவிழா முதல் திருப்பலி,8 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமையில் குழித்துறை மறை மாவட்ட தலைமை செய லர் பேரருள்பணி ரசல் ராஜ் அருளுரை ஆற்று கிறார். 10 மணிக்கு திருக் கொடியிறக்கம்,மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    • வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும்.
    • குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.

    கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டம் மாற்றம் காரணமாக வழக்கமாக கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால் இந்த நாட்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராம விசைப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் மீன் துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது.கரை திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 20 விசைப்படகு களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    நேற்று விசைப்படகுகளி லிருந்து இறக்கப்பட்ட மீன்களில் சூரை, வெளா மீன்கள் அதிகமாக இருந்தன.அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து கேட்டு வாங்கி சென்றனர்.நேற்று மீண்டும் மீன்வரத்து தொடங்கியதால் மீன்கள் வழக்கமான விலைக்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • நண்பர் கீழே விழுந்து படுகாயம்
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அபீஸ் (வயது 18). இவரது நண்பர் பெத்தேல்புரம் ஜோயல் (19). இவர்கள் 2 பேரும் கறிக்கோழி கடை யில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மதியம் 2 பேரும் செம்பொன் விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேற்கு நெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோயல் ஓட்டினார். பின்னால் அபீஸ் உட்கார்ந்திருந்தார்.

    வர்த்தான்விளை அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் தாறு மாறாக ஓடியது. மேலும் அதேவேகத்தில் சாலையோரம் உள்ள ஓடையில் பாய்ந்தது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. அப்பகுதியினர் விரைந்து வந்து அபீஸ் மற்றும் ஜோயலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அபீஸ் பரிதாபமாக இறந்தார்.

    ஜோயல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர்
    • காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    நாகர்கோவில்:

    குளச்சல் காவல் நிலையத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் ஏழை மூதாட்டி ஒருவர் வந்தார்.அவர் ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.இதை பார்த்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்பட்டார்.ஊர் மற்றும் பெயரை கேட்ட இன்ஸ்பெக்டரிடம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரம் என்றும், பெயர் சுப்புலக்ஷ்மி, வயது 57. கணவர் செங்கல் சூளை தொழிலாளி முத்துகிருஷ்ணன் என்றும் கூறினார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அப்போது சுப்புலக்ஷ்மி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போனார், கணவர் முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று புதுக்கோட்டை போலீசார் குளச்சல் இன்ஸ்பெக்டரிடம் கூறினர்.இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் மூதாட்டி சுப்புலக்ஷ்மியை ஒரு காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

    • அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    வாணியக்குடி பகுதியில் செல்லும்போது அங்கு மீன் கடை அருகில் ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் மூடைகளில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 40 மூடைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.உடனே போலீசார் அரிசி மூடைகளை மீட்டு வாடகை வாகனம் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.தொடர்ந்து போலீசார் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

    ×