என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலாளி"
- நண்பகல் 12.30 மணியளவில் அடைக்கப்படும் நடை பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும்
- 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நண்பகல் 12.30 மணியளவில் உச்ச பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கும். 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.
சம்பவத்தன்று மாலை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்த பக்தர் ஒருவர் மாலை நடை திறப்பதற்கு முன்பாக மண்டைக்காட்டிற்கு வந்தார்.வெளியே காத்து நின்ற அவரை அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
இதனை பார்த்த லட்சுமி புரம் மருத்துவர் காலனியை சேர்ந்த பிரமுகர் பிரதீப் (வயது 43) என்பவர், நடை திறக்கும் முன் அவரை எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என கேட்டு கோவில் காவலாளி குமார தாசிடம் தகராறு செய்தார்.பின்னர் குமாரதாசை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவில் காவலாளி குமாரதாசை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
- மோட்டார் சைக்கிள் மீட்பு
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே.தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45).
இவர், தனியார் நிறுவ னத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராதா (42). இவர்களுக்கு அனுஸ்ரீ, சுபஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் முருகன் சொத்த விளை பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத் தது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ் பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக் டர்கள் ராபர்ட் செல்வசிங், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரை யும் கவ்வி பிடிக்க வில்லை.
இதையடுத்து போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக முருகனின் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முரு கனை வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றதாக கூறி னார்.
எனவே அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து விசா ரணை நடத்தப்பட்டது. விசாரணையில் முருகனை அழைத்துச் சென்றவர் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீ சார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.
எனவே இந்த கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் முருகனின் மோட்டார் சைக்கிள் மாயமானது குறித் தும் விசாரணை நடத்தி னார்கள்.
அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டி ருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். முருகனை கொலை செய்துவிட்டு அவரது நண்பர் மோட்டார் சைக் கிளை பஸ் நிலை யத்தில் நிறுத்திவிட்டு வெளி யூருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீ சார் கருதுகிறார்கள்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தலைமறைவாகியுள்ள பீச் ரோட்டை சேர்ந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டு இருந்ததும் அந்த மோட்டார் சைக்கிள் மாயமான பிரச்சனையில் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்ட சாலை ஆகும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
எனவே அவரை வெளியே எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.ஒரு நபர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை வேறு சிலருக்கும் தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தலைமறைவாகியுள்ள முருகனின் நண்பரைப் பிடித் தால் தான் கொலைக் கான முழு விவரமும் தெரிய வரும்.
- படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.
நாகர்கோவில் :
கொல்லங்கோடு அருகே பாலோடு மணலி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58).
இவர் சூழல் பகுதியில் உள்ள சிமெண்ட் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கேரளா காரோடு தேவர்புரத்தைச் சேர்ந்த வினு (40) என்பவர் டிரை வராக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வினு வண்டி யில் சிமெண்ட் மூட்டை களை ஏற்றினார்.
இது குறித்து பணியில் இருந்த காவலாளி அர்ஜுனன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வினு காவலாளி அர்ஜுனனை பிடித்து கீழே தள்ளினார்.கீழே விழுந்ததில் அர்ஜு னனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து அவரது மகன் அனீஸ் கொல்லங் கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வினு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள வினுவையில் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ள. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வினு கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந் துள்ளனர்.
- பெருமாள் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- மோசஸ் என்பவர் பெருமாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது70). இவர் சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பெருமாள் தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அவர் தூத்துக்குடி-விளாத்திகுளம் சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். காரில் வந்த விளாத்திகுளம் வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த மோசஸ் (22) என்பவர் உடனடியாக பெருமாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெவ்வேறு சம்பவங்களில் கார் மோதி 2 காவலாளிகள் இறந்தனர்.
- ஆஸ்டின்பட்டி மற்றும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருமங்கலம், சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் பாலவீரன் (வயது 40). திருப்பரங்குன்றம் கல்லூரியில் இவர் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். நேற்று இரவு கூத்தியார்குண்டு-கரடிக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அகதிகள் முகாம் அருகே, வேகமாக வந்த கார் பாலவீரன் மீது மோதியது. படுகாயம் அடைந்த பாலவீரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலக்கால் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 48). மதுரை அரசினர் மருத்துவமனையில், வாட்ச்மேனாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று இரவு இவர் நண்பர் வேல்முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மதுரை- மேலக்கால் ரோட்டில், வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராமன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர்
- காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிக்கு காப்புக்காடு பகுதி மங்காட்டான்விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் காயம் பட்டதாக கூறி சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அஜீத், அபிஷ் ஆகியோரும் சென்றுள்ளனர். மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர். இதை ஆஸ்பத்திரி காவலாளி மனோகரன் (வயது 55) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித், கண்ணன், அபிஷ் ஆகியோர் காவலாளி மனோகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மருத்துவமனை உரிமையாளர் ஆல்வின்லால் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனியார் கல்லூரி காவலாளி கார் மோதி பலியானார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி .
மாரியப்பன் மதுரையில் உள்ள கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சைக்கிளில் சமயநல்லூர்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்
அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் ரத்த வெள்ள த்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திண்டு க்கல் மாவட்டம் சின்னாள பட்டியை சேர்ந்த தினேஷ் பாபு மீது ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழிலாளி கைது
- ரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்தினகுமார் (வயது 35) இவர் சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணி புரிகிறார்.
சம்பவத்தன்று திங்கள் நகர் ரவுண்டானா அருகே வந்து கொண்டு இருந்தார்.அப் போது செய்யூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28) மற்றும் இருவர் மது போதையில் சந்தனகுமாரை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த சந்தனகுமார், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- மதுரை அருகே தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காவலாளி மாயமானார்.
- கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜகிரி (வயது 55). இவர் வக்கீல் புதுத்தெருவில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 13-ந் தேதி கருப்பு கலர் பேண்ட், வைலட் கலர் சட்டை அணிந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மனைவி மகாலட்சுமி (46) கொடுத்த புகாரின் பேரின் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.
- பலத்த காயம் அடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளகோவில்:
பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 54) . இவர் திருப்பூரில் உள்ள ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரும் இவரது மனைவி பாரதி (45) ஆகியோர் நேற்று இரவு திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.
பாரதி பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்தார். வேல்முருகன் பஸ்சின் பின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அரசு பஸ் நேற்று இரவு 11.40 மணி அளவில் வெள்ளகோவில் அருகே வெள்ளமடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேல்முருகன் பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்