search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • 1993-ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது
    • இச்சம்பவத்தில் குமரி பாலன் பலியானார்.

    கன்னியாகுமரி:

    கடந்த 1993-ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு குருந்தன்கோடு இந்து முன்னணி சார்பில் திங்கள் நகரில் பயங்கரவாத எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், ராஜ்குமார், ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராஜேஸ்வரன், நெட்டாங்கோடு மணி உட்பட 100 பேர் மோட்டார் சைக்கிளில் ராதாகிருஷ்ணன் கோவிலில் இருந்து காட்டாத்துறை சென்று குமார் கோவில் பிரம்மபுரம் சென்று அடைந்தது. இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இரணியல் போலீசில் புகார்
    • இரணியல் போலீசார்மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே காரங்காடு அடுத்த மொட்ட விளையை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 56). இவரது மகள் ஜெயஸ்ரீ (23). லேப் டெக்சினீயன் முடித்துவிட்டு நாகர்கோவி லில் உள்ள ஒரு தனியார் லேபில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று லேபிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ஜெயஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங் களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து ஜெயசேகர் இரணியல் போலீசில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இரணியல் போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெல்லியார்கோணம் தைபிலாவிளையை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி இருதயமேரி (வயது 77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மூதாட்டி இருதயமேரி தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுசீலாமேரி, செல்வமேரி ஆகிய 2 பேரும் மூதாட்டி வீட்டுக்குச் சென்று அவரை அவதூறாக பேசி கையில் வைத்திருந்த தென்னை ஓலை மற்றும் மட்டையால் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் வலது கையில் ரத்தக் காயமடைந்த மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதயமேரி இரணியல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி வெள்ளச்சிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மனைவி ஷைலஜா (வயது 42). இவர் நேற்று காலை தனது மொபட்டில் தக்கலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் வெள்ளச்சிவிளை என்ற இடத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து தக்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது கணவர் செல்லத்துரை அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தொழிலாளி கைது
    • ரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்தினகுமார் (வயது 35) இவர் சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணி புரிகிறார்.

    சம்பவத்தன்று திங்கள் நகர் ரவுண்டானா அருகே வந்து கொண்டு இருந்தார்.அப் போது செய்யூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28) மற்றும் இருவர் மது போதையில் சந்தனகுமாரை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த சந்தனகுமார், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • வேன் மோதியதால் விபத்து
    • என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு குன்னங் காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ரமேஷ் (வயது 28). இன்ஜினியரிங் பட்ட தாரியான இவர் கேனில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருடன் அழகன்பாறை அருள்சுந்தர்ராஜ் மகன் சுபாஷ் (32) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் நோக்கி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிைள ரமேஷ் ஓட்டினார்.

    மோட்டார் சைக்கிள் இரணியல் மேலத்தெரு ஜங்ஷன் அருகே வந்த போது எதிர்பாராத வித மாக எதிரில் வந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயமடைந்த இருவ ரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சுபாஷை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கும், ரமேஷை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபாஷ் நேற்று இரவும், ரமேஷ் இன்று அதிகாலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து மினிவேன் டிரைவர் ஆலஞ்சி ராபின்ரோஸ் (35) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல் மேலத்தெரு பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி உயிரிழப்பு நடப்பதால் போர்க்கால அடிப்படையில் சாலையை விரிவுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4 பேர் மீது வழக்கு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியில் இன்று காலியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதனை முன்னிட்டு கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால்கிரு ஷ்ணன்,தேர்தல் பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் அவர் புது விளை பகுதியில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கோபால்கிருஷ்ணனிடம் தேர்தல் பணியில் ஈடு பட்டவர்கள் இரவு நேர த்தில் எதற்காக இங்கு வந்தீர்கள்?என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் தாக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக சேர்ந்துள்ள கோபால் கிருஷ்ணன், புதுவிளை பகுதியைச் சேர்ந்த மணி கண்டன், அய்யப்பன், கோபு, ரமேஷ் ஆகியோர் தன்னை தாக்கிய தாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் புதுவிளை சுதாகர் என்பவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் தன்னை தாக்கியதாக தெரிவித்து உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது துணிகரம்
    • போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி குதிரை பந்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சுபழம். இவரது மனைவி சுந்தர பாய் (வயது 68).

    இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து லெட்சுமிபுரம் அம்மச்சிமடம் பகுதியில் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சுந்தரபாய் பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். இரணியில் அருகே பரசேரி பகுதியில் பஸ்சை விட்டு இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 13 பவுன் நகையை காணவில்லை.

    சுந்தர பாய் நகையை தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சுந்தர பாய் சென்று வந்த கோவில்களுக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுந்தர பாய் கழுத்தில் நகை கிடந்தது தெரிய வந்தது.

    எனவே ஓடும் பஸ்சில்தான் அவரிடம் யாரோ கைவரிசையை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • உடனே மின் தடை ஏற்பட்டது
    • பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமாரி மாவட்டம் நித்திரவிளை பகுதியிலிருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.

    கார் கண்டன்விளை மொட்டவிளையை கடந்து பேயன்குழி அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாடு இழந்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி ஒரு வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.

    அப்போது அருகில் இருந்த ஒரு கடையின் முன்பக்கம் சேதமடைந்தது.கார் மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. உடனே மின் தடை ஏற்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    தகவலறிந்த பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். பேயன்குழியில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மனைவி செல்லதங்கம் (வயது 65). இவர் மகன் ஸ்ரீகுமார் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லத்தங்கம் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்திற்கு குளிக்க சென்றார்.‌ அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே இளைஞர்கள் செல்லதங்கம் உடலை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்லதங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த சிறுவனுக்கு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெய்யூர் காணாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 41). இவருக்கும் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்த விமல்தாஸ் (36) என்பவருக்கும் கோவில் திருவிழாவின் போது நடந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று காணாங்குளம் ராஜேஷ் வீட்டின் அருகில் வந்த விமல்தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷின் 13 வயது மகனை 4 பேரும் சேர்ந்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விமல்தாஸ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர் ராகவன்நாயர் மகன் ஸ்ரீகண்டன் நாயர் (வயது 46). குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

    ஸ்ரீகண்டன் நாயருக்கு சொரியாசிஸ் நோய் இருந்ததால் சிகிச்சைக்காக அவரது நண்பர் வில்லுக்குறி திருவிடைக்கோடு தவசிமுத்து வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் ஸ்ரீகண்டன் நாயர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது குளியல் அறைக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரது நண்பர் தவசிமுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீகண்டன்நாயர் இறந்த தகவல் அவரது சகோதரர் மணிகண்டன் நாயருக்கும் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×