search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • பாலத்தின் சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து இறந்தார்
    • பலத்த காயம் ஏற்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் மீது படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்நிலையில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலனூரில் உள்ள செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்
    • அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ் (51) மூலனூரில் உள்ள செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று காலை வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் நோக்கி கரப்பாலம் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது தானே நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கனகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் இறந்தார்.இந்த விபத்துக்கு குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேட்டியில் தீப்பிடித்து முதியவர் இறந்தார்.
    • புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்

    புதுக்கோட்டை

    விராலிமலை தாலுகா கொடும்பாளூர் இடையபட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 80). இவர், புகைபிடிக்கும் பழக்கம் உடையவர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர், வீட்டில் இருந்தபோது `சிகரெட்' பிடிப்பதற்காக தீப்ெபட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து பற்றவைத்து விட்டு குச்சியை கீழே போட்டுள்ளார். அப்போது தீக்குச்சி எதிர்பாராதவிதமாக அவரது வேட்டியில் பட்டு மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து அவர் கீழே விழுந்து புரண்டு அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வந்து தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து பெய்ண்டர் உயிரிழந்தார்
    • பணி செய்து கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் கார்த்திக் (வயது 26) பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த சபரிராஜன் உட்பட 4 பேர் அன்னவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றனர்.

    வீட்டின் பின்புறத்தில் கார்த்திக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த சபரிராஜன் அவரை காப்பாற்ற முற்பட்டார். இதில் கார்த்திக் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சபரிராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே சக பணியாளர்கள் சபரிராஜனை மீட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.
    • 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் 19-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நளினி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து இருந்தார். பின்னர் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது 2 பெரிய ஆடுகள், 5 குட்டி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது.

    நள்ளிரவுநேரம் பட்டிக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 2 பெரியஆடுகள், 5 குட்டி ஆடுகள் செத்து விட்டன. இதுகுறித்து கால்நடை டாக்டரகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பட்டிக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவாயிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் பல்வேறு தொல்லைகள் அதிகரிக்கிறது. பயிர்களை மயில்கள், மான்கள் ஒரு பக்கம் சேதம் ஏற்படுத்தினாலும், தோட்டத்தில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலையில், வாழ்வாதாரமாக விளக்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொல்வது கவலை அளிக்கிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து சாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 23). இவர் டிப்ளமோ முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தந்தை கண்ணன் மகன் வெங்கடேசனிடம் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார். மீண்டும் மாலை வீடு திரும்பியவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை விசாரித்த போது எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    உடனடியாக வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வெங்கடேசன் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் நீரில் மூழ்க்கி உயிரிழந்தார்
    • அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயசு 35). இவர் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஷ்டாக பணிபுரிந்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறையில் தனது சொந்த ஊரான அந்தூர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார்.

    ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத பிதமாக நீரில் மூழ்க்கினார். இதனை பார்த்த பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், கதறி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இறந்த நிலையில் சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்
    • மயங்கி கீழே விழுந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பி.குளவாய்ப்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் அலெக்ஸ் (வயது40). இவர் ஆலங்குடி தனியார் அரிசி ஆ லையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், சம்பவத்தன்று மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக கூலித்தொழிலாளிகள், அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அலெக்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங் குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது


    கரூர்

    கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட ராயனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40) தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி (37) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிவேல் எந்த வேலைக்கும் செல்லாமல், மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிவேல் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் வசித்துவந்தவா் விஜய் (23), கட்டுமானத் தொழிலாளி. இவா், உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா். அப்போது, விஜய்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மூங்கில் பாளையம் பகுதி சேர்ந்தவர் குஞ்சான் வயது 65. இவர் தனது மனைவி சென்னியம்மாள், மகள் பூங்கொடி, மருமகன் பாண்டியராஜ் மற்றும் பேத்திகளுடன் குடியிருந்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து அளவுக்கு அதிகமாக முடித்துவிட்டு போதையில் வந்த குஞ்சான் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி சத்தம் போடாமல் போய் தூங்குங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவு அவரது மருமகன் பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குஞ்சான் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • போதையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் சரவணன்(வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ந் தேதி தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற அவர்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சரவணன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கிருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு சரவணனின் தாயார் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். சரவணன் போதையில் நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கு அருகிலேயே மயங்கி கிடந்துள்ளார். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்த நிலையில் இதுகுறித்து சரவணனின் தந்தை சந்திரகாசனுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சந்திரகாசன் தாதம்பேட்டை வந்து சரவணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனின் தந்தை சந்திரகாசன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×