என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224584"
- சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.
- மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான நிலையில், தமிழகம் முழுவதும் சட்டவிரோத சாராய விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், வெளி மாநில சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் வீரமணி (35), சிவக்குமார் (38) ஆகிய இருவரும் வயலில் ஊறல் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.
தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வலங்கைமான் வரதராஜன், பெரும்படுகை சிங்காரவேல், வடபாதிமங்கலம் முருகானந்தம், நன்னிலம் ஜெயபரணி, சேது பாண்டியன் உட்பட மாவட்ட முழுவதும் 44 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோகூர் மாதா கோவில் அருகே வெட்டாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாகூர் வண்ணான் குளம் வடகரை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ராஜா (வயது 57) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 57) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
- தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட மேலவாஞ்சூர் பகுதியில், திரு.பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது37), சத்யராஜ் (27) என்பதும், 2 பேரும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயத்தை கடத்திச் சென்று விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து, மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- அவ்வழியே வேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
- 200 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் வெளி மாநில சாராயம், மதுபான பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை தாண்டவன் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் காரினுள் 25 பெட்டிகளில் 1200 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களும், 200 லிட்டர் புதுச்சேரி சாராயமும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் மது பாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துரை (வயது 56) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- 2 பேர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ராமராஜன் (வயது31), சுப்பிரமணியன் (62) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்
- மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
Liquor smuggler on motorcycle arrestedஇதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கொட்டக்காட்டுபாளையத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- 5 லிட்டா் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.
அவினாசி :
சேவூா் அருகே உள்ள கொட்டக்காட்டுபாளையத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் தனலட்சுமி (37) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசாா், தனலட்சுமி (37) அதே பகுதியைச் சோ்ந்த மணி (55) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.
- மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் மானம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சாராயம் கடத்திய தேவூர் ராணி அய்யர் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 41), திருச்செங்காட்டங்குடி வடக்குதெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் கீழ்வேளூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
- ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுஅப்துல் கபூர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் நேற்று திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதனை ஓட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 110 லிட்டர் அளவில் சாராயம் மற்றும் 750 மி.லி அளவு கொண்ட 72 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ரூ 1 லட்சம் மதிப்பிலான அந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் வடக்கு தெருவை சேர்ந்த கரன் (25) மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகேஷ் (21) இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
- காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.
- பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீசை கைது செய்தனர்.
- 110 லிட்டர் வெளிமாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாருக்கு அரசவனங்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த தோப்பு தெருவை சேர்ந்த கலைச்செல்வி (வயது 43) என்ற பெண்ணை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்