என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 229549"
- மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
- போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் 5 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர். அதற்கு போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து
- 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
- தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் பூஞ்சோலை குப்பம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர் ஆனால் பொதுமக்கள் அளித்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பள்ளி தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற ங்களிலும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்கள் செல்வதற்கு பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது.
- மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
20-வது வார்டு தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டதால் மோசமாக காணப்படும் தெரு.
மதுரை
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாத புரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
சாலை மறியல்
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோ ரியும், தெருக்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் இன்று காலை கவுன்சிலர் நாக ஜோதிசித்தன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் பிரச்சினை, புதியசாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.
- சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில்புதுரோடு பேருந்துநிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி .என். நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையைகடக்க முடியாமல்அவதி அடைவதாகவும் பெண்கள் முதியவர்களுக்கு கடும் இடையூறுஏற்படும் வகையில்தடுப்புகள் அமைந்துள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளைஅகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மையதடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
- மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.
மங்கலம் :
மோடி பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் மத்திய அரசு பொய்யான வழக்கு போட்டதை கண்டித்தும் மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மங்கலம் நால்ரோடு அருகே நடைபெற்ற கண்டன ஊர்வலம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சபாதுரை தலைமை தாங்கினார்.இதில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலாகண்ணன், அப்துல்அஜீஸ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி, மகிளா காங்கிரஸ் மகளிர்அணி மாநில செயலாளர் நவமணி , முன்னாள் வட்டார துணைத்தலைவர் தங்கவேல்,காங்கிரஸ் அலாவுதீன், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அர்ஜூனன், ரபிதீன் ,எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
- இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகம் பட்டி கிராமத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் சுமார் 29 லட்சம் மதிப்பில் கட்டுவதற்காக குறிப்பிட்ட அளவுகளில் அடையாளம் செய்யப்பட்டு கம்பிகள் அடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டுவதற்கான அடையாளம் செய்யப்பட்ட கம்பிகளையும், ஏனைய பொருட்களையும் கந்தர்வகோட்டை தி.மு.க. நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த சோழகம்பட்டி, மெய்குடி பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். சோலகம் பட்டி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். ,
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். பணிநிரந்தரம் செய்து, வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்
.அதேபோன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெருமாள், முத்துக்குமரன், மைக்கேல், வீரமுத்து, ஜெயபாலன், கார்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஒப்பந்த தொழி லாளர்களை சாலை மறியலில் ஈடுபடவேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- கீரனூர் அருகே செயல்பட்டு வருகிறது
- கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் ஊராட்சி கோப்பிலிக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி, கிரஷர் செயல்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தக் குவாரியில் கற்களை உடைப்பதற்கு வைக்கப்படும் வெடிகளினால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் தூசு படிகிறது. குவாரியைச் சுற்றிலும் 7 கிராமங்களில் விவசாயமும் செய்ய முடியவில்லை. குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளினால் மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
எனவே, இந்த கல்குவாாயை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசு அலுவலர்களிடம் மனு அளித்து வருகின்றனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறையின் மாவட்டச் செயலாளர் தலைமையில் அம்மாசத்திரம் விலக்கில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2 நாட்களுக்கு தனியார் குவாரி செயல்படாது. அதற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் குவாரி ஆய்வு செய்யப்படும். அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.
வேப்பூர், நவ. 16-
வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.
அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- வத்தலக்குண்டுவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.
- ஒருதரப்பினரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததால் பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்குத்தெரு மற்றும் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதி மக்களிடையே தீபாவளி நாளில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருதரப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய வத்தலக்குண்டு பகுதிக்கு சென்று மேலும் 2 பேரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போவதாக தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்வதாகவும், தாங்கள் விசாரணைக்கு யாரையும் அனுப்பமாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் போலீசார் தாங்கள் விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிடுவதாக கூறியும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். யாரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்