என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாட்டரி"
- மாதம் ரூ.10 லட்சம் வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
- பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லாட்டரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லாட்டரி சீட்டில் மெகா பம்பர் பரிசாக ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்ற வகையில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.
இது தொடர்பான இ-மெயில் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மெயிலை பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த மெயிலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ஷ்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என கருதிய அவர் தனது மருமகனிடம் மெயிலை காட்டி பரிசு விழுந்ததை உறுதி செய்தார். மேலும் நேஷனல் லாட்டரியில் இருந்தும் அதிகாரபூர்வமாக அவருக்கு பரிசு விழுந்ததை உறுதிபடுத்திய டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்து டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறுகையில், இந்த பரிசை பற்றி நினைக்கும் போதெல்லாம் விசித்திரமாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். இது எனக்கு 100 வயது வரை இருப்பதற்கான காரணத்தை அளிக்கிறது. இந்த பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
- போலீசார் அதிரடி வேட்டை
- கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி:
திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பலசரக்கு கடை நடத்தி வந்த ஜோசப் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதா? என பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 874 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- காரைக்கால் திருநள்ளாறில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை முன்பு, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில், திருந ள்ளாறு போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது, அங்கு திருநள்ளார் நகர் பகுதியை ச்சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரது செல்போனில் பொது மக்களுக்கு 3 எண் கொண்ட தடை செய்ய ப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாரிமுத்தை போலீசார் கைது செய்து, அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
- தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
- வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவோணம்:
ஒரத்தநாடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்று வருவதாக ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்று வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, லாட்டரி சீட்டு, செல்போன் மற்றும் 900 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சண்முகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரத்தநாடு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
- சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டாரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தில் பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதனையடுத்து பிரபாகரன், பரமத்தி ஆயில் மில் தெருவை சேர்ந்த சிவா(29), பரமத்தியை சேர்ந்த சதாம் உசேன்(29), சாதிக் பாஷா(22), மரவாபாளையம் குடித்தெருவை சேர்ந்த பவன்குமார்(27), மணிகண்டன் (29) உள்ளிட்ட 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது.
- பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.
பரமத்திவேலூர்;
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சோமசேகர் உள்ளார்.
போலீசில் புகார்
இவர் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாண்ட மங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் கூறியதாவது:-
பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.
தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனையால் இளைஞர்களை வாழ்வு சீரழிகின்றது. பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்களை தடுக்க பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என கூறினார்.
பாண்டமங்கலத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தர படி க்ரைம் டீம் எஸ்.ஐகுண சேகரன் தலை மையி லான போலீ சார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் இஸ்மா யில் (வயது 54) என்பவர் லாட்டரிசீட் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவரை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத் தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
- போலீசார் விரட்டி சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.
- 3 செல்போன்கள், 2 பில் புக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி வாசல் வடக்கு தெருவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் பல ஏஜென்டுகளை நியமனம் செய்து, ஆன்லைன் லாட்ட ரிகளை விற்று வருவதாக போலீசா ரக்கு தகவல் வந்தது.
தகவலின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், எஸ் எஸ் ஐ புரட்சிமணி மற்றும் போலீசார் ராஜ்கண்ணன் என்பவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்கா ணித்தனர்.
அப்போது போலீசை பார்த்ததும் 3 பேர் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு, நேரு நகர் பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 65) இவரது மகன் ஷாஜகான் (39) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் மூன்று செல்போன்கள் இருந்தது.
அதை சோதனை செய்து பார்த்ததில் 3 நம்பர் கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி எண்களை இணையதளம் மூலம் அனுப்பியும் அதற்கான பணத்தை இணையதளம் வாயிலாக பணம் பெற்றும் சட்ட விரோதமாக அரசு அனுமதி இன்றி விற்று வருவதாகவும் அந்த நம்பர் பதிய பெற்ற செல்போன் தங்களுடையது தான் அதில் ஒரு செல்போன் ஷாஜகானின் சகோதரி ரிகானா உடையது என்றும் தெரிய வந்தது.
மேலும் தப்பியோ டியது ரிகானா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்க ளிடமிருந்து 3 செல்போ ன்கள், 2 பில் புக், 2000 ரூபாய் பணம், ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
பல்லடம் :
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. உளவுத்துறை போலீசாரின் ஆசியோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.எனவே திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் லாட்டரி வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- லாட்டரி சீட்டு விற்ற வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.
- கள்ளச்சந்தையில் மது விற்ற கிஷோர்குமார் என்பவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவோணம்:
ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா விற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இதேப்போல் கள்ளச்சந்தையில் மது விற்ற ஒரத்தநாடு புதூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமார் (43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
நாமக்கல்:
மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையில் போலீசாா் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்த கனகரத்தினம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்