search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • சமையல் செய்த போது விபரீதம்
    • மருத்துமனையில சிகிச்சை பலனின்றி சாவு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டை தெற்கு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி பெட்சி (வயது 35). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்து உள்ளது. தீ வேகமாக பரவியதால் அவர் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து காப்பாற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள முக்கூட்டுகொல்லையைச் சேர்ந்த பூமி என்பவரின் மனைவி ராஜகுமாரி(வயது 60 ). இவர் தனது காதில் மருந்து ஊற்றி உள்ளார். இதனால் மயக்கம் ஏற்படவே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரைபுதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வடகாடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருச்சி டாஸ்மாக் பாரில் மது அருந்திய வாலிபர் மயங்கி விழுந்து பலியானார்
    • இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் கிழக்குத் தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேம்படி. இவரது மகன் பிரசாந்த் (வயது 28). குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் பகல் முழுவதும் இருந்து மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • அரசு பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த முதியவர் இறந்தார்.
    • விபத்து குறித்து பெருங்குடி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண் ராஜா (43). இவர் சம்பவத்தன்று மனைவி பவித்ரா, மாமனார் சுரேந்திரநாத், மாமியார் சுகுணா தேவி மற்றும் பவித்ரா, தங்கை சுகன்யா ஆகியோருடன் காரில் மதுரைக்கு வந்தார். அப்போது அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில், வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எனவே அருண் ராஜா உடனடியாக பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சுரேந்திரநாத், பவித்ரா, சுகுணா தேவி, சுகன்யா படுகாயம் அடைந்தனர். அவர்களை வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேந்திரநாத் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருங்குடி போலீசார் சுரேந்திரநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியில் துாங்கியவர் மர்ம சாவு
    • போலீசார் விசாரணை

    கரூர்,

    துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42) லாரி டிரைவர். இவர் துாத்துக்குடியில் இருந்து கரூருக்கு, லாரியில் சரக்கு ஏற்றி கரூர் - வெள்ளியணை சாலை, ஒருங்கி ணைந்த நீதிமன்றம் அருகே, லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார். மறுநாள் காலை லாரியில் பாலமுருகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி மகாலட்சுமி, கொடுத்த புகாரின்படி தான்தோன் றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அமிட் கஞ்சு (வயது 23). இவர் பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து டீ குடிப்பதற்காக வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி அமிட் கஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கோமதி (வயது 24), மாற்றுத் திறனாளியான இவருக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.

    அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோமதியின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கோமதி இறந்தார் என கூறி எடப்பாடி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எடப்பாடி போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார்
    • இதுகுறித்து, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    மாயனூர் அடுத்த, புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 31). இவர் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் தோட்டத்தில் சூரியகாந்தி செடிக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது காலில் பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்புராமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் தமிழரசி, கொடுத்த புகாரின்படி, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • பூச்சி கடித்து மர வியாபாரி உயிரிழந்தார்
    • இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மருவத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). மர வியாபாரி. இவர் கவுல்பாளையம்-அருமடல் செல்லும் சாலையில் வாங்கி போட்டிருந்த மரங்களை நேற்று காலை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரனை ஏதோ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சிகிச்சைக்காக, அவருடைய மகன் சரண்ராஜ் (25) மோட்டார் சைக்கிளில் மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார்.
    • இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துமயக்கநிலையில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வாசப்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார். இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மகன் குணசேகரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • உறையூரில் சம்பவம்
    • உடல் பாதிப்படைந்ததால் சாவு

    திருச்சி

    திருச்சி உறையூர் நடு வைக்கோல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன் வயது 40 இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.இந்த நிலையில் நேற்று முன் தினம் கரிகாலன் புத்தூர் ஹை ரோடு சர்ச் கார் ஸ்டாண்ட் பகுதியில் மயங்கி விழுந்தார்.இது பற்றி தகவல் அறிந்த அவரது சகோதரி காந்திமதி கரிகாலனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கரிகாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதேபோன்று திருச்சி புத்தூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (52).பெயிண்டர் ஆன இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதனால் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது இந்த நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி செல்வி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் என்ற நிலையில் நேற்று பாஸ்கரன் புத்தூர் ஹை ரோடு டி வி ஆர் அப்பார்ட்மெண்ட் பகுதியில் மயங்கி கிடந்தார் அவரது சகோதரர் இளையராஜா அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர் குடிப்பழக்கத்திற்கு ஆளான ரெண்டு பேர் உறையூர் பகுதியில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×