search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார தலைமைப் பதியில் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கியது. 8-ம் திருநாளான 30-ந் தேதி மாலையில் அன்னதானமும், இரவில் அய்யா வைகுண்டரின் இகனைதிருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று அகிலத்திரட்டு திருயேடு வாசிப்பும், குறும்பலாபேரி பெரும்பனையூர் தெருவில் உள்ள அய்யா நிழல் தாங்கள் பதியில் இருந்து கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது. இரவில் அய்யா வைகுண்டரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் சுவாமிதோப்பு குரு பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். திருவிழாவில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டும் ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.

    இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருப்பத்தூர் மாவட்டம் திருமால்நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

    • சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சமாதானபுரம் 11-வது வார்டு மங்கம்மாள் சாலை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் மங்கம்மாள் சாலையையே பயன்படுத்தி வரும் நிலையில் குடியிருப்புகள் வருவதற்கு முன்பாக சாலையின் மையப் பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் தற்பொழுது பொதுமக்கள் அச்சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் செல்வதற்கு ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியாத சூழ்நிலையால் பெற்றோர்கள் அருகில் உள்ள மற்றொரு தெருவில் கொண்டு தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர்-பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 11-வது பெற்றோர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவி ஸ்ரீ நிவிதா வரவேற்று பேசினார்.

    மாணவி ஜெய் வர்ஷிதா வரவேற்று பேசினார். மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டு தனித் திறமை போன்ற அனைத்து பரிணாம வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்க வேண்டி யது நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாண வர்கள்.

    இதனை உறுதி செய்யும் விதமாக பள்ளியின் நிர்வாகியும் பள்ளியின் முதல்வருமான நித்யா தினகரன், ஆசிரியர்களின் சார்பாக ராஜம்மாள், பெற்றோர்களின் சார்பாக விழாவிற்கு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவியும், பள்ளி மாணவரின் பெற்றோருமாகிய பொன் சீலா பரமசிவன் மாணவர் களின் சார்பாக குழந்தைகளுடன் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    மாணவிகள் தனிஷா, விஜய ரக்ஷா மற்றும் ஆஸ்மி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தி னர் பொன்சீலா பரமசிவன் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கி பள்ளி வளாக சாலை மேம்பாட்டிற்காக ரூ. 26 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

    சிவசக்தி வித்யாலயா பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பு களில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளின் பரதம், நடனம், ஸ்கேட்டிங் மற்றும் கராத்தே போன்ற துறைகளில் கலை வெளிப் பாடுகள் அரங்கேற்றப் பட்டன.

    தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் பள்ளிக்குள் பள்ளி களுக்கு இடையில் நடை பெற்ற பல்வேறு போட்டி களில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்கள், கேடயங்களும் வழங் கப்பட்டன.

    மேலும் பள்ளியில் அறிவுறுத்தப்பட்ட உணவு பட்டியலை இக்கல்வி ஆண்டு முழுவதிலும் தவறாமல் கடைப்பிடித்த பெற்றோர்களை ஊக்கு விக்கும் விதமாக அவரவர்களின் குழந்தைகளின் கையாலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

    மழலை பருவத்தில் இருந்து பொது அறிவில் சிறப்பு பயிற்சி கொடுப்பதே பள்ளியின் சிறப்பு. அதனை நிரூபிக்கும் விதமாக பள்ளி ப்ரீ கே.ஜி. குழந்தைகள் தமிழ்நாட்டின் சின்னங்கள் என்ற தலைப்பிலும்,

    எல்.கே.ஜி. குழந்தைகள் தேச தலைவர்களின் படங்களை அடையாளம் காணுதல் என்ற தலைப்பிலும்,

    யு.கே.ஜி. குழந்தைகள் சாலை விதிக்கான குறியீடு களை அடையாளம் காணு தல் ஆகியவற்றிற்கு பார்வை யாளர்களின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

    மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் ஆகியோர்களின் பங்களிப்பை அழகாய் வெளிப்படுத்தும் விதமாக மாணவர்கள் அதற்கேற்ற பாடல்களுடன் தங்களின் அன்பை வெளிப்படுத்தி நடனம் ஆடிய விதம் அனை வரையும் நெகிழ வைத்தது.

    மாணவி ரச்சிதா மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மேலும் வகுப்பு வாரியாக உள்ள குழந்தை களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களால் மகிழ்ச்சி யான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாண வர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினரால் பரிசு கள் வழங்கப்பட்டன.

    விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாணவ- மாணவிகளே தொகுத்து வழங்கி நடத்தினர். முடிவில் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலா பேரி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திற்குள் குறும்பலாபேரி கிராம மக்களுக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பில்லர்கள் அனைத்தும் கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டியை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறும்பலாபேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • 6 கிராமத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவியநகர் வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    அறவழி போராட்டம்

    இந்த சாலைகளை திப்பணம்பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி, பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனை கண்டித்து 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அறப்போராட்டத்திற்கு சமூக சேவகர் காசிமணி தலைமை தாங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார் பாண்டியன், துரைசாமி, உத்திர குணபாண்டியன், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா என்ற அருள் பாண்டி, கல்லூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் மேரி மாதவன், சீனிவாசகம், அயோத்தி ராமர், பூவனூர் ஞானபிரகாசம், ஜோசப், வார்டு உறுப்பினர் சுப்புராஜ், தங்கப்பழம், சண்முக செல்வன், முருகன், அண்ணாதுரை, சண்முகம், பொன்னுதுரை, ஜெய குட்டி, அமல்ராஜ், ஜெயபால், வழக்கறிஞர் உமாபதி, வைகுண்டராஜ், காமராஜ், குத்தாலிங்கம், கவிதா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
    • சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து காண ப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் புதிய சாலை அமைத்திட கோரி பொதுமக்கள் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் வழங்கி வந்தனர். தற்போது அங்கு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கூறுகையில்,

    இந்த சாலையானது கடந்த ஆண்டு ஊராட்சி ஒன்றிய சாலையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வே.வேலுவை சந்தித்து பேசினர்.

    அதன் பலனாக சேதமடைந்த சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக அரசு ரூ.4கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரைக்கும் நன்றி என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேலும் திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, அரியப்புரம், பூவனூர் பொதுமக்கள் சார்பாக, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • துணை தாசில்தார் காதர்மைதீன், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில் ராமசாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் காதர்மைதீன் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவுடையனூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கிராம நிர்வாக அலுவலகத்தை பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதில் தமிழன் மக்கள் நல சங்க நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா நடத்தப்பட்டது.
    • சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. உச்சிகால பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. மாலை சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர்.
    • 3 கொள்ளையர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலை ஓரத்தில் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

    கொள்ளை முயற்சி

    அப்போது உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர். அப்போது கோவிலில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றவர்களை பார்த்து அவர்கள் சத்தமிட்டனர்.

    உடனே கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். முருகன், ஜெகநாதன், சுமன், இசக்கிமுத்து, ஜோதி உலகம்மாள், நாகராஜன், பாண்டியராஜன் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடிதொழிலாளர் சங்க இணை செயலாளர் ஆரியமுல்லை கற்பகவல்லி, அய்யாச்சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொரணம் ஆகியோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

    • பாவூர்சத்திரத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடை பெற்றது. பாவூர்சத்திரம் துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் வரவேற்று பேசினார்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஓவியஆசிரியர் தமிழன் தொகுத்து வழங்கினார். முடிவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    ×