என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குஷ்பு"
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
- சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெண்கள், தாய்மார்கள் முதலமைச்சர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
சென்னையில் தற்போது மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது. நிவாரண பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் பற்று வைத்து ஆதரவு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு இளங்கோவன் கூறும்போது,
நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை என்று பதிலளித்தார்.
நடிகை குஷ்பு சமீபத்தில் சேரி குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறிய இந்த கருத்து இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
- குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு 'சேரி' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறி விட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி எஸ்.சி. துறை சார்பில் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாந்தோம் பிரதான சாலையில் உள்ள குஷ்பு வீட்டின் முன்பு எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் குஷ்புவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குஷ்பு வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் உள்பட 140 பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நடிகை குஷ்புவுக்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
- மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில், நடிகை குஷ்பு "சேரி" என்ற வார்த்தை பயன்படுத்தியது பேசுபொருளாக மாறியது. இவரின் வார்த்தை உபயோகத்திற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சேரி வார்த்தை தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில், நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மன்னிப்பு கோராவிட்டால், நடிகை குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து இருந்தது.
தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கூறிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார். இதையடுத்து இன்று காலை குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் எஸ்.சி. துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து நடிகை குஷ்பு வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
எனினும், வீட்டின் அருகே குவிந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானோரை காவல் துறை கைது செய்தது. அந்த வகையில், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 140 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத் தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.
ஆனால் 'சேரி' என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள் நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குஷ்புவின் உருவ பொம்மையையும் எரித்தனர். செருப்பு மற்றும் துடைப்பத்தாலும் அடித்தார்கள்.
போராட்டத்தையொட்டி பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் குஷ்பு வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், காங்கிரசார் மிகவும் அநாகரீகமாக நடந்துள்ளனர். குஷ்பு வழக்குகளை சட்டப்படி சந்திப்பார் என்றார்.
மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் கூறியதாவது:-
இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி.துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன் பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணுகுண்டு ஆறுமுகம், செயலாளர் விஜயசேகர், மாவட்ட தலைவர் துரை, மயிலை தரணி, உமாபாலன், நிலவன், வை.பிரபா, மீரா, சரளா, மஞ்சுளா, திரேசா, மாலதி, ராஜலட்சுமி, சுமதி, ரஞ்சித்குமார், சரத்குமார், இந்து மதி, ராஜவிக்ரமன், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
- எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல.
- ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?
சென்னை:
போராட்டம் முடிந்து காங்கிரசார் சென்றதும் குஷ்பு வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
என் வீட்டு வாசலில் வந்து போராட்டம் நடத்தினால் இரண்டு நாட்கள் விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்து போராடி இருக்கிறார்கள். இப்படியாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு விளம்பரம் கிடைக்கிறதே வாழ்த்துக்கள்.
நான் 1986-ல் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இந்த மண் என் சொந்த மண். மானமுள்ள, வீரமுள்ள தமிழச்சியாக தைரியமாக வாழ்ந்து வருகிறேன். என் கருத்தில் நான் பின் வாங்க மாட்டேன். நான் தவறாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சேரி என்பதற்கு என்ன அர்த்தம். முதலில் அதை சொல்லணும்.
எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல. எல்லோரிடமும் சரி சமமாக பழகுவேன். எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவள்.
ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?
தலித்துகளுக்கு ஆதரவு என்கிறார்கள். நேற்று கோவையில் இரும்பு கம்பியால் தலித்துகளை தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் சென்று ஏன் போராடவில்லை. விளம்பரம் கிடைக்காது என்ற தயக்கமா? என்னை பொறுத்தவரை தவறு செய்தால் குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அப்படி எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
- குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.
ஆனால் 'சேரி' என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள்நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.
மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் கூறியதாவது:-
இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி. துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன்பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணுகுண்டு ஆறுமுகம், செயலாளர் விஜயசேகர், மாவட்ட தலைவர் துரை, உமாபாலன், நிலவன், வை.பிரபா, மீரா, சரளா, மஞ்சுளா, திரேசா, மாலதி, ராஜலட்சுமி, சுமதி, ரஞ்சித்கு மார், சரத்குமார், இந்துமதி, ராஜவிக்ரமன், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்.
- குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றி இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம்.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சேரிமொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஆனால் குஷ்பு, தான் தவறாக எதுவும் பேசவில்லை சேரி என்பது தவறான வார்த்தை அல்ல என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. குஷ்பு வீட்டை இன்று முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாளை (28-ந்தேதி) முற்றுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது:-
இன்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா ஆகிய 2 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தான் எங்கள் போராட்டத்தை தள்ளிவைத்து உள்ளோம்.
நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம். 500க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதி பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சேரி என்பது இழிவானது அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறோம். அந்த வார்த்தையை எதற்காக பயன்படுத்தினார் என்பது தான் முக்கியம். தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஆணவமாக கூறி இருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.
