search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மல்லியக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செங்குகவுண்டர் என்கிற சாமியார் (வயது 72). இவர் கடந்த 5 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கடை போடாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும்கடை போட்ட செங்கு கவுண்டரிடம் குத்தகை தாரர்கள் விடு முறை நாட்களுக்கும் சேர்த்து சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலை யத்தில் செங்கு கவுண்டர் கொடுத்த புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
    • தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேலும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

    • கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரி
    • சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்சி,

    கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரியான இவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து செல்வார். கடந்த 17ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இரு தினங்களாக அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் பாபு பணமாக கிடந்தார்.

    அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய சோதனையில் அதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றதற்கான சீட்டு மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆகவே உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதி அருகில் வியாபாரி பிணமாக கிடந்த சம்பவம் அந்த விடுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

    • கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 7 பறக்கும் படைகள் அமைக்க ப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கஞ்சா வழக்குகளில் சிக்குபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குண்ட சட்டம் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பணகுடி சிவகாமி புரத்தைச் சேர்ந்த ராமைய்யா (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அரவிந்த் கஞ்சா வியாபாரி ராமையாவை குண்ட சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார். ராமையா குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • வியாபாரி உள்பட 4 பேரை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜித் (வயது 20). இவர் நேதாஜி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவர் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அஜித் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லை நகர் திருவள்ளுவர் தெரு ஜெகதீஸ்வரன் என்ற எலி (வயது 25), தரகன் தெரு பெரியசாமி மகன் ஸ்ரீதர் (23), கார்த்திக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாண்டி (29). இவர் நேற்று நள்ளிரவு விளாங்குடி காய்கறி கடை அருகே நடந்து சென்றார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்ததாக அதே பகுதியை சேர்ந்த விளாங்குடி டேவிட் என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (40). இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் ஓட்டலுக்கு வந்தபோது வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் தெரு வெள்ளைச்சாமி மகன் பாண்டியராஜா (20), கூடல்புதூர் இமயம் நகர் உதயகுமார் மகன் மொட்டை மணி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
    • உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 68) வியாபாரி. இவர் இன்று அதிகாலையில் மார்த்தாண் டம் மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சொகுசு கார் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன் பரிதாபமாக பலியானார்.

    இதையடுத்து விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசையா?
    • போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய் மொழி மாதவலாயம் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருபவர் ரஹ்மத்துல்லா (வயது 68). இவரது வீடு சோழபுரம் கைகாட்டி மெயின் ரோட்டில் உள்ளது.

    ரஹ்மத்துல்லா தனது மனைவி சீனத் பீவியுடன் மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்த மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பதும் பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது, ரூ. 3 லட்சம், 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக ரஹ்மத்துல்லா தெரிவித்தார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். இதனால் அதனை நோட்டமிட்ட யாரோ சிலர் தான் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களான பெருமாள்புரம், வடக்கு பெருமாள்புரம், தோவாளை, மாதவலாயம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வரு வது அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் சம்பவங்களை தடுக்க அந்தப் பகுதி இளைஞர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டம்கூட்டமாக தெருக்களைச் சுற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் பைக் திருடிய வாலிபர்களை பிடித்து போலீசிடம் தகவல் கூறிய போது, நாங்கள் என்ன செய்ய முடியும் நீங்களே அழைத்து வாருங்கள். கொள்ளையர்களுக்கு காயம் ஏற்பட்டால் உங்கள் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதாகவும் இதனால் திருடர்களை பிடிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் சைக்கிள் திருடிய வாலிபர்களை பிடித்து நேரடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த போதும்கூட எந்த நடவடிக்கையும் இல்லை. என பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளார்கள்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் எல்லா போலீஸ் நிலையங்க ளிலும் தனிப்படை அமைத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் சந்தை பகுதியில் கடை நடத்தி வருபவர் மகேஷ் (வயது 41). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்திய போது, 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    • வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
    • வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்க கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் கடைவீதியில் நடைபெற்றது கூட்டத்திற்கு பல்லடம் சங்க தலைவர் ராம்.கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சங்க கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றவும். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும். வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

    பல்லடத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும். கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். பெதப்பம்பட்டியில் நிலவும் கால்வாய் பிரச்சனைக்கு அரசு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். தவறினால் போராட்டம் விரைவில் நடத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, செஸ், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்றவையால் விலைவாசி உயர்வு அடைய காரணமாக அமைகிறது. அவற்றை நீக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    தற்போது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.இது மேலும் உயர்ந்து 35 சதவீதமாக உயரும் ஆபத்து உள்ளது. விலைவாசி உயர்விற்கும் வியாபாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செலவுகள் உட்பட அசல் விலையுடன் சேர்த்து லாபம் வைத்து பொருள் விற்பனை செய்வது மட்டுமே வியாபாரியின் வேலை. அந்த பொருட்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் மக்கள் தான். அதனால் அதன் விலையேற்ற சுமையை மக்கள் தான் ஏற்கிறார்கள். பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய,மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. அதனை செயல்படுத்த ஆட்சியாளர்களை கோரிக்கைகள் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.இதில் கோவை மண்டல தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் லாலா கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது.
    • அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. சண்முகம் தற்போது தனது மாமியார் ஊரான செல்லிகவுண்டனூரில் வசித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் சண்முகம் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அந்தியூர் ரோட்டில் குறிச்சி பிரிவு என்ற பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    ×