என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது.
    • கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை யில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் 48-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது. 27-ம் தேதி முதல் வரும் 3-ம் தேதி வரை தினந்தோறும் அம்ம னுக்கு அபிஷேகமும், அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.


    4-ம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 5-ம் தேதி மாலை அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் புறப்பட்டு ‌‌‌‌சந்தைபேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து அம்புசேர்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் பேட்டை‌ புதுமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


    அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு ப‌ரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.


    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


    • நவராத்திரி 3-வது நாள் விழா நடந்தது
    • அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தா

    பெரம்பலூர்

    நவராத்திரி 3-வது நாள் விழாவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்."

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
    • அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 41-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி உற்சவ அம்மனுக்கு நேற்று முன்தினம் மதுரகாளியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரை மீனாட்சி அலங்காரமும், இன்று (புதன்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30-ந்தேதி துர்க்கை அலங்காரமும் நடக்கிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 2-ந் தேதி மாரியம்மன் அலங்காரமும், 3-ந் தேதி லட்சுமி அலங்காரமும் நடக்கிறது.

    இதையடுத்து, 4-ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 5-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்

    • நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளிய ம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடை பெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனைகள் நடத்தப் பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். வருகிற 4-ந்தேதி ஆயுதபூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. 5-ந்தேதி விஜயதசமியன்று மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. மேலும் கோவிலில் நவராத்திரி கொழு வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் உற்சவ அம்மனுக்கு மரகதவல்லித்தாயார் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே 5-ந்தேதி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு வாலாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில்களில் நடந்த நவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். 

    • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பசுமைத் தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக் கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, பல்கலைக்கழக துணை–வேந்தர் திருவள்ளுவன் நினைவு பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்வில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி செழியன், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சை மாவட்ட வன அலுவலர்அகில்தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன், துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

    நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார்.

    நாகை மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன்.எம்எல்ஏ, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு போட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர் வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர் பயிற்சி வெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனால் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் ராஜா கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

    • திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி விளையாட்டு விழா நடந்தது
    • மத்திய மண்டல ஐ.ஜி. கலந்துகொண்டார்

    திருச்சி:

    சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் அங்கமான திருச்சி மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான க்ரிடோத்சவம் என்ற தலைப்பில் விளையாட்டு விழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பரிசளிப்பு மற்றும் நிறைவு விழாவில், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் முயற்சி ஒன்றை வைத்து முன்னேறினால் முன்னுதாரணமாகலாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 700-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வழங்கினார். போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பதக்கத்தை கிரிம்சன் குழு பெற்றது. சிறந்த மாணவர் அணிவகுப்பிற்கான பதக்கத்தை டபோடில் குழு பெற்றது.

    மேலும் மாணவர்களின் பிரம்மாண்டாமான அணிவகுப்பு, யோகா, சிலம்பம், வில்வித்தை, மனித பிரமிடு, ஜிம்னாஸ்டிக் மற்றும் டேக்வாண்டோ என பல்வேறு கலைகளை மாணவர்கள் சிறப்பு விருந்தினர் முன் செய்து காட்டி விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

    முன்னதாக திருச்சி பட்டாலியன் கமாண்டென்ட் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டபின் சிறப்பு விருந்தினர் தேசியக் கொடியினையும், பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன் ஒலிம்பிக் கொடியினையும், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் பள்ளிக் கொடியினையும் ஏற்றி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. விழாவில் அம்பு ராக்கெட், வண்ண உருளைப்பந்து, கம்பாட்டம் என பல்வேறு வகையான குழு பயிற்சிகளை மாணவர்கள் செய்து அசத்தினர். விழாவில் பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தூர் செல்வன், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புத்தகம் வாசிப்பு தொடக்க விழா நடந்தது
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    திருச்சி:

    நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தக திருவிழாவில் புத்தகம் வாசிப்பு இயக்க தொடக்க விழா வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை யில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி மேலாண்மை குழு தலைவி, உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாசித்தலை சுவாசிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    • 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், 3வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, 35 -வது வார்டு கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், திலகராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
    • இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாப்பிள்ளைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுகுறித்து விளக்க கையேடுகள் வைக்கப்பட்டிருந்தது. இயற்கை காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் கிளை செயலாளர் சமுத்திரகனி, சத்துணவு அமைப்பாளர்கள், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×