search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • இரணியல் காவல் நிலையத்தில் புகார்
    • புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த பெண் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் அடுத்த புதுவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெனின் (வயது 38). இவர் திங்கள் நகர் ஆரோக்கியபுரத்தில் அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த மே மாதம் 3ம் தேதி இவர் கடையில் இருக்கும் பொழுது டிப்டாப்பாக வந்த பெண்மணி ஒருவர் 19.350 கிராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் சந்தியா கணவர் பெயர் விஜி செட்டிதெரு இரணியல் என முகவரியை மட்டும் வாய்மொழியாக கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜெனின் கடையில் இல்லாத போது அவரது தம்பியிடம் சுமார் 21.5 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை கொடுத்து ரூ.75 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்‌ அப்போது அவருடைய பெயர் சைலஜா எனவும் கணவர் பெயர் சஜீவ், கோகுலம், இரணியல் மெயின்ரோடு என முகவரி கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சமீபகாலமாக போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடந்து வருவது குறித்து பத்திரிகையிலும் சமூக வலைதளங்களிலும் தெரிந்து ஜெனின் டிப்டாப் பெண்மணி கொடுத்த நகைகளை சோதனை செய்துள்ளார். அப்பொழுது செம்பு கம்பிகளை தங்க முலாம் பூசி அந்த டிப்டாப் பெண்மணி மோசடி செய்திருப்பது தெரியவந்தது‌.

    மேலும் இரண்டு மோசடிகளிலும் ஈடுபட்டிருப்பது ஒரே பெண்தான் என்பதையும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்துகொண்ட ஜெனின் இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த பெண் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது போலி முகவரி கொடுத்து ஏமாற்றிய டிப்டாப் பெண்மணி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜா மனைவி அனுஷா (32) என தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாகியுள்ள அனுஷாவை இரணியல் போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஜேசுராஜா கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் இது போன்ற மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் கரையான்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது பெரியம்மா வள்ளியம்மாள் (வயது 76). இவர் செல்வனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வள்ளியம்மாள் நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
    • இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.

    இதனை சரிசெய்ய அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடவிளாகம் குடிநீர் தேவைக்காக தோண்ட பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ள காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை தயார் செய்யும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    மேலும் திங்கள் நகர் ரவுண்டானா வில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் பெரிய அளவிலான பள்ளங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணிகள் தவறி விழுந்து செல்வதை காண முடிகிறது. தினசரி மாநில மந்திரி மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சாலையின் நிலை குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.


    உயிருக்கு உலை வைக்கும் சம்பவம் நிகழும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த விவசாயி விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கி இறந்தார்.
    • உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌
    • அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் குடும்பத்தை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் திருட்டு.
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 57). இவரது அண்ணன் மகள் பபிதாவின் நான்கரை வயது பெண் குழந்தை நேற்று காலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை திருடியதாக வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் மனோகர் குமார் குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் சிபிராஜ் முன்னிலை வகித்தனர்.


    ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது. பேருராட்சி பா.ஜ.க. தலைவர் கோபுஜி கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார், சுஜாதா, கவுதமி, செய்யூர் சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×