search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    தொண்டமங்கிணம் ஆதிசிவன் கோவிலில் நடந்தது

    குளித்தலை, 

    குளித்தலை அருகே கடவூர் வட்டத்திற்குட்பட்ட தொண்டமாங்கினத்தில் உள்ள குள்ளாயிஅம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிசிவன் சுயம்பேஸ்வரர் கோவிலில் மஹா சிவன்ராத்திரியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு ஆதி சிவன் வழிபாட்டு மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக 108 திருவிளக்கு பூஜை, மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகளும் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை எண்ணி மலர்கள் தூவி திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சிவன் வழிபாட்டு மன்றத்தினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று மாலை கரகம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    வெளிநாட்டிலுள்ள தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்க வலியுறுத்தபட்டது

    அரியலூர்:

    வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்டு அவைகளை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் தமிழரின் வரலாற்றில் திருப்பு முனை உருவாகும் என்றார் மொழி அறிஞர் ம.சொ.விக்டர்.அரியலூரில் தமிழ் வழிக்கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த நாள் மற்றும் உலக தாய்மொழி நாள் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: உ.வே.சா தமிழ்மொழி வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் தமிழ் பணிக்கு அரியலூர் மண் பெரும்பங்காற்றியுள்ளது.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தான் உவேசா வுக்கு அதரவு அளித்து தமிழ் கற்றுகொடுத்து அவர்களின் தமிழ்ப்பணிக்கு துணை நின்றனர். உவேசா கரங்களுக்கு கிட்டாத கணக்கில் அடங்கா ஓலைச் சுவடிகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பாதுக்காக்கபடுகிறது. அவை அனைத்தையும் மீட்டு வந்து நாம் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் உலகில் தமிழரின் வரலாற்றில் புதிய திருப்புமுனை உருவாகும் என்றார்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்க்களம் நிறுவனர் புலவர் அரங்கநாடன் தலைமை வகித்தார். ஓவியர் முத்துகுமரன், தமிழ்ச்சித்தர் துரைவேலூசாமி, கவிஞர் அறிவு மழை, ஓவியர் அன்புச்சித்திரன், வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவி காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக தமிழக் களம் இளவரசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாண்டியன் நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் விழா நடைபெற்றது.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுரை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் 2ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயளர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை பாஸ்கர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி, மகேஸ்வரி நாதசுரம் இசைக்கப்பட்டது. திருமானூர் பரதநாட்டியம் கிருபாதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் நிகழ்ச்சியில் புண்ணியமூர்த்தி, வடிவேல் முருகன், ஜெயபாலன், சத்தியசீலன் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, கைலாகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் லயன் சங்கம் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    • கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்கு பள்ளி நிறுவனர் மணி தலைமை தாங்கினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிநாதன் கலந்து கெண்டு பேசினார்.

    அவர் பேசும் போது இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நமது நாட்டின் தூண்கள். மாணவர்கள் அறிவியல் மேதைகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், கலெக்டர்களாகவும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.

    இதில் பள்ளியில் படிக்க கூடிய கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்ட மளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முடீவில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ், பள்ளி செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் நன்றி கூறினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • அரியலுாரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ.40.91 இலட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கும் பணிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஈஸ்வரன், செயற்பெறியாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சியை காரைக்குடி பல்கலைக்கழக பேராசிரியர்இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராஜேந்திரன், அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பே.முத்துசாமி, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளார் சாலை செந்தில் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு...

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா நடந்தது. நடந்த விழாவிற்கு கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் சண்முக சுந்தரம், முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், டாக்டர் கோசிபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை...

    கரூர் :

    நொய்யல் அருகே முனியாதபுரத்தில் காவிரி கரை அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைமாத கடைசி நாளை முன்னிட்டு முனியப்பசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ெதாடர்ந்து மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேசினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசினார்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு அவர் பேசும்போது, மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், வார இறுதி நாள்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்சியில், பெரம்பலூர் ஒன்றியத்தி லிருந்து 49 மாணவர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்திலிருந்து 65 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து 31 மாணவர்களும், வேப்பூர் ஒன்றியத்திலிருந்து 51 மாணவர்களும் என மொத்தம் 196 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளை, மாவட்டத்தில் உள்ள 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சி வகுப்பில் அளிக்கப்படும் அறிவுரைகளையும், நுணுக்கங்களையும் கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வை எளிதில் எதிர்கொண்டு, அனைவரும் மருத்துவ ர்களாக வர வேண்டும். கல்விக்காக உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • அரியலூரில் செயல்முறை கிடங்கு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு அமைப்பதற்கான பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டு கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்: கயர்லாபாத் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 3ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.496.84 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமடம் வட்டம் விளந்தை கிராமத்தில் 2ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.402.52 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 2 கிடங்குகள் ரூ.899.36 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தற்போதைய கிடங்குகளின் உணவுப் பொருள் சேமிப்பின் கொள்ளளவு 5,500 மெ.டன் உள்ள நிலையில், கூடுதல் புதிய கிடங்குகளின் கொள்ளளவு திறனுடன் 10,500 மெ.டன் சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவாக உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைத்து பொதுவிநியோகத் திட்டத்திற்கு வழங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சித் தலைவர் செளந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    • திருச்சியில் 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு தளம் திறப்பு விழா நடைபெற்றது
    • புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டபட்டது

    திருச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலி–ருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அதவத்தூரில் 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், கலந்து கொண்டு குத்து–விளக்கேற்றி சேமிப்பு கிடங்கு வளாகத்தினை பார் வையிட்டார். இதில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பால–முருகன், வட்டாட்சியர் குணசேகரன், உதவி செயற் பொறியாளர் ராஜி, உதவி பொறியாளர் சிவக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், பொது–மக்கள் கலந்து கொண்டனர்.

    • முக்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை அருகே உள்ள கட்சிரான்பட்டி கிராமத்தில் உள்ள முக்கரை விநாயகர் பூரண புஷ்கலாம்பிகா சமேத அய்யனார், ஆகாச கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக ஆலயங்கள் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூ ஜை, கோபூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவினை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    ×