search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்களிப்பு"

    • 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    திருப்பூர்:

    தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரி கே.ஜி.முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, புத்தகம் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவுகூறும் வகையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கிய கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் 'தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக உமறுப்புலவர், தாயுமானவர், சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள போப் ஜான்பால் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    இக்கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட த்திலுள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
    • எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

    எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.
    • தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

    தஞ்சாவூர் :

    தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் தமிழறிஞருமான சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை சாா்பாக 2021 ஆம் ஆண்டுக்கான திறனாய்வுச் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது.

    தமிழ் மொழி, இலக்கியம், தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

    2022 ஆம் ஆண்டுக்கான விருது 2020 - 21 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோா், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம்.

    தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.

    விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப்படும்.

    விண்ண ப்பங்கள், பரிந்துரைகள் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் ந. சுப்புரெட்டியாா் - திறனாய்வுச் செம்மல் விருது, பதிவாளா் (பொறுப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டுள்ளது.
    • பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக முதல் முதலாக இரண்டாம் நிலை காவலராக 1993-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஒரே ஆண்டில் அதாவது ஜூன் 9 ,16 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாவட்டங்களில் சுமார் 3500 காவலர்கள் பயிற்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த 2019-ம் ஆண்டு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டது.

    இந்த வாட்ஸ் அப் குழு மூலம் காக்கும் கரங்கள் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை இறந்த காவலர்களுக்கு 10 பங்களிப்பு பகிர்ந்து அளித்து அதில் மறைந்த மற்றும் பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மாவட்டத்தில் மறைந்த தஞ்சை நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 6000 வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    மறைந்த முருகேசன் மனைவி தனரேகா, மகன்கள் ஜெகன், ஆதித்யா ஆகியோரிடம் அந்த நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1993-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×