search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228109"

    • கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் சேவை துறைகளில் டெல்லி மாநில அரசு அதிகாரம் செலுத்துவதை தடுத்துள்ளது.

    இதையடுத்து மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் அந்த அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில் மிக பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    • பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி ஜி-20 கல்விப் பணிக்குழுவின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா திருவாரூர் அடுத்த அலிவலத்தில் நடைபெற்றது.

    இதில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    அலிவலம் ஊராட்சி தலைவர் நிர்மலா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    தொடர்ந்து, பயனாளி களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அலுவ லர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்க்கா, மனோஜ், பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் , பள்ளிக்கல்வித்துறை மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இப்பேரணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    இந்தப் பேரணி ஜூபிடர் தியேட்டர் முன்பு முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, தாசில்தார் சக்திவேல், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை ஏ.டி.எஸ்.பி.மதியழகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி பாலக்கரை வழியாக சென்று புது பஸ்ஸ்டாண்டில் முடிவடைந்தது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமதாஸ், நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் 300-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது

    அரியலூர்,

    அரியலூரில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயன்ஸ் பெனிடிக்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன பயிற்றுநர் ராஜேஸ்வரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியானது திருச்சி சாலை, பிரதான கடைவீதி, ஜெயங்கொண்டம் சாலை வழியாக சென்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நிறைவடைந்து. அங்கு அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் பேரணியை முடித்து வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் அவர் சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
    • "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி பானர்ஜி பங்கேற்றார்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பேரணியானது ரெயில் நிலையம் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, பைக் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து,

    நடந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், ,சீர்காழி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சீர்காழி காவல் இன்ஸ்பெ க்டர் சிவகுமார், தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.

    100க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த பைக் ஓட்டிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் முக்கூட்டு, ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த, வீரபா ண்டியன், முத்து, ஜெயா, மற்றும் ராஜா பங்கேற்றனர்

    • ராஜபாளையத்தில் மே தின விழா பேரணி நடந்தது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பேரணி கொட்டும் மழையில் நடந்தது. ஜவகர் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி கலைமன்றம், மதுரை சாலை, காந்திசிலை ரவுண்டானா வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரவி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் லிங்கம், நகரச் செயலாளர் விஜயன் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, சோமசுந்தரம், சுப்பிரமணியம், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கட்டிட கலைஞர் நலச்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது,

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி கட்டிட கலைஞர் நல சங்கத்தின் சார்பில் 2 ம் ஆண்டாக பேரணி, சங்க கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் எஸ். கண்ணன் தலைமையில், சட்ட ஆலோசகர் வி.கந்தசரவணகுமார் முன்னிலையில் நடந்தது.

    மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக தொடங்கி சிவநாதபுரம் வழியாக கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்தனர். திருவள்ளுவர் நகர், சிவநாதபுரம், கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பு கட்டிடக்கலைஞர்கள் நல சங்க கொடி ஏற்றப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியானது கூட நாணல், விண்ணமங்கலம், பூதலூர் சென்று மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.
    • ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் திருச்சி மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், திருக்காட்டுப்பள்ளி கிளை சங்கம் மற்றும் 11 சங்கங்கள் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    பேரணியை திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஜெயக்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியை வாழ்த்தி திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், வழக்கறிஞர் ஜெயக்குமார், சங்க மாவட்ட செயலாளர் அன்பு ராஜா, மாவட்ட பொருளாளர் செல்வமணி, கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்நாதன், வரகூர் கார்த்திகேயன், வக்கீல் ரமேஷ், இளங்காடு தங்கதுரை, திருக்கா ட்டுப்பள்ளி பெரியண்ணன், சாகுல் ஹமீது ஆகியோர் பேசினார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி நிர்வாகிகள் திராவிட மணி ,கிள்ளிவளவன் ,தாமஸ், சதீஷ், பாபு வரதராஜ், விஜயகுமார் ,செல்லையா, ஜீவா உள்ளிட்ட ஏராளமா னோர் ஹெல்மெட் அணிந்த படி பேரணியில் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கிய பேரணி கூட நாணல் ,விண்ணமங்கலம், பூதலூர் சென்று விட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.

    பேரணி தொடங்குவதற்கு முன்னதாக திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.

    ஓசூர்,

    ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு, தனியார் தொழிற்சாலைகளின், 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னதாக ஓசூர் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. இதனை, தொழிற்சங்க நிர்வாகி ராதா தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.

    பின்னர், அங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, முனியப்பன் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்திரசேகர், சக்திவேல், காளிங்கன், மாதேஷ், வனவேந்தன், குமணன் ஆகியோர் பேசினர். முடிவில், பாபு நன்றி கூறினார்.

    ×