search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224464"

    • திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், வாரத்தில் 4 நாட்கள் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம்- செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்கின்றன.

    இந்நிலையில், ரெயில் நிலைய நடைமேடைகள் விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளங்களுடன் மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடைபாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நடைமேடை பாதிப்பு.
    • பூலாம்பட்டி படகுத் துறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி படகுத் துறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் விசைப்படகுத் துறையின் நடைமேடை திடீரென இடிந்து காவிரி ஆற்றுக்குள் விழுந்தது.

    காவிரியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பூலாம்பட்டி பஞ்சாயத்து பணியாளர்கள் மணல் மூட்டைகளை தயார் செய்து, காவிரி கரையோரம் நடைமேடை இடிந்து விழுந்த பகுதிகளில் அடுக்கி தற்காலிகமாக சுவர் அமைத்து உள்ளனர். 

    • அந்தியோதியா ரெயிலை சீர்காழியில் நின்று செல்ல ேகாரிக்கை விடுக்கப்பட்டது.
    • சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி ரெயில் நிலையத்திற்கு பயணிகள் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

    ஆய்வு குழுவிடம் சீர்காழியில் ஒரு வழியில் தற்போது நின்று செல்லும் அனைத்து ரெயில்களும் இரண்டு வழித்தடத்திலும் நின்று செல்லவும், அந்தியோதையா ரயிலை சீர்காழியில் நின்று செல்லவும், பெட்டிகள் அடையாளம் காண வழிவகை செய்யவும், நிரந்தரமாக இரண்டாம் நடைமேடையில் மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டது.

    முதல் நடைமேடையில் புதிய நிழல் குடை அமைக்கவும் பயணிகள் நல குழு உறுப்பினர்களிடம் விழுதுகள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஷரவணன் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

    இதேபோல் ரயில்வே துறை சேர்மேனிடம், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் சீர்காழியில் நின்று செல்லாத ரயில்கள் குறித்து சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்யநாராயணன், எக்ஸ்ரே ராஜா, சேதுராமன் ஆகியோர் கோரிக்கை மனு அரித்தனர். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவ சங்கர், நகரத் தலைவர் சங்கர், பொறுப்பாளர் வெற்றிலை முருகன், சீர்காழி நகர வர்த்தக சங்கத்தை சேர்ந்த தில்லை நடராஜன் உள்ளிட்ட பலர்உடன் இருந்தனர்.

    ×