என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவணம்"
- ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
- இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.
இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.
இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.
திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.
ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
- வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கன்னியக்குடி கிராமத்தில் அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சீர்காழி கார்டன் மறுவாழ்வு மையம் மற்றும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கன்னியக்குடி கிராமத்தில் புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் இடத்தை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து இடத்தை ஆர்ஜீதப்படுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். பயனற்று கிடந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும் என கலெக்டர் லலிதா உறுதி அளித்தார்.
- இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தலைஞாயிறு,அக்கிரகாரம் ஆகிய இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம் ,பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருடு போயின.
- இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விராட்டிபத்து, முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டனர்.
ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பியபோது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யன் (வயது48). இவர் பெரிய ரதவீதியில் கார் மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிர மணியன் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்த மணி வண்ணன், முருகன், முத்து மாரி, தீபா ஆகிய 4 பேரும் என்னிடம் போலி ஆவணம் வாயிலாக 6.23 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சென்றனர். அதனை அவர்கள் திருப்பி தரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர் பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பண த்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பி டப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வு பிரிவு போலீ சார் மணிவண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்