search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • ஆலங்குடியில் அரசு பள்ளிகளுக்கு டெஸ்க்- பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது
    • இதன் மூலம் 350 பள்ளி மாணவ, மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளுக்கு டெஸ்க் பெஞ்ச் வழங்கும் விழா மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றியம் சன்விடுதியில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு 16, மழவராயன்பட்டி ஆரம்ப பள்ளிக்கு 16, வம்பன் பள்ளிக்கு 5, கொத்தக்கோட்டை ஊராட்சியில் தோப்புக்கொல்லை 11, கல்யாணிபுரம் 16 என மொத்தம் 64 டெஸ்க்பெஞ்ச் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் 350 பள்ளி மாணவ மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.டெஸ்க் பெஞ்சுகளை மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் வழங்கினார். மழவராயன்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், மாஞ்சன்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்கண்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராணி, உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆரோக்கியசாமி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கிளை தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


    • மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீகுமார் பேச்சு
    • பள்ளி ஆண்டு விழா

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியின் 8வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் ஹேமா அனைவரையும் வரவேற்றார்.பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் 7பேர் தேர்வு செய்து நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.விழாவில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் சிறப்பு விருச்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றி பேசியதாவது.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இளம் பருவம் முதல் வாழ்க்கையில் உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்து நேர்மையாக வாழ்ந்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். அப்படி உயர்ந்த இடத்தை அடைவதற்கு படிப்பு மிகவும் முக்கியம் எனவும் பேசினார். விழாவை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிதுணை தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆர்.பிரபு மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்
    • தைத்தேர்விழா நிறைவு

    திருச்சி, 

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைத் தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினர். இதையொட்டி மாலை 3 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு புறப்பட்டு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் உத்திரவீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர். பின்னர் வாகன மண்டபம் வந்தடை அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத் தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 9 வகையான திரவிய பொடிகளில் அபிஷேகம்
    • சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பா ள் பிரசித்தி பெற்ற உடனுறை அரங்குள நாதர் கோவிலில் தை மாத பிரதோஷத்தை யொட்டி சிவன் சன்னதியில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்த னம் உள்ளிட்ட 9 வகையான திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றதுபின்னர் மூலஸ்தானத் தில் உள்ள சுயம்புலிங்க சிவபெரு மான், பெ ரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட் டது. பின்னர் சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து 3 முறை கோவில் பிரகா ரத்தில் பக்தர்கள் உலா வந்தனர்.இதேபோல் காசிக்கு வீசம் கூட என்று அழைக்கப்படும் திருவிளை யாட்பட்டி திருமூலநாதர்- திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்த ரேஸ்வரர்-மங்களநாயகி அம்பாள் கோவில், திரும லை ராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர்- கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர் கலங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய ரெகுநாதபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கபிலர்மலை வட்டார அட்மா தலைவரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் கபிலக்குறிச்சி ஊராட்சி துணைத் தலை வர் குணவதி, ஆடிட்டர் சம்பத்குமார், பி.டி.ஏ தலைவர் கோபால், நேரு யுவகேந்திரா ஒன்றிய பொறுப்பாளர் தனபால், தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை நடைபெறுகிறது
    • சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நடைபெற உள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 30 மணிக்கு பள்ளியின் வளாகத்தில் நடைபெற உள்ளது என பள்ளி தாளாளர் பி. முருகேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரில் மிகச் சிறப்பாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் கார்த்திக் ராஜா , ராதிகா ஜெகதீஸ்வரி, செல்வமணிகண்டன், நிரஞ்சன், இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் இன்ஜினியர் ராம்குமார், திருச்சூரில் கனரா வங்கியின் உதவி மேலாளராக பணிபுரியும் சினேகா பொய்யாமொ ழியு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் 2021 -2022 கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி நிசாந்தி பெயரில் நிஷாந்தி பிளாக் என்று பெயரிட்டவளாகத்தை மாணவி கையால் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். பள்ளியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒன்பது நபர்களுக்கு ஹீரோ ஸ்கூட்டி வழங்கப்படும் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பி முருகேசன், நிறுவனர் பரமசிவம், முதல்வர் உமா மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.இவ்விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள்கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.

    விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலைக்கு செல்லும் சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக சேந்தமங்கலம் ஜல்லிகட்டு விழா சங்கத்தின் சார்பில் ஜல்லிகட்டு விழா நடந்தது.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அட்மா குழு தலைவர் அசோக்குமார், துணை தலைவர் தனபாலன், ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்த சேந்தமங்கலம் தி.மு.க., நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு விழா சங்க நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    • நாகர்கோவில் கோர்ட்டு இன்று தீர்ப்பு

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 26).

