search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் மற்றும் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு உலக புவி தினம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, மரங்களை நடுவது, மறுசுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும் என்றும், பசுமையான வளமானதாக இந்த பூமியை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.


    • மூன்று முறை தெப்பகுளத்தில் வலம் வந்த சாமி
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    மண்ணச்சநல்லூர்,

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். இந்த நிலையில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.இதை முன்னிட்டு அம்மன் உற்சவர் மண்டபத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் ஒலிக்க அம்மன் தெப்பக் குளத்தில் உள்ள மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்து தெப்பத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார்.இந்த தெப்ப உற்சவத்தை காண்பதற்காக தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். தொடர்ந்து அம்மன் தெப்பத்திலிருந்து இறக்கப்பட்டு கேடயத்தில் வீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    • ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் அரிசி வழங்கும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 29-ம் ஆண்டு அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார் . செயலாளர் அப்துல் லத்தீப், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் அக்பர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக நகர தலைவர் சையது முகமது வரவேற்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரமலான் பித்ரா அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமுமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஜமாத் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றிலை ராஜா நன்றி கூறினார்.


    • ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜைபோடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மொக்தியார்மஸ்தான் பூமிபூஜை தொடங்கிவைத்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியை சேர்ந்த வ.உ.சி. தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பிலும், கட்டபொம்மன் தெரு விரிவாக்கத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலும், குறிஞ்சி நகர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பிலும், வேலன் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தேசூர் பட்டை விரிவாக்க பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜய குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணி களை தொடங்கி வைத்தனர். பேரூராட்சித் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கர், சுமித்திரா சங்கர், சீனிவாசன், கோட்டை குமார், ஜான்பாஷா, நெடுஞ்செழியன், தமிழ் ஆசிரியர் தமிழரசன், ஒப்பந்ததாரர் கவுஸ் பாஷா, உதவி பொறியாளர் சுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • சென்னை தலைமை செயலகத்தில் லோகோவினை வெளியிட்டார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து, லோகவினை வெளியிட்டார், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சேது.கார்த்திகேயன், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் செழியன்,மதியழகன் மணிமாறன், அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஹரிகிருஷ்ணன், ஆகாஷ், மணிகண்டன் மாரிமுத்து, சித்தார்த், மணிகண்டன் பிரவீன்,வனிதா, அகிலா,பிரீத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு அரசு கலைக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். விருது நகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறை களை சேர்ந்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.அப்போது அவர் பேசு கையில், பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு மாணவ, மாணவிகள் தங்களுடைய செயல்பாடு களை அளிக்க வேண்டும் என்றார்.

    பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் புவனேஸ்வரன், காங்கிரஸ் நிர்வாகி உலகநாதன், வட்டார தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செய லாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடியில் நடைபெற்றது
    • வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர தி.மு.க. சார்பில் சீனி கடை முக்கத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வி முத்துகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி, பரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர், பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் அஜீஸ், செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் சார்பில் நடைபெற்றது
    • அனைத்து மதத்தினர் பங்கேற்பு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் பல வருடங்களாக தொடர்ந்து நடத்தி வரும் இப்தார் ( நோன்பு திறப்பு) விருந்து நிகழ்ச்சி வர்த்தக கழக சில்வர் ஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வர்த்தக கழக தலைவர் சதர்ன் ஹாஜி எம்.சாகுல்ஹமீது தலைமையில் செயலாளர் சாந்தம் எஸ்.சவரிமுத்து வரவேற்றார். கூடுதல் செயலாளர் ஆர்.சம்பத்குமார் விழா தொகுத்து வழங்கினார்.அரபிக்கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் எஸ்.அப்துல் ஜப்பார் பாகவி, திரு இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை எ.சவரிநாயகம் அடிகளார், திலகவதியார் ஆதீனம் தயானந்த சந்திரசேகர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி நோன்பு திறக்கும் துஆ ஓதினார். மாவட்ட வர்த்தக கழக நிர்வாகிகள் ஆர்.சேவியர், ஆலங்குடி எ.டி.மன்மோகன், பரம்பூர் ஹாஜி எம்.முகம்மது பாருக், எஸ்.ராஜ்குமார், பொன்னமராவதி எஸ்.கே.எஸ்.பழனியப்பன், எஸ்.தியாகராஜன், ஜெ.ஜாகிர்உசேன், மற்றும் இனைப்பு சங்க நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகம்மது, பெரிய பள்ளி செயலாளர் ராஜா தாஜ்முகம்மது, ஒப்பந்தகாரர் பண்ணீர் (எ)சாகுல்அமீது, மற்றும் வர்த்தக பிரமுகர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள்,திரளாக கலந்து கொண்டனர் .மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர்கள் எஸ்.தியாகராஜன், ஆர்.வைரவன், ராஜாமுகம்மது, கே.எஸ்.முகம்மது இக்பால், துணைச்செயலாளர்கள் ஹாஜி எ.கே.ஹபிபுல்லா, கே.திருப்பதி, ஆர்.ஆரோக்யசாமி, பி.எல்.பசுபதி, ஆர்.விவேகானந்தன், எஸ்.ஹெச்.சையதுநசீர், எம்.சையதுஇப்ராஹிம் அருணாச்சலம், எம்.பூபாலன், பி.பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஆரம்பமாக மாஸ்டர் எ.முகம்மதுஅஸ்லம் கிராஅத் ஓதினார்.

    நிறைவில் மாவட்ட வர்த்தக கழக பொருளாளர் எஸ்.கதிரேசன் நன்றி கூறினார்.

    • ரோவர் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இப்தார் ரமலான் நோன்பு பெருவிழா மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான் அசோக்வரதராஜன், மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி, மாவட்ட ஐக்கிய ஜமாத்பேரவை தலைவர் சுல்தான் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், புதுக்கோட்டை பேராசிரியர் சதக்கத்துல்லா தாவூதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ரோவர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராசு வரவேற்றார். முடிவில் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி முதல்வர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • மகா பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில். மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மகாபிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • மாநில அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்
    • வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்

    ஜெயங்கொண்டம், 

    மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவர். மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெ.நிதிஷ்குமார் வெற்றி பெற்று உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே தேர்தேடுக்கப்பட்டு உள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் வெ.நித்திஷ் குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்கு ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் க.இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் சு.ஐயப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ச.சாந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அ.மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி மின்னல்கொடி வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் , பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற முப்பெரும் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
    • இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற முப்பெரும் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆடல், பாடல், பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி, வட்டார வள மேற்பார்வையாளர் காசிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணராஜ், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் தங்கம், ரமேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்சவள்ளி ராஜேந்திரன், ஆசிரியர் சுந்தரம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாரதி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலரகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×