search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யபட்டார்
    • வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார்

    கரூர்,

    குளித்தலை அடுத்த உடையாபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 30). லாரி டிரைவர். இந்நிலையில் கடந்த 15 -ந் தேதி இரவு வின்சென்ட், இவரது தந்தை மரியதாஸ் (73), தங்கை டைசி ராணி (29) ஆகியோர் நிலபிரச்சனை காரணமாக தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் வின்சென்ட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வின்சென்ட் மனைவி யோகம்மேரி தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மரியதாஸை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டைசி ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
    • புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    மும்பையில் போதைபொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஒரு சொகுசு கப்பலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். அவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

    இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில் அவர் இன்று மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளது.

    • இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    • நான் நாட்டை விட்டு வெளியேறும் கேள்விக்கே இடமில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டை பஞ்சாப் மாகாண போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோயில் கூறும்போது, 'எனது அடுத்த கைது நடவடிக்கைக்கு முன் நான் வெளியிடும் கடைசி டுவிட் பதிவாக இது இருக்கக்கூடும். எனது வீட்டை போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர். நான் நாட்டை விட்டு வெளியேறும் கேள்விக்கே இடமில்லை. எனது கடைசி மூச்சு வரை பாகிஸ்தானிலேயே இருப்பேன்' என்றார்.

    லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பஞ்சாப் மாகாண மந்திரி அமீர் மிர் கூறும்போது, 'மே 9-ந்தேதி ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தளபதிகள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்திய சுமார் 30 முதல் 40 பயங்கரவாதிகள் இம்ரான் கானின் ஜமானிபார்க் இல்லத்தில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த காலக்கெடு இன்று மதியம் 2 மணிவரை உள்ளது. அதுவரை இம்ரான்கான் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் திட்டம் மாகாண அரசாங்கத்திடம் இல்லை.

    காலக்கெடுவுக்குள் அவர்களை ஒப்படைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இம்ரான்கான் வீட்டுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. அவரது வீட்டை போலீசார் அதிகாலையில் சுற்றி வளைத்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தேடிய பொறுப்புடன் பணியகம் சம்மன் அனுப்பி உள்ளது.

    ஏரியில் மணல் திருடிய 2 பேர் கைது செய்யபட்டனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருட்டு நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் பட்டுரோஜா (45), மகேஸ்வரி (50), பெரியசாமி (40) ஆகியோரை தேடி வருகிறார்.

    • மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி ஸ்ரீவை குண்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. தோட்டத்து அருகே உள்ள தறிகுடோனில் லோடுமேனாக வேலை செய்து வந்த அவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைத்தனர்.

    • செல்வா, நிசாந்த், அருண் ஆகிய 3 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
    • செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கோயம்பேடு, வடவேலியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகம்மாள் (75). இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீடு புகுந்து யோகம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர்.இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வா, நிசாந்த், அருண் ஆகிய 3 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

    கே.கே.நகர், அண்ணா மெயின் ரோட்டில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியர் ஒருவரிடம் செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    • பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

    வடபழனி, வ.வு.சி 1-வது மெயின் ரோட்டில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த 7 விலை உயர்ந்த லேப்டாப்கள் திருடு போய் இருந்தது. இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விசாரணையில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

    • வாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

    மதுரை

    மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீசுவரன் (20) என்று தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து வாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி(28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார்(28) ஆகியோரை ேபாலீசார் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் தனது மகளை பின்னால் அமர வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அரசரடி மகபூப்பா ளையம் பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம்பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பே ரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
    • பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×