search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர்.
    • ஞானசேகரனை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறினார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 39). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த 29-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானசேகரன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து லூர்துமேரி அரியாங்குப்பம் போலீசில் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர்.

    ஞானசேகரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடைசியாக பக்கத்து வீட்டை சேர்ந்த வியாபாரி செல்வம் (40) என்பவரிடம் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரனை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறினார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    கொலை செய்யப்பட்ட ஞானசேகரன் மனைவி லூர்துமேரிக்கும், செல்வத்துக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது ஞானசேகரனுக்கு தெரியவந்தது. அவர் 2 பேரையும் கண்டித்தார். அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஞானசேகரனை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டினர்.

    சம்பவத்தன்று செல்வம், ஞானசேகரன் வீட்டுக்கு சென்று மதுகுடிக்க அழைத்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இடையார்பாளையம் அலுத்தவேலி காட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர்.

    போதை தலைக்கேறியதும் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஞானேசகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஞானசேகரன் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து செல்வத்தையும், லூர்துமேரியையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பரை தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று ஞானசேகரனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • போலீசார் பிரசாந்திடமிருந்து இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை களிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக முஸ்தப்பா (52), அபுதாகிர் (24) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மேல பொன்னகரம், கொம்ப முத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் (வயது19). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கபடி போட்டி தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கார்த்திக் கோமஸ்பாளையம், அங்கன்வாடி மையம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தியதுடன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாய்க்கரை ஜான்பாஷா மகன் ஹபிமுகமது (23), கிருஷ்ண பாளையம் மாடசாமி மகன் ஆனந்தகுமார் என்ற ஏட்டு கண்ணன் (24), புது ஜெயில் ரோடு சைலேந்திரன் மகன் அஜய்குமார் என்ற குள்ளமணி (23), முரட்டன்பத்திரி, ராம் நகர் பிச்சைமுத்து மகன் வினித்குமார் என்ற மீசை (23), திண்டுக்கல் குமரன் திருநகர், கவுதம்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.
    • சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். 10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

    சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டினர். பின்னர் அவர்கள் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரை கோவைக்கு கடத்தி வந்தனர். காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர்.

    இது குறித்து சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சையைச் சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (வயது 42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார்.
    • கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவருக்கு கடந்த 12-ந்தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மொபட்டில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார். கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ெமாபட் திருட்டு போனது. இது குறித்து மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் நைசாக மொபட்டை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அஜித்குமாரை கைது செய்தனர்.

    • தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
    • கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாக்ராபேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது எர்ரகுண்டபாளயம் வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் செம்மரம் வெட்டி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இந்த காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த கடத்தல்காரர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதில் காரில் இருந்த 21 செம்மரங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த சங்கர் செம்மரக்கடத்தல் கும்பல் தலைவராவார். இவர் மீது 30 வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்று வந்த பிறகும் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

    தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இவர்கள் செம்மரங்களை வேலூரை சேர்ந்த காஞ்சி என்கிற சந்தோஷ் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் மற்றும் கோவிந்தசாமியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழக்கமாக செம்மரங்களை வெட்டுவதற்கு கூலி தொழிலாளர்களை பஸ்கள் மற்றும் லாரிகளில் அழைத்து வருவது வழக்கம்.

    ஆனால் போலீசார் சோதனை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து பைக்கில் கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து செம்மரங்களை வெட்டி செல்வது தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    மொத்தம் 21 செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு கார், 6 பைக்குகள் ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பரமேஸ்வர் தெரிவித்தார்.

    • சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புதுவளவு, மணியாரகுண்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 34), இவர் தனது மனைவி பார்வதியுடன் கருமந்துறையில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க, 60 ஆயிரம் பணத்துடன் வங்கிக்கு சென்றார். சலானை பூர்த்தி செய்தபோது பணத்தை பர்சுடன் அருகே வைத்தார். சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் கொடுத்த புகார்படி, கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ், (30) என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் பணத்தை மீட்டனர்.

    • ஆசிட் கலந்த குடிநீரை வைத்து ஏராளமான நாய்களையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
    • பிரபு பழனியப்பன் என்பவர் திருச்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது ஹசன் ஷாகிப் (வயது 46). இந்திய மருத்துத்தில் ஒன்றான யுனானி டாக்டராக இருந்து வருகிறார். அதே பகுதியில் கிளினிக்கும் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.

    இதற்கிடையே இவர் தான் வைத்துள்ள ஏர் பிக்செல் துப்பாக்கியை கொண்டு அந்த பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை சுட்டுக் கொன்று வந்துள்ளார்.

    அப்பகுதியினர் இதனை பலமுறை கண்டித்தபோதும், டாக்டர் சையது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் ஆசிட் கலந்த குடிநீரை வைத்து ஏராளமான நாய்களையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காஜாப்பேட்டை பகுதியில் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த பிறந்த சில நாட்களேயான குட்டி நாய் ஒன்றை தனது ஏர் பிக்செல் துப்பாக்கியால் டாக்டர் சையது ஈவுஇரக்கமின்றி கொடூரமாக சுட்டுள்ளார். இதில் அந்த நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானது.

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பிரபு பழனியப்பன் என்பவர் திருச்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யுனானி டாக்டர் சையதுவை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது.

    ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த பச்சுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவன்குமார், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் கவுட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அங்கு ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்திக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட பாசு பள்ளியை சேர்ந்த குமார் (வயது 35), பிரகதி நகரை சேர்ந்த சீனிவாச ராவ் (33), ராம்பாபு (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.20.3 லட்சம் மற்றும் 7 செல்போன்கள், 2 லேப்டாப், 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-டிவிசன் சிறப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35), மாரிமுத்து (29), செல்வம் (32), ஜெயக்குமார் (26), வடிவேல் (39), தமிழன் (50) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.490 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • உஷா சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார்.
    • வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டு வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி உஷா (வயது 36). இவர் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபு மனைவி கலைச்செல்வி (33) என்ப வருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று உஷா பள்ளியில் வேலை பார்த்து கொண்டி ருந்த போது அங்கு வந்த கலைச்செல்வி, அவரது கணவர் பிரபு, கலைச் செல்வியின் தாயார் ஜெயக்கொடி ஆகியோர் உஷாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர் பான வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயக்கொடி உள்பட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கலைச்செல்வி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • தியாகதுருகத்தில் கோவில் மாடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×