search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224170"

    • குளச்சல் கடற்கரையில் போர் வெற்றி தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
    • ராணுவ வீரர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தலமாக விளங்கியது. இதனை அறிந்த டச்சு படையினர் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டனர். அதைத்தொடர்ந்து திருவி தாங்கூர் மகாராஜா மார்த் தாண்ட வர்மா படை தளப திகளுடன் குளச்சல் கடற்க ரைக்கு வந்தார்.

    திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. 2 மாதங்கள் நடந்த இந்த சண்ைட 1741 ஜூலை 31-ந்தேதி முடிவுக்கு வந்து திருவிதாங்கூர் படை டச்சு படையை வென்றது. இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்ன ருக்கு பெரும் உதவிகள் செய்தனர். போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றி தூண் ஒன்றை நிறுவினார். இந்த தூண் மீது அமைந் துள்ள சங்குதான் இன்றும் குளச்சல் நகராட்சியின் முத் திரையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த போர் வெற்றி தூண் வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்காட்சிகளை விளக்கும் வகையில் சுவரில் படைப்பு சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றித்தூணில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் பாங்கோடு) சார்பில் கடந்த சில வருடங்களாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    டச்சு படையை வென்ற 281-வது ஆண்டை யொட்டி, இன்று (சனிக் கிழமை) காலை 10.30 மணிக்கு வெற்றி தூணுக்கு வீரவணக் கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவனந்தபுரம் பாங்கோடில் உள்ள மெட் ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

    • தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம்
    • பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களை கட்ட தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் படகுகளில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்ட நிலையில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நிலையில் அவர்களது படகில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்டிருந்தது. இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் மெயின்ரோட்டில் களிமார் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் வழிபாடு முடிந்து நிர்வாகிகள் கோவில் கிரில் வாசலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒருவர் கோவில் வாசல் கிரில் திறந்து கிடந்ததை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது கோவில் உள்பக்கமாக இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிலிருந்த காணிக்கை பணம் காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் கிரில் பூட்டையும், உண்டியல் பூட்டையும் உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை. காணிக்கை பணத்தை திருடிய நபர்கள் 2 பூட்டுகளையும் எடுத்து சென்று விட்டனர்.

    இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் ஜெகன்னாதன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசாரும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடி வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சிந்துஸ்டன் குமார் (வயது 31). கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் களியக்காவிளையை சேர்ந்த மேரி ஜாஸ்மின் (19) என்பவருக்கும் கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.

    கடந்த 25-ந் தேதி இரவு இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். மறுநாள் காலை சிந்துஸ்டன்குமார் எழுந்து பார்க்கும்போது மேரி ஜாஸ்மினை காணவில்லை. உடனே அவர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருமணமான 12-வது நாளில் புதுப்பெண் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிந்துஸ்டன் குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மேரி ஜாஸ்மினை தேடி வருகின்றனர்.

    • 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தல்
    • சத்தியாக்கிரக போராட்டத்தில் பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் சி.ஐ.டி.யு.க்கு ஒதுக்கப்பட்டிருந்த 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தி குளச்சல் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது.

    பணிமனை சி.ஐ.டி.யு.செயலாளர் ஜாண் பென்னி தலைமை வகித்தார். தலைவர் ரெத்தினராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமோகன் துவைக்கவுரை ஆற்றினார். பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். மற்றும் நிர்வாகிகள் நடராஜன், லெனின் ஜெயா, ஜாண்சன், ராஜேந்திரன் உள்பட 12 பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
    • குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    குளச்சல், ஜூன்.30-

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் மூன்று நாட்களுக்கு லட்சதீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்படு வதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    • மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு
    • படுகாயமடைந்தவர்களுக்கு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம்.இவரது மகன் சேகர் (வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நிறுத்தியிருந்தனர்.இதை பார்த்த சேகர், காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார்.

    அப்போது 4 பேரும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாக கூறப்ப டுகிறது. இதற்கு சேகர் மறுத்தார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி. கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.

    படுகாயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிப்பாக குளச்சல் போலீசார் மேற்கூறிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம்துறை, கோவில்வளாகம் பகுதியில் இருந்து அரசு மீனவர்களுக்கு மானியவிலையில் வழங்கும் மண்எண்ணை கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று மார்த்தாண்டம்துறை மேடவிளாகம் பகுதி வழியாக மானிய மண்எண்ணை ஏற்றி வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது டிரைவர் வாகனத்னதை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் அதில் இருந்த மீன்பிடித் தொழிலுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் வெள்ளை நிறமுடைய மண்எண்ணை இருந்ததை கண்டு பிடித்தனர். 15 கேன்களில் சுமார் 35 லிட்டர் வீதம் மொத்தம் 525 லிட்டர் மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.பின்னர் அவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • மீன்பிடி தொழில் செய்து வருகிறார்
    • களிமாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

    கன்னியாகுமரி :


    குளச்சல் அருகே சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர் எடிசன் (வயது 43). கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு எடிசன் பொருட்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.குளச்சல் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது கடற்கரையிலிருந்து மெயின்ரோட்டிற்கு வந்த கார் எதிர்ப்பாராமல் எடிசன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் கீழே விழுந்த எடிசன் படுகாயமடைந்தார்.அவரை அப்பகுதியினர் மீட்டு களிமாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் எடிசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவு எண் மீது வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

    • மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    உலகம் முழுவதும் ஜூன் 8 ம் தேதி உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் கடற்கரையில் உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணி. சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    உறுதிமொழியில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுப்போம், குப்பைகளை கடலில் கொட்ட மாட்டோம், கடலையும், கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழியில் கூறினர்.

    மேலும் கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுவிக்க வலியுறுத்தி கோஷம்
    • குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ஜிஸ்தி, ஒய்.எம்.ஜெ மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் முகம்மது, த.மு.மு.க.மாவட்ட முன்னாள் பொறுப்பு தலைவர் அஷ்ரப், நகர த.மு.மு.க.செயலாளர் அபு தாகீர், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் இலப்பை விளையை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகன் முகம்மது அசாருதீன் (வயது 22). இவர் குளச்சல் பீச் ரோட்டில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை 10 மணியளவில் தனிப்படை போலீசார் குளச்சல் வந்து முகம்மது அசாருதீனை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.அவரது குடும்பத்தினர் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது சரியான தகவல் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.

    மாலை ஆகியும் முகம்மது அசாருதீன் விடுவிக்கப்படாததால் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ஜிஸ்தி, ஒய்.எம்.ஜெ மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் முகம்மது, த.மு.மு.க.மாவட்ட முன்னாள் பொறுப்பு தலைவர் அஷ்ரப், நகர த.மு.மு.க.செயலாளர் அபு தாகீர், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்து வந்த குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முடிவில் சாகுல் அமீதுவிடம் போலீசார் எழுதி வாங்கிவிட்டு முகம்மது அசாருதீனை ஒப்படைத்தனர்.

    குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு நடந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • குளச்சல் களிமார் பாலம் அருகில் பழக்கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.22 ஆயிரம் திருட்டு.
    • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல்மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வியாபாரம் முடிந்ததும் இரவில் கடையை பூட்டிச் சென்றார். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு ராஜேஷ் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும்போது மேசை டிராயரில் வைத்து சென்ற ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×