search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி"

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
    • சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி ஆகும்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

    சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி ஆகும்.

    லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற ஷானவாஸ் கூறும்போது, வளைகுடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 18 மாதங்களாக ஆன்லைன் லாட்டரி வாங்கி வந்தேன். இப்போது தான் பரிசு விழுந்துள்ளது. இந்த தொகையை கொண்டு எனது கடன்களை எல்லாம் அடைப்பேன். மீதி இருக்கும் பணத்தை வைத்து தொழில் தொடங்குவேன், என்றார்.

    • மேட்டுப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
    • இதையறிந்த போலீசார் லாட்டரி விற்றவரை கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது46). இவர், தினந்தோறும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஒரு மளிகை கடை முன் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×