search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரல்வாய்மொழி"

    • ஆரல்வாய்மொழி போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பலியானவரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). செங்கல்சூளை தொழிலாளி. இவர் நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று பெருமாள் மீது மோதியது.

    இதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் முருகன் ஆரல் வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளனர். பலியான பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளது.

    வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது அசாருதீன் (வயது 23).

    இவர், ஆரல்வாய்மொழி அருகே மாதவராயன் கைகாட்டி பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் முகமது அசாருதீன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது மீது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட முகமது அசாருதீன் மயங்கிய நிலை யில் கிடந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். முகமது அசாருதீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலி யான முகமது அசாருதீன் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதை யடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    • காரில் குழந்தைகளை அடைத்து வைத்து விட்டு விஷம் குடித்தனர்
    • ஆரல்வாய்மொழி போலீசார் 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கார் மற்றும் வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்தும் பலர் பிரார்த்தனை செய்து செல்வார்கள்.

    எனவே தேவாலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல தேவாலயத்திற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். இதனால் கார்களும் அங்கு அதிகமாக நின்றன.

    இதில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தவழியே சென்றவர்கள், கார் அங்கேயே நிற்பதை பார்த்துள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காருக்குள் பார்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. வேறு யாரும் இருக்கிறார்களா? என காரை சுற்றி வந்து பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் காருக்கு வெளியே பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, அதில் அவரது டிரைவிங் லைசென்சு இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் ஆேராக்கிய சூசைநாதன் (வயது 35) என்பதும் கடிய பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து, அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது. எனவே பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி (30) என்பது உறுதியானது. 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் சகாய சாமினியின் மகன்கள் என தெரியவந்தது.

    கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆேராக்கிய சூசைநாதன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். மேலும் அவரே கார் டிரைவராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் தான், ஆேராக்கிய சூசைநாதனுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சகாய சாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காத லாக மாறியுள்ளது. மீன் பிடி தொழிலாளியான ராஜேஷ் கடலுக்குச் சென்றதும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுபற்றி தெரிய வந்ததும் இரு வீட்டா ரும் கண்டித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் சகாய சாமினி தனது 2 மகன்களுடன் மாயமாகி விட்டார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சகாய சாமினி மற்றும் அவரது மகன்களை தேடி வந்தனர்.

    இந்த சூழலில் தான் கள்ளக்காதல் ஜோடியினர், ஆரல்வாய்மொழி பகுதியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.

    • முன்விரோதம் காரணமாக தாக்குதல்
    • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் லைப்ரரி தெருவை சேர்ந்தவர் ஐசக் ராஜன்.

    இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராகஉள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த டேவிட் அய்யாப்பழம் என்பவ ருக்கும் இடையே முன்விரோ தம் உள்ளது.

    சம்பவத்தன்று ஐசக் ராஜன், தனது மனைவி ரெமிலா (வயது29) வுடன் பைக்கில் கடைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு டேவிட் அய்யா பழம் வந்தார்.

    அவர், ஐசக்ராஜனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு அவரது கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்ததாகவும் இதை தட்டிக் கேட்ட ரெமிலாைவ கீழே தள்ளி தாக்கியதாகவும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் டேவிட் அய்யாபழம் மீது பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்தது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது50). இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

    தீ வேகமாக பரவ அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
    • ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

    ஆரல்வாய்மொழி:

    அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாழக்குடி நகரச் செயலர் பிரமநாயகம் பிள்ளை, ரோகினி அய்யப்பன்,

    தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், கச்சேரி நாகராஜன், பேரவை நிர்வாகிகள் சுந்தரம் இசக்கியப்பன், ஒல்சி, பேச்சியம்மாள், மல்லிகா, அமுதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுயம்புலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.

    அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

    அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.

    இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

    நாகர்கோவில்:

    பொய்கை அணையில் இருந்து வருகின்ற ஓடை யானது வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வந்து தாணு மாலையன்புதூர் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி நெடுஞ்சா லையினை கடந்து வடக்கு பெருமாள்புரம், ஆலடிநகர் வழியாக ராமர்குளத்தை வந்து அடைகிறது.

