search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
    • தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    சர்வதேச அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் எட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ண ரேகா என்பவரும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 25-ந் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்த நிலையில் நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற கிருஷ்ண ரேகா 2 போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தங்க பதக்கம் வென்ற தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உடன டியாக கிருஷ்ண ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இந்த வெற்றியானது குமரி மாவட்ட காவல் துறைக்கு பெருமையை சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கைக்குழந்தைகளுடன் மையங்களுக்கு வந்தவர்கள் உறவினர்களிடம் கொடுத்து சென்றனர்
    • தேர்வை எழுத 11 ஆயிரம் பேர் வரவில்லை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வில்லை.

    இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதி யில் குரூப் 4 தேர்வு தொடர் பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் வெளியிடப் பட்டது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7,382 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தேர்வு எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். குமரி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்பாணை ஆன்லை னில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் அதை பதிவிறக்கம் செய்தனர். அதில் தேர்வு மையம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வு எழுதுபவர்கள் அந்தந்த மையம் எந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஒரு சிலருக்கான தேர்வு மையத்தை கண்டுபிடிப்ப தில் சிக்கல் ஏற்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட பகுதி யில் உள்ள இளைஞர் கள், இளம்பெண்கள் பல ருக்கு மேற்கு மாவட்ட பகுதி யில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர்கள் இன்று காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். பெண்களை தங்களது பெற்றோர் மற்றும் கணவர்கள் இருசக்கர வாகனங்களில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி, குமரி மெட்ரிக் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 38 மையங்களில் குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காலை யிலேயே தேர்வு மையத் திற்கு வந்திருந்தனர். அவர்கள் பலத்த பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.

    ஒரு சில பெண்கள் கை குழந்தைகளுடனும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றபோது தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் கை குழந்தையை கொடுத்து விட்டு சென்றனர்.

    கால்குலேட்டர், செல் போன்கள் போன்ற எலக்ட்ரா னிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து செல்போன்களை தங்களது உறவினர்களிடம் சிலர் கொடுத்து சென்றனர். மற்றவர்கள் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போன்களை வைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.

    தேர்வு மையத்திற்கு சென்ற இளம்பெண்களை அழைத்து வந்த பெற் ேறார்கள் தேர்வு மையத் திற்கு வெளியே கொழுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த னர். தக்கலை, குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி, மார்த்தாண் டம், கருங்கல் உள்பட மாவட்டம் முழு வதும் 240 மையங்களில் இன்று தேர்வு நடந்தது தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    240 வீடியோ கிராபர்கள் மூலம் தேர்வு முழுவதும் பதிவு செய்யப்பட்டது. தேர்வை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் மற்றும் 240 அலுவலர்கள் 48 மொபைல் பறக்கும் படையினர் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் தேர்வுக்கு 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 11 ஆயி ரத்து 568 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை. 59 ஆயி ரத்து 884 பேரே தேர்வை எழுதினர்.

    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
    • குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிப்பு உள்ள பகுதிகளில் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழு வதும் 742 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,367 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அரவிந்த் முடுக்கி விட்டு உள்ளார்.

    மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங் களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் கழிந்து விட்டால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து இன்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம், தெல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு காலையிலேயே பொது மக்கள் வந்திருந்தனர்.

    கூட்டம் குறைவாக இருந்ததால் தடுப்பூசி போடவந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகா தாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் உள்ளே சென்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசியை செலுத்தி னார்கள். ெரயில் நிலையங் களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று குவிந்தி ருந்தனர். அதில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது.

    தக்கலை, ராஜாக்க மங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 1500 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், பொது மக்கள் வந்திருந்த னர். மதியம் 2 மணி வரை 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தது.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • கோட்டார் சாலை இன்று 2-வது நாளாக சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலை 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் மழை பெய்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.மழையின் காரணமாக தொடர்ந்து கோட்டார் சாலை இன்று 2-வது நாளாக சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, தக்கலை, ஆரல் வாய்மொழி, புத்தன் அணை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கே ரம்மியமான சூழலும் நிலவி வருவதால் கேரளாவில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 19.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1 அணையில் இருந்து பாச னத்திற்காக 99 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.32 அடியாக இருந்தது. அணைக்கு 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60 அடி எட்டி யது. அணைக்கு 143 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 28.63 அடியாகவும் உள்ளது.

    • கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் தொற்று கண்டறிவது குறித்த எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை வழங்கியுள்ளது. நமது மாவ ட்டத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நடமாடும் நுண்க திர் வாகனத்தில் பொருத்த ப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி, மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்-ரே-க்களை உடனு க்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில 10 எக்ஸ்-ரே எடுக்கும் திறன் கொண்டவை.

    குமரி மாவட்ட நிர்வா கத்தால் நோய் ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதால் கடந்த 10 ஆண்டுகளில் காச நோயாளிகளின் எண்ணி க்கை 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காசநோய் தொற்று வகிதம் 20 சதவீகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்திய மானது.

