search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
    • இவர் சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.



    இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நண்பர்களுக்கு வணக்கம், எனக்கு கொஞ்சம் டெடாக்சிஃபிகேஷன் தேவை என்பதால், ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிடிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் குஷ்பு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தி சக தோழிகளை ஆபாச படம் பிடித்து தங்கள் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கல்லூரி மாணவிகள் 3 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும்போது, பா.ஜனதா இந்த விஷயத்தை வைத்து குட்டி அரசியலில் ஈடுபடுகின்றன. நண்பர்களுக்கு இடையே நடந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா? இவையெல்லாம் கடந்த காலங்களில் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடக்கவில்லையா? என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு உடுப்பி சென்று உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்ட குஷ்பு அவர்களை பாராட்டினார்.
    • கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் விவாதித்தேன்.

    சென்னை:

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு புழல் பெண்கள் ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகள் பராமரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார்.

    அங்கிருந்த பெண்கள் குஷ்புவை கண்டதும் ஆர்வத்துடன் அவரை பார்த்தனர்.

    பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்ட குஷ்பு அவர்களை பாராட்டினார். விசாரணை கைதிகளாகவும் தண்டனை பெற்ற கைதிகளாகவும் சிறையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, ஆறுதல் கூறியதுடன், பிரச்சினைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடும். அதையும் கடந்து துணிச்சலுடன் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதுபற்றி அவர் கூறும் போது, "மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் ஜெயிலில் பெண்கள் நடத்தப்படும் விதம், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் பார்ப்பதற்காக சென்றேன். நான் எதிர் பார்க்காத வகையில் கைதிகள் ஜெயிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும் கூறினார்கள்.

    கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் விவாதித்தேன்.

    குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வருபவர்களையும் நன்கு கவனித்து பொருளாதார ரீதியாக அவர்களின் பாதுகாப்புக்கு உதவ கூடியதை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் அதை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது பற்றிய எனது எண்ணங்களையும், யோசனைகளையும் பகிர்ந்து வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.
    • ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்று நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மகாலில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துக்களை பரப்பியே பின்பு மக்களை சந்திக்கின்றனர். ஆனால் தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.

    மேலும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின் போது பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு ஏன் இது குறித்து பேசவில்லை. கிளிசரின் போட்டு மீடியாக்கள் முன் அழும் அவர் வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஏன் மவுனமாக இருக்கிறார்?

    இணையதள சேவையை முடக்கி, தேவாலயங்களை எரித்து மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதே பா.ஜ.க. அரசுதான். ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.
    • நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    சென்னை:

    தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு கூட அந்த பெண்ணை காப்பாற்ற தோன்றவில்லை.

    இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும்.

    இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    பிரச்சினைகளுக்கும் பெண்களை அவமானப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார்.
    • தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார். அப்படி கல்வி புரட்சி ஏற்பட்டு இருந்தால் முதலில் தி.மு.க.வினர் அனைவரும் நன்றாக படித்து இருப்பார்களே? ஊழல் செய்து இருக்க மாட்டார்களே! ஜெயிலுக்கு போக மாட்டார்களே.ஆனால் தி.மு.க. ஆட்சி காலங்கள் ஊழல் நிறைந்த காலங்களாகத்தானே இருக்கிறது.

    நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை குறிப்பிட்டுள்ளார். உண்மையாகவே கல்வி புரட்சி செய்து இருந்தால், மக்கள் நல அரசியலை செய்து இருந்தால் தி.மு.க.வும் தேசிய அளவில் வளர்ந்து இருக்கும். ஏன், மு.க.ஸ்டாலின் பிரதமராக கூட வந்திருப்பாரே. தமிழ்நாடு எங்கோ போயிருக்குமே.

    திராவிட மாடல் என்பது ஊழல் மாடலாகத்தானே எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு கட்சி, ஆட்சியை மக்கள்தான் பாராட்ட வேண்டும். ஆனால் எங்கள் ஆட்சி சூப்பர் என்று தனக்கு தானே பாராட்டி கொள்வதை நிச்சயம் மக்கள் ரசிக்க மாட்டார்கள். கிண்டல்தான் செய்வார்கள்.

    2 வருட தி.மு.க. ஆட்சியில் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் மழை பெய்தால் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்.

    தமிழ் தமிழ் என்று இத்தனை காலமும் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறது. ஐ.நா.சபை வரை உலகில் எங்கு பேசினாலும் திருக்குறள், தமிழின் பெருமை, கலாச்சாரம் பற்றி பேச தவறவில்லை. இப்போது பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி தமிழின் பெருைமயை அங்கு நிலைநாட்டி இருக்கிறார்.

    தமிழுக்கு தி.மு.க.வால் செய்ய முடியாததை, செய்யாததை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதை பாராட்டக்கூட மனம் வரவில்லை. நல்லது செய்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதே கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி பாராட்டுவார்கள்?

    மனதார எதையும் செய்வதில்லை. மக்களை ஏமாற்றி குறுகிய வட்டத்துக்குள் வைத்திருந்த அவர்களின் சித்து வேலைகள் தோலுரிந்து வருகிறது. உண்மையாகவே நாட்டுக்கு யார் உழைக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்?
    • ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.

    இந்த நிலையில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக பா.ஜனதா செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கவர்னர் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்று விவாதிப்பதைவிட ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் செந்தில்பாலாஜி மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும்.

