search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224170"

    • படுகாயமடைந்த பஸ் பயணி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் மேற்கு கரையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 51).கூலித்தொழிலாளி.

    19 வருடத்திற்கு முன் இவர் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இடது கால் தொடை எலும்பில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவரால் சரிவர நடக்க முடியாது. சம்பவத்தன்று இவர் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல குளச்சலிருந்து திக்கணங்கோடு சென்ற மினி பஸ்சில் ஏறினார்.

    மினி பஸ் டிரைவர் அவரை வெள்ளியாகுளம் நிறுத்தத்தில் இறக்கி விடாமல் குளவிளை நிறுத்தத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் டிரைவருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் , தொழிலாளி ஹரிகுமாரை தாக்கினாராம்.இதில் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹரிகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து குளச்சல் போலீசார்  மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நடைபெற உள்ளது
    • குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குளச்சல் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தள வாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நாளை (27-ந் தேதி) மற்றும் மறுநாள் (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், நெசவாளர் தெரு, பள்ளி விளாகம்அழகனார் கோட்ட விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை இரணியல் மின் விநியோகம் உதவி செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் நாளை (27-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி,திருமூலநகர், வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம்,கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், சின்னமுட்டம் மற்றும் பால்குளம் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

    மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணன்கோவில் விநியோக பிரிவிற்குட்பட்ட டென்னிசன் ரோடு உயர்அழுத்த மின்பாதையில் நாளை மறுநாள் (28-ந் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டென்னிசன் ரோடு, மணி மேடை, நாகராஜா கோவில் குறுக்கு சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பார்வதிபுரம் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் ரமணிபாய் தெரிவித்து உள்ளார்.

    • ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்த போது விபத்து
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சூசை மிக்கேல் (வயது 67). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரீத்தம்மாள் (60). கடந்த சில ஆண்டுகளாக சூசைமிக்கேல் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை இந்த ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்ப்பாராமல் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது உரசியது. இதில் இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூசைமிக்கேல் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ரீத்தம்மாள் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
    • மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.

    அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.

    இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு மானியவிலை மண்எண்ணை வழங்கப்படுகிறது
    • மண்எண்ணையை கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு

    கன்னியாகுமாரி:

    குளச்சல் கடலோர காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள் சிந்துகுமார், சிவகுமார், ஜஸ்டின் மற்றும் காவலர்கள் சந்திரசேகர், வினு ஆகியோர் குளச்சல் துறைமுக பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு வழங்கும் மானியவிலை மண்எண்ணை 21 கேன்களில் 735 லிட்டர் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    உடனே போலீசார் காட்டத்துறையை சேர்ந்த ஓட்டுனர் சுஜின் (வயது 36), சுவாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத் (38) ஆகிய இருவரையும் பிடித்து மற்றும் மண்எண்ணையையும் மீட்டு குளச்சல் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மண்எண்ணையையும் பிடிப்பட்ட வேனில் வந்தவர்களையும் கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கீழத்தெருவை சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது 58). இவர் வீட்டருகே எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி, மகன் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். கடந்த 17-ந்தேதி இவர் நடத்தி வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையை மூடி விட்டார்.

    இதனால் அவர் மனம் உடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகள் மற்றும் மருமகன் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது.பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது கலீல் ரகுமான் சமையலறையில் தீயில் கருகி கிடந்தார்.அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்ப டுகிறது.

    இது குறித்து அவரது மகள் இர்பானா பர்வீன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கலீல் ரகுமான் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளச்சல் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ்.இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார்.

    இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (வயது 19).இவர் கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரு கிறார். நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்தாராம்.வீட்டு மொட்டை மாடியில் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது ஜாபியா ஜாஸ்மினின் பள்ளி தோழன் சுங்கான் கடையை சேர்ந்த அஜின் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து புளியமரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அஜின் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் மாணவியை தாக்கினார். இதில் படுகாய மடைந்த ஜாபியா ஜாஸ்மின் உடையார் விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக குளச்சல் போலீசார் அஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவில் மொட்டை மாடி ஏறி சென்று கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனவர் தேவதாசனுக்கு மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
    • மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40). இவர் கடந்த 18-ந்தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரை கடந்த 3 நாட்களாக போலீசாரும், உறவினர்களும் தேடி வந்தனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடினர்.