    இவர் கடந்த 2013-ம் ஆண்டு பூதப்பாண்டி பகுதி யில் குத்தி கொலை செய் யப்பட்டார். அவரது நண்பர் தினேஷ் படுகா யம் அடைந்தார். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் பூதப்பாண்டி மேலரத விடுதியைச் சேர்ந்த வசந்த் (24) உள்பட 5 பேரை கைது செய்தனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் சுபாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட வசந்த் உள்பட 5 பேரும் ஜாமீனில் விடுதலை செய் யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இன்று வசந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட வசந்திற்கு கொலை வழக்கிற்கு ஆயுள் தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். கொலை முயற்சி வழக்கிற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து போலீசார் வசந்தை கைது செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார்.

    • அரியலூர் அருகே கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
    • மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. கொடுக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தோற்றம், மக்களின் பொருளாதார நிலைமை, பழக்க–வழக்கங் கள், வாழ்க்கை–முறை, குடும்ப கட்ட–மைப்பு என்ற ஒவ்வொரு அம்சங்களிலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பேராசிரியர் சண்முக–வேலாயுதம் எழுதிய கொடுக்கூர் அன்றும் இன்றும் தலைப்பிலான நூலை சென்னை வாழ்க வளமுடன் பதிப்பகம் வெளியிட்டது. விழாவுக்கு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் சண் முகசுந்தரம் நூலை அறிமு–கம் செய்து பேசினார். லிங்கத்தடிமேடு வள்ளாலர் கல்வி நிலைய செயலர் கொ.வி.புகழேந்தி, நூலை வெளியிட்டு பேசினார். நூலாசிரியர் முனைவர் க.சண்முகவேலாயுதம் பேசுகையில், ஆரம்பகாலத் தில் புன்செய் நிலங்களாக காணப்பட்ட கொடுக்கூர் கிராமமானது இன்று முந்திரிக் காடுகளாக விருத்தியடைந்த கிராமமாக காட்சியளிக்கின்றது. கொடுக்கூர் இன்றைய நிலை, அன்றைய நிலை, மாற்றங்கள், மாற்றங்களுக்கான காரணிகள், தற்போ–தைய சவால்கள், மேம்படு–வதற்கான வாய்ப்பு–கள், பரிந்துரைகள் என்ற தலைப்புகளில் மாவட்டத்தின் ஒட்டு–மொத்த கிரா–மங்களில் நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தனி நபர் வருமானம், மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது. அரியலூர் மாவட்டம் பிந்தங்கியதற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்திற்கு இம்மா–வட்டம் பயிற்சி களமாக உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து பின்தங்கிய நிலையை ஒழிப்பதற்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் என ஒவ்வொரு துறைக்கும் ஒரு குறிப்பிட்ட உத்தியை மாவட்ட நிர்வாகமும், மாநில நிர்வாகமும் சரியான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு மூலம் வகுக்க வேண்டும் என்றார்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்றது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிப்பட்டம் திருவீதி உலா வந்த பின் கொடிமரத்திற்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பக்தி பரவசத்துடன் கொடியேற்றப்பட்டது. மேலும் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • கலெக்டர் கொடியேற்றினார்
    • 10லட்சம் மதிப்பில் 94 பேருக்கு நலத்திட்ட உதவி

    பெரம்பலூர்:

    இந்தியத்திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா முன்னிட்டு பெரம் பலுார் மாவட்ட கலெக் டர் அலுவல க பெருந் திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் காவல்துறையில் சிறப் பாக பணிபுரிந்த 18 காவ–லர்களுக்கு முதல–மைச்சர் பதக்கங்களையும், 47 காவலர்களுக்கு நற்சான்றி–தழ்களையும் வழங்கினார்.

    விழாவில் குடியரசு தின போலீசார் அணிவகுப்பிற்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் பத்பநா–பனும், இரண்டாம் படைப் பரிவிற்கு ஆயுதப்ப–டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சீ மானும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயு–தப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் சந்திர–போசும் தலைமை–யேற்று வழி நடத்தி சென்ற–னர்.

    மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தி சென்றார். முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு மானியத்தையும், மாவட்ட மாற்றுத்திறனாளி கள்நலத்துறையின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பிலான திறன் பேசியினையும்,

    தோட்டக்கலைத்துறை–யின் மூலம் தேசிய தோட் டக்கலை இயக்கத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மினி டிராக்டர் எந்திரத்தையும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.1.லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பவர் வீடர் கருவியினையும், ஆதிதிராவிடர் நலத்துறை–யின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.5,ஆயிரத்து 580 மதிப்பி–லான மின்மோட்டா–ருடன் கூடிய தையல் எந்தி–ரத்தை–யும் மேலும் பல்வேறு துறை–களின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட–பிரியா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    ×