என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226724"
- மேலூர் செக்கடி பஜாரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் நாளை முதல் சந்தைப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
- மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது .
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜாரில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த மார்க்கெட்டின் கட்டிடங்கள் பழமையானதாகவும் இடிந்து விழும் நிலையிலும் இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் ரூ. ஏழேமுக்கால் கோடி மதிப்பீட்டில் 110 கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
சில நாட்களுக்கு முன் அங்கு மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது . அதனை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட்டை மேலூர் சந்தைப்பேட்டைக்கு தற்காலி–கமாக இடமாற்றம் செய்வதற்காக அங்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 110 கடைகள் கட்டப்பட்டது.
ஆனால் திடீர் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அங்கு செல்ல மறுத்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை செய்தனர்.
அதன் பிறகும் காய்கறி வியாபாரிகள் செல்ல மறுத்ததால் நகராட்சி தலைவர் காய்கறி சங்க வியாபாரிகளை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தருவதாகவும், பொதுமக்கள் வந்து செல்ல வசதி செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
அதன் பேரில் காய்கறி சங்க வியாபாரிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். மேலூர் செக்கடி பஜாரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் புதிய கடைகள் கட்டும் வரை சந்தைப்பேட்டைக்கு தினசரி காய்கறி மார்க்கெட் மாற்றி நாளை முதல் அங்கு செயல்படும்.
பொதுமக்கள் சந்தைப்பேட்டையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்க நகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டனர்.
- பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
- தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
ஈரோடு, ஜூன். 9-
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.
இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
இந்நிலையில் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து, மார்க்கெட் பழைய இடத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் மாற்றி அமைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.
இதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் விடுபட்ட பகுதியில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
- மேலூரில் ரூ.8.87 கோடியில் அரசு மருத்துவமனை, மார்க்கெட் கட்ட பூமி பூஜை நடந்தது.
- நகராட்சி சேர்மன் முகமது யாசின் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
மேலூர்
மேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஆதரவற்றோர் மற்றும் நோயாளிகள், காப்பாளர்கள் தங்கும் இல்லம், தினசரி மார்க்கெட்டில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 185 புதிய கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
நகராட்சி சேர்மன் முகமது யாசின் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், அரசு தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் செந்தில் குமார், துணைத்தலைவர் இளஞ்செழியன், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர்கள் சைபு நிஷா அலாவுதீன், கமால் மைதீன், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்