search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
    • மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடத்தினார்.

    மதுரை

    மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில் 9-வது வார்டில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் திருப்பதி, பா.ஜ.க. கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்தர், கண்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசம்பன், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவா சன், மாநில கூட்டுறவு பிரிவு மாணிக்கம், கல்வாரி தியாகராஜன், நாகராஜன், செல்வ மாணிக்கம் உள்பட கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் நடத்தும் மாபெரும் பொன்னியின் செல்வன் பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறும்.

    இதில் பொன்னியின் செல்வன் அரண்மனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் கூடிய செல்பி பாயிண்ட் இடம்பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கொண்டாடி மகிழ வித விதமான ராட்டினங்கள், ஜெயன்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம்,ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3-டி ஷோ திகிலூட்டும் பேய் வீடு, போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் விற்பனையாகிறது.

    பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகரசபை துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    • அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
    • நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் பஸ் நிலையம் அருகே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேலூர் ஆர். சாமி நினைவாக அ.ம.மு.க. கட்சிகொடியேற்று விழா, நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.பேரவை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான டேவிட் அண்ணாதுரை கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் கட்சி அலுவலகம் அருகே உள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார். மேலூர் ஆசையன் சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி தலைவர் கமல், நகர் துணைச் செயலாளர் செல்வம், சுக்காம்பட்டி ராசு, பேரவை வாசுதேவன், முன்னாள் கவுன்சிலர்கள் அன்புக்கரசு, சோனை, பெரியதுரை, கொட்டாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் புருசோத்தமன், துரை, பிச்சன்செட்டி, நத்தர் அலி, வக்கீல்கள் முத்தையா, சுரேந்திரன், மேகவர்ணன், சிட்டம்பட்டி முருகேசன், கீரனூர் பிச்சை ராஜன், மில்கேட் ராஜேந்திரன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வகுப்பறை கட்டிடம், கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும்.

    சிவகங்கை

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வகுப்பறை கட்டிடங்கள், நுழைவு வாயில், கலையரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும். ஓலைக்கொட்டகையில் தொடங்கப்பட்டு அதன் பின்னர் ஓடுகள் அமைத்தும், தற்போது கான்கிரீட் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக 500 மாணவர்கள் படிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் கட்டிடத் திறப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் 115-வது ஆண்டு விழா முப்பெரும் விழாவாக கொண்டா டப்படுகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் இருந்து வருவது குறித்து, இங்கு எடுத்துரைத்தனர்.

    எதிர்கால சந்ததியினர்களாகிய மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறுவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்து வதற்கென மேலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து அரசுடன் இணைந்து செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நூற்றாண்டு விழா காணும் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூற்றாண்டு நுழைவுவாயில் அமைப்பதற்கும், சூரியமின் சக்தி, புதிய கணினிகள், பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு, அரசுடன் இணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பள்ளி நூற்றாண்டு விழாவில் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு கொடை யாளர் பங்களிப்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன், தனது சொந்த நிதியில் இருந்தும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    மாநில அளவில் சிலம்ப போட்டியில் 2-வது இடத்தை பெற்ற மாணவனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை யும், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொ கையாகவும் வழங்கினார்.

    இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். கல்லல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சியப்பன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
    • போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோடை காலத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோா் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் காவல்துறை சார்பில் திறக்கப்பட்டது
    • மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தண்ணீர் பந்தலை அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் பொது மக்களுக்கு அவர், நீர்மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், வெங்கடேசன் , அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோடை கால நீர்-மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திறந்து வைத்தார்.
    • தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் கோடைகால நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட பேரவை செயலா ளர் சேது பாலசிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ் ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தைவாசல் முன்பு கோடை கால நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

    மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக்குமாரிடம் வழங்கினார்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தை வாசல் முன்பு கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

    மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் இளங்கோ வன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக் குமாரிடம் வழங்கினார்.

    • திருமானூர் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது
    • மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தண்ணீர் பந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய குழு துணை உறுப்பினர் அம்பிகா ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், மகாலட்சுமி கருணாநிதி, கோவிலூர் சரவணன், ராஜேஸ்வரி ஜம்புலிங்கம், ரவி, சதாசிவம், டி.வி.கார்த்திக், ஜே கே கார்த்திக், குருவாடி முருகேசன், அரசு ராஜேந்திரன், சபரிநாதன், சௌந்தர், முரளிதரன், டி.எம்.ராஜா, அயோத்தி, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.

    ×