search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • செந்துறை தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியத்தில் பா.ஜ.க அரசுத் தொடர்பு பிரிவு சார்பாக பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு ஒன்றியத் தலைவர் புயல் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்று நிகழ்ச்சிகளில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசுத் தொடர்பு பிரிவின் மாவட்டத் தலைவர் தமிழரசன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் பெரியசாமி உள்ளிட்ட பாஜக மாவட்ட , ஒன்றிய அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

    • திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் மற்றும் அனைத்து மும்மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடாலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் நடைபெற்றது
    • அனைவரும் உறுதி மொழி ஏற்பு

    கரூர்,

    கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு வீரர்களின் வீர தியாகத்தை நினைவூட்டும் வகையில் ஆலையின் கால அலுவலகத்திற்கு முன்பாக நடந்த உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. இதில் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டி கங்காதர் (ஐ.பி.எஸ்.) மற்றும் செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.அதைத்தொடர்ந்து, முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி-திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன், தீ தொண்டு நாள் செய்தியை வழங்கி உறுதிமொழியை வாசிக்க, அவரை தொடர்ந்து காகித ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.இந்த விழாவில் பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன் மற்றும் துணை பொது மேலாளர் (பாதுகாப்புத்துறை) ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தீ தொண்டு நாள் குறித்து சிறப்புரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை உதவி அலுவலர் (பாதுகாப்பு) செந்தில்குமார் மற்றும் பாதுகாப்புத் துறையினர் செய்திருந்தனர்.

    • ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 88ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியும், நவநாள் ஜெபமும் நடைபெற்று வந்தது. 15ம் தேதி புள்ளம்பாடி மங்கலமாதா மின்அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் 5 தேர்கள் வலம் வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. அவருடன் பங்குதந்தை ரெஜிஸ் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார். திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் படி பூஜை விழா நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் படி பூஜை நடைபெற்றது. சித்திரை மாத முதல் நாளில் படி பூஜை நடத்தினால், அந்த ஆண்டும் முழுவதும் வாழ்க்கை படியில் முன்னேறி செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம். படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது. இதில் படியின் இருபுறங்களிலும் அமர்ந்திருந்த பெண் பக்தர்கள் படியில் தேங்காய், பழம், பூ, பத்தி ஆகியவற்றை வைத்து படி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். படி பூஜையை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புகழூர் காகித ஆலை சார்பில் நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

    கரூர்,

    புகழூர் காகித ஆலை சார்பில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப் ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இள நீர், சந்தனம், மஞ்சள் உள் பட18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.இதில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைவரும், இயக்குனருமான சாய்குமார், கோவில் திருப்பணிக் குழு தலைவரும், புகழூர் நகர்மன்ற தலை வருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலா ளர் (வன தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) சீனிவாசன், முதன்மை பொது மேலா ளர் (திட்டம் மற்றும் திட்டம் ஒருங்கி ணைப்பு) வரதராஜன். பொது மேலா ளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு துணை தலைவர் அண்ணாவேலு, காகித அலுவலர்கள், பல்வேறு துறை இயக் குனர்கள். கோவில் திருப்ப ணிக்குழு வினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சமணர் படுகைகளை அவர்கள் பார்வை யிட்டனர். மதியம் பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.

    • மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்பு

    கரூர்,

    கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான ஆண்டாள் கோவில் கிழக்கு ஊராட்சி சின்னாண்டாங்கோவில் பகுதியில் ரூ10 கோடி மதிப்பிலான 54 பணிகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் , அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரனி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி கலந்து கொண்டனர்.

    • நம்பெருமாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ஸ்ரீரங்கம்,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.விழாவின் 4ம் நாளான நேற்று காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.இன்று காலை சேஷ வாகனத்தில் நம்பெருமாள் வந்தார்., மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
    • விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்வேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டமாவிடுதி, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வாண்டான்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்றது

    அரியலூர்,

    தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுபகிருது ஆண்டு முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டான பெரும்பாலான இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், திருமனூர் ஆலந்துரையார் கோயில், திருமழபாடி வைத்திய நாதசுவாமி திருக்கோயில் மற்றும் செந்துறை, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், உடையார்பா ளையம்,ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், பொன்பரப்பி, வி.கைகாட்டி, மீன்சுருட்டி, ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் மேற்கண்ட கோயில்களில் அன்ன தானமும் வழங்க ப்பட்டன. ஏரளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.பால்குட திருவிழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து நூற்றுக்கண க்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட உத்ஸவர் பெரியநாயகி அம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

    • அம்பேத்கர்சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது

    அரியலூர்,

    அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் அனைத்துக் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர செயலாளர் முருகேசன் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. வக்கில் கு.சின்னப்பா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கில் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தா.பழுர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட துணைசெயலாளர் பழனிவேல் தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொதுசெயலாளர் தண்டபாணி தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தலைவர் மணிவேல் தலைமையிலும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • வரதராஜன்பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அ.தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டையில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நொங்கு ஆகியவற்வைறை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மருதமுத்து, ராமச்சந்திரன், வரதராஜன் பேட்டை நகர செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×