    இந்த ஓடையானது பல ஆண்டுகளாக தூர் வாரப்ப டாமல் செடி, கொடிகள் படர்ந்து சகதிகளாக காணப்பட்டதால் சுகாதார கேடு ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டதுடன் மழை காலங்களில் வெள்ளங்கள் சரியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இத னால் அப்பகுதி பொது மக்கள் இந்த பொய்கை ஓடையினை தூர் வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனால் நேற்று பொக் லைன் இயந்திரம் மூலம் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    மேலும் அப்பகுதி பொதுமக்கள் இந்த ஓடை யினை சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி யதற்கு நன்றி தெரிவித்த வுடன் இந்த ஓடையின் கரை ஓரமாக பொதுமக்கள் செல்லும் வசதியாக சாலை அமைத்து தர வேண்டும் எனவும், மேலும் சுகாதார கேடு ஏற்படாதவாறு இந்த ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பால கிருஷ்ணன், சுந்தரம் பிள்ளை, சுயம்புலிங்கம் சிவசங்கரன், வீரபாகு மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).

    இவரது மகள் ஆரல்வாய் மொழி அருகே செண்பக ராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.மகளை பார்ப்பதற்காக இன்று காலை ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் தோவாளை அருகே முத்து நகர் பகுதியில் குருச டிக்கு செல்லும் சாலை யில் திரும்பும் போது நெல்லை யிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஜோசப் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார். பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜோசப் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.அவரது மோட்டார் சைக்கிளும் பஸ்சுக்கு அடியில் சிக்கியது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட் டார் சைக்கிளையும் சக்க ரத்தில் சிக்கிய ஜோசப்பை யும்போலீசார் போராடி மீட்டனர்‌.

    பின்னர் ஜோசப்பின் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜோசப் பலியானது குறித்து அவரது மகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகளை பார்க்க வந்த இடத்தில் தந்தை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கியில் பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசையா?
    • போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய் மொழி மாதவலாயம் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருபவர் ரஹ்மத்துல்லா (வயது 68). இவரது வீடு சோழபுரம் கைகாட்டி மெயின் ரோட்டில் உள்ளது.

    ரஹ்மத்துல்லா தனது மனைவி சீனத் பீவியுடன் மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்த மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பதும் பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது, ரூ. 3 லட்சம், 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக ரஹ்மத்துல்லா தெரிவித்தார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். இதனால் அதனை நோட்டமிட்ட யாரோ சிலர் தான் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களான பெருமாள்புரம், வடக்கு பெருமாள்புரம், தோவாளை, மாதவலாயம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வரு வது அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் சம்பவங்களை தடுக்க அந்தப் பகுதி இளைஞர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டம்கூட்டமாக தெருக்களைச் சுற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் பைக் திருடிய வாலிபர்களை பிடித்து போலீசிடம் தகவல் கூறிய போது, நாங்கள் என்ன செய்ய முடியும் நீங்களே அழைத்து வாருங்கள். கொள்ளையர்களுக்கு காயம் ஏற்பட்டால் உங்கள் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதாகவும் இதனால் திருடர்களை பிடிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் சைக்கிள் திருடிய வாலிபர்களை பிடித்து நேரடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த போதும்கூட எந்த நடவடிக்கையும் இல்லை. என பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளார்கள்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் எல்லா போலீஸ் நிலையங்க ளிலும் தனிப்படை அமைத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இன்று காலை பரிதாப சம்பவம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி யில் இருந்து நெல்லைக்கு அரசு சொகுசு பேருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.பஸ்ஸை டிரைவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.

    வெள்ளமடம் பகுதியில் பஸ் சென்ற போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 85 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மீது பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பலியான மூதாட்டி வெள்ள மடம் பகுதியைச் சேர்ந்த செண்பக வடிவு (வயது 85) என்பது தெரிய வந்தது.

    அவர் அந்த பகுதியில் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது பஸ் மோதி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×