    இந்நிலையில் மாயமான மீனவ ரின் லுங்கி கடல் அலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என குடும்பத்தினர் பீதியடைந்தனர். இந்நிலையில் தேவதாசன் உடல் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குளச்சல் துறைமுக பகுதியில் மிதந்து சென்றது.

    இதனை விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து கரையில் சோகமாக அமர்ந்திருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மீனவர்கள் வள்ளத்தில் சென்று அவரது உடலை மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவதாசன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலில் மாயமாகி பலியான மீனவர் தேவதாசனுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

    • மீனவர் உடை கரை ஒதுங்கியதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்
    • சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்ததில் அலையில் சிக்கிக் கொண்டார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40), மீன்பிடித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பகலில் வலையை கடலில் வீசிவிட்டு இரவில் வழக்கம்போல் வலையை இழுக்க சென்றார்.

    அப்போது சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்தார். இதில் அலையில் அவர் சிக்கிக் கொண்டார். மேலும் அலை யில் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் அவ ரது உறவினர் ஸ்டான்லி புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனவர் தேவதாசனை தேடும் பணி யில் ஈடுபட்டார்.

    இன்று 3- வது நாளாக மரைன் போலீசார் மற்றும் உறவினர்கள் 5 வள்ளங்களில் சென்று தேவ தாசனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயமான மீனவர் தேவதாசனின் லுங்கி கடல் அலையில் இன்று கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாமோ? என குடும்பத்தினர் பீதியடைந்து உள்ளனர். அவர்கள் சோகத்துடன் கடற்கரையிலேயே அமர்ந்துள்ளனர்.

    மாயமான மீனவர் தேவதாசனுக்கு, ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

    • அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சி
    • வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிப்பு

    கன்னியாகுமரி:

    தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.சைமன்காலனி பாலம் அருகில் செல்லும்போது அங்கு தோட்டத்தில் ஒரு கூண்டு வேன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது.போலீசார் விரைந்து சென்றதும், வேன் டிரைவர் தப்பியோட முயற்சித்தார்.

    போலீசார் அவரை மடக்கி பிடித்து, வேனையும் குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். வேனை திறந்து பார்க்கும்போது அதில் சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.விசாரணையில் வேன் டிரைவர் பரக்குன்றை சேர்ந்த சத்யா (வயது 28) என்பதும், அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் அரிசி வாகனத்தை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

    இது போல் நள்ளிரவு குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின், ஏட்டுகள் வில்சன், செல்வகுமார் ஆகியோர் லியோன் நகரில் ரோந்து செல்லும்போது அங்கு வீட்டு காம்பவுண்டுக்குள் 31 பிளாஸ்டிக் கேன்களில் வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவற்றை மீட்டு குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    • புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
    • மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கலை அடுத்த தொலையாவட்டம் கம்பளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17-வயதான மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி சனிக்கிழமை மாணவியின் தந்தை மற்றும் தாய் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த தந்தை வழி உறவினரான கொத்தனார் வேலை பார்க்கும் 41-வயதான ஜாண் செல்வன் என்பவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மாணவியை மிரட்டியும் உள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம்,சிறுமி நடந்தவற்றை கூறிய நிலையில் சம்பவம் குறித்து தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த ஜாண் செல்வன் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்
    • உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கோட்டப்புறத்தை சேர்ந்த பிஜூ மகன் சிபின் (வயது17).

    10-ம் வகுப்பு படித்துள்ளார்.

    நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிபின் அவரது நண்பர் பிரின்சன் (19) ஆகியோர் கன்னியாகுமரி செல்வதற்கு ஊரிலிருந்து மோட்டார சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார சைக்கிளை சிபின் ஓட்டினார். பின்னால் பிரின்சன் அமர்ந்திருந்தார்.

    அவர்கள் கொல்லங்கோடு, கருங்கல் குளச்சல் வழியாக கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டனர். நேற்றிரவு குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையில் சென்ற போது சிபின் பைக் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த சிபின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிபின் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    பிரின்சன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இது குறித்து சிபின் அண்ணன் ஜோயிசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    ×