search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள்"

    • இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.


    இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. 

    இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
    • மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.


    இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.


    எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    • 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது.
    • பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களை சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் கழிவுநீர் செல்லும் சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்தும், உடைந்தும் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

    முதலூர்ரோடு மெயின் பஜாரில் அதிக அளவில் கடைகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் கழிவுநீர் செல்லும் இந்த சாலையில் உள்ள கானல்களில் பாதி அளவு கட்டப்படாமல் பழுது ஏற்பட்டு சகதி தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது போன்று 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களையும், பாதி கட்டி முடிக்காமல் உள்ள சாக்கடைகளையும் சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகள் பறிமுதல் செய்தனர்.
    • ரூ.1000 அபராதம் செலுத்தினால் ஒப்படைக்கப்படும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் குறிப்பாக புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலை, ஆலங்குடி, கறம்பக்குடி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் 100க் கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகின்றன.

    இந்த மாடுகளால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும், பேரூராட்சி பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் பிடித்துச் செல்ல வேண் டும். சாலைகளில் சுற்ற விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் எ ன்று ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமை யில் இளநிலை உதவியாளர் ரேவதி முன்னிலையில் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த அறிவிப்பையும் மீறி ஆலங்குடி பேரூராட்சி சா லைகளில் சுற்றி திரிந்த சுமார் 25 மாடுகளுக்கு மேல் பேரூராட்சி ப ணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி வளாகத்தில் அடைத்துள்ளனர்.

    மேலும் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மாடுகளின் உரிமை யாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கப்படு ம் என்றும் 1000 ரூபாய் அபராதம் கட்டினால் மட்டுமே மாடுகள் உரிமை யாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதன் பின்னரும் சாலைகளி ல் மாடுகளை சுற்ற விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சுற்றித்திரிந்த மாடுகளை கொண்டு வந்து வளாகத் தில் அடைத்தனர். பணத்தைக் கட்ட தவறிய மாடுகளுக்கு பொது ஏலம் விடப்படும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • சூசைபுரம் காலனி செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.25 லட்சம்
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள சூசைபுரம் காலனி செல்லும் சாலை, சிலுவைப்புரம் - நெல்லியப்பட்டு செல்லும் சாலை, நெல்லியப்பட்டு - உள் மண் சாலை இறையன் தோட்டம் ஆகிய சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மிகப்பெரிய குண்டும் குழிகளாக காணப்பட்டது. இந்த சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், தமிழக முதல்-அமைச்சர், நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். அடிப்படையில் சூசைபுரம் காலனி செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.25 லட்சம், சிலுவைப்புரம் - நெல்லியப்பட்டு செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.20 லட்சம், நெல்லியப்பட்டு - உள் மண் சாலை இந்த சாலையை சீரமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.33 -லட்சம், இறையன் தோட்டம் சாலை இந்த சாலையை சீரமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.18.30 -லட்சம் என நான்கு சாலைகளுக்கு ரூ. 96.30 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெஜீஷ், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் ராணி, துணை சேர்மன் பேப்பர், நகராட்சி உறுப்பினர்கள் கவிதா, ஸ்டீபன், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×