என் மலர்
நீங்கள் தேடியது "slug 227938"
- மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
- முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதார ண்யம் தாலுகா, வாய்மேடு போலீஸ் நிலையத்தில், போலீசார் சார்பில் தகட்டூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், போலீசார் பணி பற்றிய ஓவிய போட்டியும் நடத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி. முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், கார்த்திகேயன், எஸ்ஐ செல்வராசு, சிறப்பு இன்ஸ்பெக்டர் வாசு, நிலைய எழுத்தர் மதியழகன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
- ஓட்டப்போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை படைத்தார்.
- பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி என இரண்டிலும் பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவரின் சாதனையை பள்ளியின் பொருளாளர் கல்பனா தேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக மேலாளர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார்.
- மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
- மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் உலக மாணவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலு முன்னிலையில் போட்டி நடைபெற்றது.
போட்டியின் நடுவராக பட்டதாரி ஆசிரியர் சந்திரன் செயல்பட்டார்.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் ஷர்மிலி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தலைமை யாசிரியர் பாலு கூறுகையில், துளிர் வினாடி- வினாவில் மாணவர்கள் கலந்து கொண்டால் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு எளிதில் வெற்றி பெற முடியும்.
மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு இதன் மூலம் போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
- தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
ஊட்டி,
ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் நீலகிரி மாவட்டம் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவன் ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை அஸ்மா காணும் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.
பாராட்டு விழாவில் மாணவர் ஷாஸ்வத் மற்றும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் 2-வது இடமும், மாவட்ட அளவிலான 200 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
- மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.
பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட அளவிலான போட்டிக்கு பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
பரமக்குடி
பரமக்குடி வட்டார அளவிலான குழு மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனித்திறன் போட்டிகளில் தட்டெறிதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், கம்பு ஊண்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தனித்திறன் போட்டிகளிலும் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
இந்த மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கீழமுஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாகத்அலி, தாளாளர் ஜாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடந்தது
- தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில்
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா சதுரங்க கழகம் துவக்க விழா தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சதுரங்க கழக தலைவர் டி.கே. அமிர்தாசந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் புவனேஸ்வரி தனபால். இணைச்செயலாளர் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா வக்கீல் ஜி. பிரசாந்த், பாலசமுத்திரம் விஜயலட்சுமி மெட்டல் . முத்துக்குமார், பொறியாளர் மாரியப்பன் நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகப்பா, மருதை கார்த்திகைபட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவி, எம். புத்தூர் தீபன்ராஜ், ஓவிய ஆசிரியர் செந்தில் குமார், சந்திரகுமார், பார்கவி, முருகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க கௌரவ பொறுப்பாளர்கள் தொட்டியம் வட்ட அனைத்து வணியர்கள் சங்க தலைவர் பிரபு, நிர்மலா, ஆட்டோ மொபைல்ஸ் பூபதி, ஆசிரியர்முகமதுஃபரூக், உள்பட சதுரங்க கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்பு நடந்த நான்காவது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொட்டியம் வெற்றி விநாயகர் கல்லூரி சேர்மன் ஜி.சேகர், கல்லூரி முதல்வர்கள் அருள்குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் வழங்கினார் .
- மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
- முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ராஜூ நினைவு அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி, திண்டுக்கல் அணி, வாடிப்பட்டி உள்பட 11 அணிகள் மோதுகின்றன.
தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ராஜா வரவேற்றார். எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளை சாமி, சரவணன், சந்திர மோகன், ராமசாமி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
- போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.
இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.
- சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
- ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.
இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.
- மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பதக்கம் வென்றனர்.
- 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகள் மேலக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தடகளபோட்டிகளில் 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். குழுப்போட்டிகளில் 10 போட்டிகளில் இந்த பள்ளி மாணவிகள் முதல் பரிசையும், 5 போட்டிகளில் 2-வது பரிசையும் வென்று மொத்தம் 119 பரிசுகளை பெற்று அரசு பள்ளிகளிலேயே அதிக பரிசு பெற்ற பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தினர்.
சாதனை படைத்த மாணவிகளை தலைமையாசிரியர் கர்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஜெயராமன், மேலாண்மைக்குழுத்தலைவர் ஸ்ரீதேவிசண்முகபாண்டி ஆகியோர் பாராட்டினர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியைகள் நவமணி, பாலன், சர்மிளா ஆகியோரையும் பாராட்டினர்.
- 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.
- காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.ஒவ்வொரு போட்டியிலும், 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவிகள் பிரிவில் மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன. அனைத்து குழு விளையாட்டு போட்டிகளும் முடிந்த நிலையில், தடகள போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய தடகள போட்டிகள் வருகிற 12, 13ம் தேதி 2 நாட்கள் நடக்க இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், தற்காலிகமாக குறுமைய தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து குறுமையங்களிலும் தடகள போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.