search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊதியம்"

    • ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்பது தூங்குவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வேலையாகும்.
    • இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்வுடனே எழுந்துகொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

    வேலையை முடித்துவிட்டு வந்ததும் வீட்டு வேலைகள், குடும்ப பொறுப்பு என தூங்குவதற்கே நேரம் இல்லாமல் பலர் அல்லாடுகின்றனர். ஆனால் தூங்குவதே வேலையாக இருந்து அதற்கு சம்பளமும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் பலருக்கு வந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி அந்த ஏக்கத்தை மட்டுப்படுத்திவிடும். இதை பொய்யாகும் விதமாக தூங்குவதற்கான இண்டர்ன்சிபில் சேர்ந்து அதிலிருந்து ரூ.9 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பெண் சைஸ்வாரி பாட்டீல்.

    ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்பது தூங்குவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வேலையாகும். ஒவ்வொரு இரவும் 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குவதுதான் இந்த வேலையின் சேர்பவர்கள் செய்ய வேண்டிய வேலை. இதில் எல்லா இன்டர்ன்களுக்கும் வசதியான படுக்கையுடன் தூக்கத்தைக் கண்காணிக்கும் ஸ்லீப் டிராக்கர்கள் வழங்கப்படும்.

    அந்த டிராக்கர்கள் மூலம் இன்டர்ன்களின் தூக்கச் சுழற்சி மற்றும் தன்மை கண்காணிக்கப்படும். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு விண்ணப்பிப்போர் தூங்குவதின் மேல் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றி வீடியோ ரெசியூம் ரெடி செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் இன்டர்வியூ நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலையை உருவாகியுள்ளது Wakefit என்ற இந்தியாவைச் சேர்ந்த மெத்தை [mattress] தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

     

    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்வுடனே எழுந்துகொள்கின்றனர் என்று கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கொர்போர்டு 2024 என்ற ஆய்வின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்றும் இதனால் தூக்கத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் கருதி ஸ்டைபண்ட் உடன் இந்த இன்டர்ன்ஷிப் வேலையே உருவாக்கியதாகவும் அந்நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தலைவர் கூறுகிறார்.

    இந்த வேலைக்கு பெங்களூரை சேர்ந்த சைஸ்வாரி பாட்டீல் என்ற வங்கி ஊழியர் விளையாட்டாக அப்பளை செய்த நிலையில் தேர்தெடுக்கப்பட்ட 12 பேரில் அவரின் பெயரும் வந்தது குறித்து ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அந்த இன்டர்ன்ஷிப் மூலம் ஸ்டைபண்ட் ஊதியமாக ரூ.9 லட்சத்தை அவர் ஈட்டியுள்ளார்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
    • குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ள சென்னை முதன்ைம செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஸ்கேன் சென்டர் மற்றும் பரிசோதனை நிலையங்கள், கால் சென்டர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 4 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • நிலுவை ஊதிய தொகையை வழங்க இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

    புதுக்கோட்டை,

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட பேரவை, மாநிலக்குழு உறுப்பினர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம். சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ் சங்கர் மாவட்ட செயலாளர். டி.சலோமி மாவட்ட துணை தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் பேசினார்

    மாவட்டநிர்வாகிகள் எம் ஜோஷி, க.சித்திரவேல், பி.ராமசாமி, எஸ்.பெருமாள், இளவரசு உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் இருந்து பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கூலி வழங்கவில்லை. தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு உடனடியாக மத்திய அரசு நிதியை விடுவித்து வேலை பார்த்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் உமா, லோகநாதன் ஜீவா, வீராச்சாமி, சோமு, அன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயற்குழு சோமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கள வாக்குறுதி படி முறையான காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் அன்பழகன், லூர்து சாமி, ஜார்ஜ் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.
    • நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரை ஆற்றினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணியிட மாறுதல்கள் , பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.

    முடிவில் டி.என்.ஜி.இ.ஏ. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் நிறைவுறையும், ஜெயங்கொண்டம் நகராட்சி மாநில செயலாளர் எஸ்தர் ஷோபா நன்றி உரையும் கூறினர்.

    • ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    திருப்பூர்:

    பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாலை தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் கொ.ராமதாஸ் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன்படி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராமதாஸ் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் தொ.மு.ச. மாநில பேரவை செயற்குழு உறுப்பினரும், ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
    • குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மக்களை தேடி மருத்துவ தன்னார்வ லர்களை தொழிலாளியாக அங்கீகரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும், ஸ்கோரிங் முறையிலான ஊக்கத்தொகையை ரத்து செய்து பேறு காலவிடுப்பு வழங்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மக்களை தேடி மருத்துவ தன்னா ர்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஜெயபால் விளக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் சாய் சித்ரா, மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
    • அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இது குறித்து பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்டுள்ளபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

    கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    செயலாளார் வெங்கடேசன், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயலாளர் கோத ண்டபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    உண்ணாவிரதத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் நடந்தன.

    இதில் நிர்வாகி புகழேந்தி, பொறுப்பாளர்கள் சுதா, சத்தியா, பிரபாவதி, மஞ்சுளா, கலையரசி, தனச்செல்வி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தள வாய்சுந்தரம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் கீழ் சுமார் 1510 ஊர்ப்புற நூலகர்கள் பிளஸ்-2 மற்றும் சி.எல்.ஐ.எஸ்.சி. கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் (மாதம் ரூ. 10 ஆயிரம்) எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    மேலும் தற்போதைய கால சூழ்நிலையில் வருமானம் போதாததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளடக்கி தமிழ்நாட்டில் மொத்தம் 1510 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்கிடவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயர்த்திட வேண்டும். மேலும் நூலகத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் சென்னையில் நடக்கிறது.
    • கருத்துக்களை நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் க.ஜெயபாலா தலைவராகவும் உதவி ஆணையர் மு.கார்த்திகேயன் செயலாளராகவும் மற்றும் நிர்வாக பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் கூட்டரங்கில் நாளை (8-ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில உள்ள நிர்வாக தரப்பு, தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்கலாம். கருத்துக்களை நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரகாந்தா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.

    தமிழ் மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×