search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை புதிய சாலை

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை செல்வதற்கு பாதை வசதி சரியாக இல்லாமல் இருந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் மேல கிருஷ்ணன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனிடம் ஒரு புதிய சாலை உருவாக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் துரித நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் ராஜகுமாரி கலைக்கண்ணன், மகேஷ் பாபு, சிவக்குமார், சுபாசெல்வராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 32 பணிமனைகள் உள்ளன .

    அரசு பஸ்களில் பொதுவாக டிரைவர், கண்டக்டர்கள் 100 சதவீதம் ஆண்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சேலம், நாமக்கல், மாவட்டத்தில் 4 பேரும், தர்மபுரியில் 4 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பணி மனையில் லதா என்பவர் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தாரமங்கலம், மேட்டூர் அரசு டவுன் பஸ்சிலும், ராசிபுரம் பணிமனையில் இளையராணி என்பவர் ராசிபுரம், சேலம் வழித்தடத்திலும் இயங்கும் அரசு பஸ்சிலும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    இதே போல் அனுசியா என்பவர் பெங்களூரு, சேலம் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார். தருமபுரியில் 2 பெண்கள் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். வாரிசு வேலையின் அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ண–னுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியானது 1.8.2022 முதல் தொடங்கி 31.3.2023-க்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவிகித தூய்மை–யாக்குவத ற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.

    வாக்காளரிடமிருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள். வாக்கா–ளர்கள் தங்களது வாக்குச்சா–வடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்ப–டையில் படிவம் 6பி-ன் மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்க–லாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ன் மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்ப–திவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியினை மேற்கொள்வர். வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal மற்றும் Voter Helpline App மூலமாக இணைக்கலாம்.

    வாக்காளர்கள் இசேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்த–லின்படி முதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 04.09.2022 அன்று நடைபெற இருக்கிறது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்க–லாம்.

    அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி. அஞ்சலகம் மூலம் வழங்க–ப்பட்ட புகைப்படத்துடள் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்க ப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பி–னர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை உள்ளி–ட்டவை மூலமாக வாக்கா–ளர்கள் சமர்ப்பிக்கலாம்.

    எனவே வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதி–களின் வாக்காளர் பட்டிய–லின் 100 சதவிகித பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், எதிர்வரும் 1.4.2023-க்குள் அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
    • இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி, ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது காவிரி ஆற்றுக்குள் இருந்த பாறை களை உடைத்து காவிரி ஆற்றுக்குள் மழை போல் குவியல் குவியலாக போட்டனர்.

    இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர்.

    இந்த கருங்கற்கள் மலை போல் குவிந்து கிடப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து வரும்போது தண்ணீர் காவிரி ஆற்றில் வேகமாக செல்ல முடியாமல் சோழசிராமணி காவிரி கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

    எனவே பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கருங்கற்களை ஏலம் விட்டு அகற்ற வேண்டும் என சோழசிராமணி பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
    • 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டு வார்டு 10 திருவள்ளுவர்சாலை (குமரன் நகர்) பகுதிகளில் பொதுசுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், கணிதவியல் துறை தலைவருமான விக்னேஷ்குமார் செய்திருந்தார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது.

    இதில் இன்போசிஸ், டி.வி.எஸ்., எச்.டி.எப்.சி. மற்றும் க்யு ஸ்பைடர் மென்பொருள் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களின் வளாக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முஹம்மது சதக் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராஹிம் பணி நியமன சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், கணிதவியல் துறை தலைவருமான விக்னேஷ்குமார் செய்திருந்தார்.

    • குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்புப்பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. அப்போது கமிஷனர் விஜயகுமார் பேசுகையில், பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்புப் பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகராட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

    குப்பைகள் கொட்டக்கூ டாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் 50 மரக்கன்று கள் நடப்பட்டன இதில்

    பொறியாளர் ராஜேந்தி ரன், சுகாதார அலுவ லர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என நாளொன்றுக்கு இரு வேளையிலும் மாநகராட்சி பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சென்று ராட்சத மருந்து தெளிக்கும் எந்திரம் மூலம் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று மாஸ் கிளினிக் என்ற பெயரில் மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
    • இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் நிலக்கரி லோடு மிக அதிக அளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. அதனை அகல ரெயில் பாதையாக மாற்றினர். ஆனால் மேட்டூர் அணைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்திற்கு கடந்த 2012- ஆண்டு மத்திய அரசு ரூ.220 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை ரெயில்வே நிர்வாகம் ெதாடங்கியது. இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது மேட்டூர் அணை- மேச்சேரி ஒரு பகுதியாகவும், மேச்சேரி- ஓமலூர் ஒரு பகுதியாகவும், ஓமலூர்- சேலம் ஒரு பகுதியாகவும் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் இரு கட்ட பணிகள் நிறைவடைந்து, அப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பணியாக சேலம் - ஓமலூர் இடையே சுமார் 15 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை தற்போது ெரயில்வே கட்டுமானப்பிரிவு தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை தண்டவாளங்களை அமைக்க இடத்தை தயார்படுத்தினர்.

    தொடர்ந்து தற்போது சேலம் ஜங்சன் யார்டு பகுதியில் இருந்து ரெட்டிப்பட்டி, மேக்னசைட் வழியே புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியை இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது இணை தண்டவாள பாதையாக விளங்கும். இந்த பணியை விரைந்து முடித்து மின்வழித்தடத்தையும் ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 2-ம் நிலை காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov.in

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பணியில் உள்ள ராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov. என்ற இணையதள முகவரியில் 7.7.2022 முதல் 15.8.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு வலியுறுத்தல்
    • மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு இயக்குனர் டன்ஸ்டன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. கடலோரப் பகுதிகளில் கனிம மணல் அள்ளுவதால் கடல் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை உள்ளது. கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    ஆனால் அதே சமயம் நீண்ட கடற்கரையை இயற்கையாக பெற்றிருந்த குமரி மாவட்டம் அதை இழந்துவிட்டது. கடற்கரை மணல் அகழ்வு நடப்பதால் கதிரியக்கம் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோயால் கடற்கரை மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    மணல் ஆலைக்கு அருகில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் ஆண்டிற்கு ஏறக்குறைய 100 பேர் புற்றுநோய்க்கு உயிரிழந்து வருகிறார்கள். எனவே கடலரிப்பு மற்றும் கதிரியக்க பாதிப்புகளை உருவாக்கும் மணல் ஆலையை உடனே மூடவேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக அரசு மணல் ஆலை நிறுவனத்துக்கு கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து 1144 ஹெக்டேர் நிலப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதி மக்களிடம் எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் இந்த அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    மக்களிடம் கருத்து கேட்டு இருந்தால் நாங்கள் குறைகளை தெரிவித்து இருந்தி ருப்போம். எனவே சுற்றுச்சூ ழலுக்கும், மக்கள் உயிருக்கும், கடற்கரை கிராமங்க ளுக்கும் அழிவை ஏற்படுத்தும் மணல் அகழ்வு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் அனுமதியை ரத்து செய்யவில்லை எனில் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பங்குதந்தை சூசை ஆன்டனி, மீனவர் பிரதிநிதிகள் பிரான்சிஸ், சேவியர் மனோகரன், மரிய தாசன், மெர்பின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×