    இதனைப் பாராட்டும் விதமாக அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்தக வணிகர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் விதமாக 35 நபர்களுக்கு பாரா ட்டுச் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (காசநோய்) துரை, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மருத்துவர்கள் பிரதீப், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை
    • ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் இன்று பக்ரித் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் கழிந்த 2 ஆண்டுகளாக பள்ளி வாசல்களில் பக்ரித் பண்டி கை கூட்டு தொழுகை நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கொண்டாட்டங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்

    100-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல் களில் சிறப்பு கூட்டு தொழு கையுடன் பக்ரித் பண்டி கையானது கொண்டாடப்பட்டது.

    அழகியமண்டபம், திருவி தாங்கோடு, குளச்சல், நாகர் கோவில், இளங்க டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் குடும்ப த்தினர்களுடன் கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.தவ்ஹீத் ஜமாத் சார்பில் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு பகுதியில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டதோடு ஒருவொ ருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக் களை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • கன்னியாகுமரி மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந் தாய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பொது சுகாதாரத்துறை யின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பினை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்த காலத் திற்குள் முடிக்க சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டு மான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்தத்தாரர்களை இனம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சார்பாக செயல்படுத்தி வரும், கூட்டு குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தி னரால் குழாய்கள் அமைக்க தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்றவாறு சீர்படுத்தி, சாலை விபத்தினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

    குழாய் அமைக்கும்போது தோண்டப்படும் குழிகளால் ஆபத்து ஏற்படாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். தங்கள் பணிகளில் மெத்தன போக் காக இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத் தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    பேரூராட்சிகளில் நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தங்கும் இடங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செயல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படுவ தோடு, ஒரு மாத காலம் கடைகளை சீல் வைக்க வேண்டும்.

    அனைத்து துறை அலுவலர்களும் நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முழு முயற்சியோடு பாடுபட வேண்டும். பணிகளில் எவ்வித சுணக்கமும், தொய்வுமின்றி செயல்பட வேண்டும். தவறும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ மாணவர்கள் உள்பட 47 பேருக்கு புதிதாக தொற்று
    • நாளை (சனிக்கிழமை) அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்து வந்தது.

    அதன் பிறகு பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது. திருவட்டார், மேல்புறம், குருந்தன்கோடு ஒன்றியங்களில் ஏராளமா னோர் பாதிப்புக்கு உள்ளா னார்கள். இதை தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். இருப்பினும் நாகர்கோவில், தோவாளை, தக்கலை பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த வார இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ நெருங்கியிருந்தது. இதனால் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தினமும் 900-க்கும் மேற்பட்டவருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 938 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதில் 25 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 3 குழந்தைகளும் அடங்கும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.

    ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை யில் இருந்து வருகிறார் கள். இந்த நிலையில் நேற்று மேலும் 2 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இதை யடுத்து சக மாணவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இன்று வரை 35 நாட்களில் குமரி மாவட் டத்தில் 1217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள் பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் பலரும் செலுத்தவில்லை.

    எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனை வரும் பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று உடனடியாக தடுப்பு செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை சனிக்கிழமை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    • பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலே சிகிச்சை
    • பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 991 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டதில் 31 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 4 குழந்தைகளும் அடங்கும்.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள்.

    • கடந்த ஜனவரி முதல் 20,353 பேர் பாதிப்பு
    • மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த சுகாதார துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 718 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 65 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் ஆண்கள், 40 பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20,353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


    • முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. பதிவு
    • அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது. பூதப்பாண்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலை 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் கடை வீதிகள் மற்றும் கோவில்களுக்கு வந்த பொதுமக்கள் குடை பிடித்த வாறு சென்றனர். சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, இரணியல், ஆணைக் கிடங்கு, குளச்சல், அடையாமடை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 12.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலியிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.97 அடியாக இருந்தது. அணைக்கு 474 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 631 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது.

    அணைக்கு 189 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 210 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 13.19 அடியாக உள்ளது. அணைக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 30.51 அடியாகவும் உள்ளது.

    சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இதனால் குமரி மாவட்ட எல்லை பகுதி களில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளிலும் அதிகாரிகள் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழுவதும் 1158 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 92 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் ஆண்கள், 56 பேர் பெண்கள் ஆவார்கள்.

    நெல்லையில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில் 5 பேரும், கிள்ளியூரில் 8 பேரும், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தோவாளையில் தலா 7 பேரும் தக்கலையில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு மாவட்ட பகுதகளில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக மேல்புறம், முஞ்சிறை, குருந்தன்கோடு, திருவட்டார் ஒன்றியங்களில் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    மேல்புறம், குருந்தன்கோட்டில் தலா 12 பேரும், முஞ்சிறையில் 15 பேரும், திருவட்டா ரில் 10 பேரும், பாதிக்க ப்பட்டு ள்ளனர். கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்கி வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் 775 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதாவது கடந்த ஆறு மாதத்தில் 20,189 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொேரானா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    சனிக்கிழமையான நாளை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.

    ×