என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227108"
- வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
- நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பெரு விளையை சேர்ந்தவர் மறைந்த பிரபல காண்ட்ராக்டர் முத்துலிங்கம். இவரது மகனும் பெருவிளை தெய்வி முருகன் ஆலய தலைவர் மற்றும் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவருமான வி.எல்.ஆர். குரூப்ஸ் சேர்மன் வெற்றி வேலன்-லதா வெற்றிவேலன் தம்பதி யினரின் மகள் முத்து ரூபி. இவருக்கும், அளத்தங்கரை ராஜாராம்-தேவகுமாரி ராஜாராம் தம்பதியினரின் மகன் டாக்டர் ராஜரெத்தினம் என்ற ரெகுராமுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.
திருமண விழா ஏற்பாடு களை வெற்றிவேலன்-லதா வெற்றிவேலன், மணமகள் சகோதரரும், வி.எல்.ஆர். குரூப்சின் நிர்வாக இயக்குன ருமான முத்துவருண் மற்றும் வெற்றிவேலன் சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- காப்பகத்தில் ஒப்படைப்பு
- ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.
கன்னியாகுமரி:
ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.
கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்
- திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அருகே மேல பெரு விளையை சேர்ந்தவர் அபிஷா (வயது 21).
இவருக்கும் கீழப்பெரு விளையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந்தேதி திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்தார்.இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அபிஷா கணவர் வீட்டில் இருந்து தாயார் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் அபிஷாவின் வீட்டில் யாரும் இல்லை.அவர் மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது அபிஷாவை காண வில்லை. அவர் தாலிச் சங்கிலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி னார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அபிஷாவின் தாயார் சந்திரா ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அபிஷா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அபிஷாவை மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது அவர் கணவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அபிஷாவை சமாதானம் செய்து அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
- கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
- இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
ஆசாரிபள்ளம் அருகே உள்ள பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் கவிதா (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கிருஷ்ணகுமார் தற்போது ஊரில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக கணவன் - மனைவிக் கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதையடுத்து கவிதா தனது தாயார் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிதா தனது 6 வயது மகளுடன் திடீரென மாயமானார்.
கவிதாவின் பெற்றோர் மற்றும் கணவர் கிருஷ்ண குமார் ஆகியோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை.
இதையடுத்து கவிதா வின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மாயமான மகள் மற்றும் பேத்தியை கண்டு பிடித்து தருமாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாயமான கவிதாவின் செல்போன் உதவியுடன் அவரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
- கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்
நாகர்கோவில்:
சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.
- வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
- பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.
நாகர்கோவில்:
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் தொடர்ந்து விசாரணை
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் பெரு விளை சானல் கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர் தனது மொபட்டை பக்கத்து வீட்டில் உள்ள காம்பவுண்டுக்குள் நிறுத்துவது வழக்கம். சம்பவத்தன்றும் மொபட்டை அங்கு நிறுத்தி இருந்தார்.
அப்போது மொபட்டில் அவரது கணவர் வெளி நாட்டிலிருந்து அனுப்பிய ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து இருந்தார். மறுநாள் காலையில் மொபட்டை பார்த்தபோது அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருந் தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தினார்கள்.சம்பவ இடத்திற்கு வந்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருட்டு வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ஆசாரிபள்ளம் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதியவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனையில் அருகில் உள்ள வார்டு அருகே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மேரிபா வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை செய்து வருகிறார்.
- நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறி யாளர் ஜவகர் முத்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உபமின் நிலையங்களிலும் மற்றும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு,
காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி.ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், ேதாப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சக்குளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், பழவிளை, தாராவிளை, எறும்புக்காடு, ஆலங்கோட்டை, சூரப்பள் ளம், பேயோடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாக தவறாக சித்தரித்ததாக புகார்
- போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சாலை பணிகள் நிறைவு பெறும் முன்பே அப்பணிகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறாக சித்த ரித்து போஸ்டர் அடித்து பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளார். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவதூறு செய்துள்ளார்.
மேலும் இதில் இந்த சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த நபர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 5 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைக்கு நேற்று இரவு புகார் தெரிவிக்கப்பட்ட 5 பேருடன் காங்கிரசார் பலரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.அப்போது புகார் அளித்த நபரை விசாரணைக்கு அழைக்கா மல் காங்கிர சாரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர்கள் பிரவின் சிஜுன், சந்தியா சுப்ரமணியன், அருள் சபிதா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆசாரிப்பள் ளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் போராட்டத் தில் ஈடுபட்ட காங்கிரசாரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் காங்கிரசார் செல்ல மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீ சாருக்கும் காங்கிரசா ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் எதிர் புகார் மனுதாரரை அழைத்து பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது. இதை யடுத்து காங்கிரசார் மீது புகார் அளித்த நபர் மீது காங்கிரசார் ஆசாரிப்பள் ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
- கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
- உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
- தரமற்ற உணவு தயாரித்ததால் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் அங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உணவருந்த வசதியாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.மேலும் தனியார் மூலமாகவும் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் உணவகத்தை சீல் வைத்து மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மாநகர நகர்நல அதிகாரி பொறுப்பு ஜான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ஆல்ரின்,வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் இன்று காலை அந்த உணவகத்திற்கு சென்றனர்.
அங்கு மதியம் உணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு தயார் செய்த உணவுகள் அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் சீல் வைக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் உணவகத்தில் உள்ள உணவு கூடம் மிக மோசமாக இருந்தது.
மேலும் இங்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டபோது தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்