தவறான கருத்துக்களை சொல்லி மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு என்பதை அவர் மறக்கக்கூடாது. அதே போல் சேரியை விமர்சித்து கோர்ட்டில் மன்னிப்பு கேட்டவர்களும் உண்டு. எனவே நாங்கள் இதை சும்மா விடப்போதில்லை.
குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றியும் இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம். எனவே அவர் மீது விரைவில் வழக்கும் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
- குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
நாகர்கோவில் :
ஆதித்தமிழர் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையிலான நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு அவரது இணையதள பதிவில் "சேரி மொழியில் பேச முடியாது" என பதிவிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை.
- நான் இதுவரை தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?
என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.
புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?
அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது
திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?
- குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள்.
சென்னை:
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வார்த்தைகள் சர்ச்சையானது. இதற்கிடையில் எக்ஸ் தளத்தில் ஒருவர் குஷ்புவை டேக் செய்து விமர்சித்து இருந்தார்.
அதற்கு பதில் அளித்து குஷ்பு வெளியிட்ட பதிவில் உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் சேரி மொழி என்று குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் கையில் எடுத்து காங்கிரஸ் எஸ்.சி. துறை அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு ஆவேசமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
இந்த மாதிரி போராட்ட பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நான் அல்ல. தைரியம் தான் என் பெயர் என்று பலமுறை கூறி இருக்கிறேன்.
சேரி மொழி என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்டு எனக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களே முதலில் சேரி என்றால் என்ன என்பதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கட்டும். அரசின் பதிவுகளில் கூட சேரி என்ற வார்த்தை இருக்கிறதே?.
வேளச்சேரி, நெமிலிச்சேரி, கூடுவாஞ்சேரி எத்தனையோ ஊர்களின் பெயர்களில் சேரி இருக்கிறதே அதை என்ன சொல்வீர்கள்? அங்கு வசிப்பவர்கள் எல்லோருடனும் சரி சமமாக வாழ தகுதியற்றவர்களா?
வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?
ஒரு பெண்ணான என்னை மேடையிலேயே எவ்வளவு கேவலமாக தி.மு.க.வினர் பேசினார்கள். அப்போது தி.மு.க.வுக்கு எதிராக பேசினீர்களா? அவர்கள் வீட்டு வாசலில் சென்று போராடினீர்களா?
நீட் தேர்வால் மாணவி அனிதா இறந்த போது குஷ்பு எங்கே போனார்? என்று கேட்கும் உண்மையான காங்கிரஸ்காரர்களே அது நடந்தது 2017-ல் நானும் அப்போது உண்மை தெரியாமல் உங்களோடு காங்கிரசில் தான் இருந்தேன். இது கூடவா மறந்து போச்சு?
இன்னும் தி.மு.க.வோடு சேர்ந்து நீட்... நீட் என்று நீட்டி முழங்குகிறீர்களே, நீட்டை ஒழிக்க முடியாது என்று நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டு வாசலில் நின்று உரக்க சொன்னாரே அப்போது ப.சிதம்பரத்தை எதிர்த்து போராடினீர்களா? உருவ பொம்மையை எரித்தீர்களா? தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்றாவது பேசினீர்களா?
தேர்தலில் வெற்றி பெற்றும் தலித் பஞ்சாயத்து தலைவர் இன்னும் பதவிப் பிரமாணம் கூட செய்ய முடியாமல் இருக்கிறாரே அதற்காக என்ன செய்தீர்கள்?
புதுக்கோட்டையில் தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்களே இதுவரை அதற்கு என்ன செய்தீர்கள்?
நாங்குனேரியில் தலித் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்படுகிறதே அதை எதிர்த்து காங்கிரஸ் போராடியதா? அல்லது தடுப்பதற்கு தி.மு.க. ஏதாவது செய்ததா? வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறது?
விளை நிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் இறந்து போன தனது குழந்தையின் 16-வது நாள் காரியத்தை முடிக்க வேண்டும் என்று கெஞ்சிய போதும் இரக்கமில்லாமல் தானே இந்த அரசு நடந்து கொண்டது. அதற்காக முதலமைச்சர் வீட்டு வாசலுக்கு சென்று நியாயம் கேட்டீர்களா?
தலித்துக்களுக்கு ஆதரவாக இப்போது பொங்கும் காங்கிரசின் வரலாறு தெரியாதா?
தலித் இனத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் பிரதமர் ஆக தகுதியில்லை என்று புறக்கணித்தது மறந்து போனதா?
மலைவாழ் சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக வரக்கூடாது என்று எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது தானே காங்கிரசும், தி.மு.க.வும்.
ராஷ்ட்ரபதி முர்முவை ராஷ்ட்ர பத்னி என்று காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார். பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றார். அப்போது ஏன் பொங்கவில்லை?
இந்தியாவில் அதிக அளவாக தலித்துகளுக்கு எதிரான வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 450 வழக்குகள் பதிவாகி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள். காங்கிரஸ் செத்துப்போன பாம்பு. அது எழுந்து ஆடினால் என்ன? ஆடாவிட்டால் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
- சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு.
மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
- நடிகை குஷ்பு கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கார்த்திக் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சேரியில் பேசுகின்ற மொழி என்ற வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்ட தகாத மொழி என்றும் பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்