search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவர் மக்கள் களம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அமைப்பு நிர்வாகிகளில் 15 பேரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீஸ்வரர் ஆன்மீக சேவை அமைப்பு, அக முடையார் முன்னேற்ற நலசங்கம், சைவநெறி மீட்பு பேரவை ஆகியவை ஒருங்கி ணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து மருதிருவர் மக்கள் களம் நிர்வாகி தெற்கு வாசல் மருதுராஜா கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதிருவர் கட்டிய சேர்வைகாரர் மண்டகபடி பெயரை மறைத்து சிவகங்கை ராஜா பெயரை பதிவு செய்து உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

    இந்த விஷயத்தில் கோவில் நிர்வாகம், சிவகங்கை சமஸ்தானம் ஆகியவை கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. சேர்வைக் காரர் மண்டகப்படியில் சைவ சமய லீலை வரலாற்று நிகழ்வை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். சேதமடைந்த பெரிய மருது-சின்ன மருது சிலையை சீரமைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மருது பாண்டி யர்கள் செய்த திருப்பணி மற்றும் அருட்ப பணிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

    மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீசுவரர் ஆன்மீக சேவை உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மேற்கண்ட அமைப்பு நிர்வாகிகளில் 15 பேரை கைது செய்தனர்.

    • தலைமறைவான கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை
    • கைதான அரசு ஊழியர் சஸ்பெண்டு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே பெத்தேல் புரம் படுவாக்க ரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பன் விளை- திக்க ணங்கோடு சாலையில் நாட்டு மருத்துவ வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி வைத்தியசாலைக்கு வந்த ஒருவர் வைத்தியர் ஜார்ஜின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது வைத்தியரிடம் நகை பறித்த கொள்ளை யனின் உருவம் சிக்கியது. மேலும் அவர் வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கொடுப்பைகுழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படி யாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது வைத்தியர் ஜார்ஜிடம் திருடியதை ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போதுபிடிப்பட்ட வர்கள் நட்டாலம் பொற்றைவிளை பகுதியை சேர்ந்த அபிஷேக்( 22 )சாந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் (19 )கொடுப்பை குழியை சேர்ந்த சிவசங்கு( 53 )அவரது மகன் ஜோதி (29) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் சிவசங்குவின் மற்றொரு மகன் சிவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது .அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்ப டையில் அபிஷேகத்திற்கு வேலை கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக அபிஷேக் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு சிக்கி கொண்டார். அபிஷேக் கைது செய் யப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    இதைதொடர்ந்து அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசங்கு ஜோதி மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொள்ளை வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 24-ந்தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்து வெடிகுண்டு இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் விமான நிலையத்தில் சோதனை செய்தனர். அது வெறும் புரளி என்று தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் (20) என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    • திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர்(வயது35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • மின் வயர் திருட்டில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் சித்தம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே கீழானூர் துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் திருடு போனது.மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உயர் அழுத்த மின் வயர்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும். இந்நிலையில்,நேற்று வெங்கல் காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்பொழுது மின் வயர் திருட்டு சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர்(வயது35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, அவரை போலீசார் பிடித்து வந்து வெங்கல் காவல் நிலையத்தில் துருவி,துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், அலெக்ஸ்,தனது நண்பர்களான ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(வயது25),எழிலரசன் என்ற சுனில்(வயது21), பிரவீன் குமார்(வயது33), சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பரத்குமார்(வயது20),முகேஷ்குமார்(வயது24) என மொத்தம் ஆறு பேர் மின் வயர்களை திருடியதை ஒப்புக்கொண்டார். எனவே, அவர் கொடுத்த தகவலின் படி ரூ 15 லட்சம் மதிப்பிலான மூனேகால் டன் அலுமினிய மின்சார வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் அனைவரையும் நேற்று இரவு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மின் வயர் திருட்டில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் சித்தம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபாகரன் என்பவர் தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
    • இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார்.

    உடுமலை :

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (29) என்பவர் உடுமலையில் உள்ள தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் வேலையை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில் பணியாற்றி வந்த நிறுவனத்தை நோட்டம் பார்த்த இவர் சம்பவத்தன்று இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார். 

    போலீசார் விசாரணை நடத்தி ஊழியர் பிரபாகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.
    • துணிப்பைக்குள் பிளாஸ்டிக் பாலிதின் கவரில் 250 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு டி.எஸ்.பி சிந்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் கஞ்சா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது திம்லாமேடு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.

    போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் துணிப்பைக்குள் பிளாஸ்டிக் பாலிதின் கவரில் 250 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரனையில் மாரண்டஅள்ளி அருகே திம்லாமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது48) என்பதும், இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    உடனே போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 2500 ரூபாய் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சா பொட்டலங்ககளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கந்திகுப்பம் அருகே உள்ள உரக்கம், மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34), நாகன பள்ளியை சேர்ந்த சகாதேவன் (44), பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சபரி (26), விக்கி (26,) ஓசூர் அருகே உள்ள பந்தலபள்ளியை சேர்ந்த வினோத் குமார் (41), குந்தாரப்பள்ளியை சேர்ந்த இமை (30)வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரிஜித்ரன் (21), சூளகிரி அருகே உள்ள பேடாரப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (27), நகர பள்ளியை சேர்ந்த குலசேகரன் (28), ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விக்னேஷ் (27), கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேரை கைது செய்தனர்.
    • பிடிபட்ட வர்களி டமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூபாய் 2500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவது அதிகரித்து உள்ளது.

    இந்நிலையில் ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த தகவலைத் தொடர்ந்து மூங்கில் முடிவு வனப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஏரியூர் போலீசார், அங்கே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் பலர் தப்பி ஓடியதாக தெரிகிறது. பிடிபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் ஏரியூரைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது42), மூங்கில் மடுவை சேர்ந்த முருகன் (50), செல்வராஜ் (43), ரவிச்சந்திரன் (40), சஞ்சீவன் (40) ஆகியோர் என தெரியவந்தது.

    பிடிபட்ட வர்களி டமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூபாய் 2500 பறிமுதல் செய்யப்பட்டது.  

    • லாட்டரி சீட்டு விற்றதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசார் பாஞ்சாலியூர், கிருஷ்ணகிரி டோல்கேட், வேப்பனப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுதந்திரம் (எ) பொன்வண்டு (38), திருப்பத்தூர் மாவட்டம் சி.கே ஆச்சிராமம் பகுதியை சேர்ந்த திலீப் (எ) தனசேகரன், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுற்று கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (26), ஓசூர் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த கனசேயம் மண்டால் (40) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தருமபுரி ெரயில்வே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்த ராஜி, போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கிருஷ்ணகிரி டவுன் பாரதியார் நகரை சேர்ந்த சீனிவாசன், ஓசூர் அட்கோ பகுதியை சேர்ந்த ராமசாமி, மகாதேவன், தேன்கனிக்கட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சலீம், ராயக்கோட்டை ரஹ்மான் காலனி சேர்ந்த முருகன், கெலமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசிய கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (வயது 39). ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
    • மூதாட்டிகள் இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது.

    இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பழனாத்தாள் (வயது 75), அதே பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதி வான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த கவுதமி (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கவுத மியை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்த னர்.

    ×