    ஆனால் எனக்கு ஒரே ஒரு விஷயம் புரியவில்லை. இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் வழக்கில் சிக்கி இருந்தால் அவரை நீக்கியே தீர வேண்டும் என்று ஊழல் கூட்டணி கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து இருக்குமே.

    ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி ஒரு அமைச்சரே கைது செய்யப்பட்டு காவலில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்று எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்? பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் இருந்தால் ஊழல் செய்வது தப்பில்லை என்று அர்த்தமா?

    செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? அவர் முக்கியமானவர்களின் பெயர் விபரங்களை வெளியே சொல்லிவிடக் கூடாது என்று பயமா?

    ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    • நடிகை குஷ்பு பல படங்களில் நடித்துள்ளார்.
    • பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு குஷ்பு அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
    • இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, டி.ஜெயக்குமார், குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகியுள்ளார். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் பாய்ந்தன.

    இந்த விவகாரத்தில் தனி ஒருவராக நின்று நடிகை குஷ்பு சாதித்து காட்டி இருக்கிறார். தனக்கு எதிரான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் குஷ்புவிடம் இருப்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்து வருகிறோம்.

    பெண்களை பற்றி தவறான கருத்துக்களை யாராவது தெரிவித்தால் பல கட்சிகள், அமைப்புகள் வரிந்துகட்டி குரல் கொடுக்கும். வீதிக்கு வந்து போராடவும் செய்வார்கள்.

    ஆனால் குஷ்பு விவகாரத்தில் எந்த ஒரு அமைப்பும், கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தனி நபராக நின்று போராடுகிறார். இந்த விஷயத்திலும் தனக்காக என்ற எண்ணத்தில் அவர் போராடவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் தான் குரல் கொடுக்கிறார்.

    பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது ரோட்டில் போகும் எவனோ ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? இந்த மாதிரி ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும் என்றபோது அவரது பேச்சில் அனல் தெறித்தது.

    குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க திருப்பி அடிச்சாதாங்கமாடீங்க. என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவா. நாளைக்கு மறந்திடுவா என்று சாதாரணமாக நினைக்காதீங்க. குஷ்பு மன்னிச்சுடுவா... ஆனால் எதையும் மறக்கமாட்டா... அந்த புத்தி எனக்கு கிடையாது.

    மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டிபார்த்தால் அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும் என்று. இதை அவருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறேன் என்று குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே சென்றது எல்லோரையும் அதிர வைத்தது.

    இந்த நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தரம்கெட்ட அந்த நபரின் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. அந்த பெயரை உச்சரிப்பதே அவமானம். அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. கவர்னரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் நான் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கவில்லை. நானாக புகார் கொடுத்தால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருப்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக சில கட்சிகள் விமர்சிக்கும். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு தொடுத்துள்ளது. எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிப்போம்.

    நான் எனக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. எந்த பெண்களையும் தரக்குறைவாக பேசக்கூடாது. நடத்தக்கூடாது என்று தான் பேசுகிறேன். பெண்களின் காவலர்கள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் எந்த கட்சியும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். நான் பா.ஜனதாவில் இருப்பதால் அப்படி இருக்கலாம்.

    நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. மற்றவர்களுக்கும் இது தெரியும். எனது கருத்துக்காக என் மீது போடப்பட்ட வழக்குகளை தனி ஒருத்தியாகத்தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று 5 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன்.

    இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது. அதற்கேற்ற வகையில் எனது நடவடிக்கை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க. இப்போது கிடையாது.
    • செந்தில் பாலாஜி விவகாரத்தை திசைதிருப்பவே, இப்படியெல்லாம் பேச சொல்லி சிலரை தீனி போட்டு தி.மு.க. வளர்க்கிறது.

    சென்னை :

    நடிகை குஷ்பு குறித்து, தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு மேடையில் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை குஷ்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    தி.மு.க.வில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, என்னை பற்றி மிகவும் கேவலமாக பேசி இருக்கிறார். பெண்களுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் கேள்வி கேட்பேன். நடவடிக்கையும் எடுப்பேன்.

    குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க... திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க... என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்னைக்கு பேசுவா, நாளைக்கு மறந்துடுவா என எளிதாக எண்ண வேண்டாம். குஷ்பு மன்னிச்சுடுவா, ஆனால் எதையும் மறக்க மாட்டா. அந்த புத்தி எனக்கு கிடையாது.

    தி.மு.க.வில் உள்ள அனைவரையும் பார்த்தே சொல்கிறேன். குஷ்புவை சீண்டி பார்க்க வேண்டாம்.

    தி.மு.க.வில் நான் சேரும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் மேடை நாகரிகம் பற்றி சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பார்த்துக்கொள்ள வேண்டும். தி.மு.க.வில் உள்ள பெண்களே இன்றைக்கு கேவலமாக பேசும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அதை அந்த கட்சிக்காரர்களும் ரசிக்கிறாங்க... இதோட நிறுத்திக்கோங்க... நானும் பதிலுக்கு ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது. திருப்பி அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்கள மாதிரி பின்னாடி 10 பேர் எனக்கு தேவையில்லை. நான் ஒருத்தியே போதும்.

    நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இவங்களாம் ஒரு ஆளே கிடையாது. தைரியம் இருந்தா அவரை கட்சியில் இருந்து நீக்க சொல்லுங்க... மறுபடியும் தீனி போட்டு வளர்க்க வேண்டாம்னு சொல்லுங்க... இதையெல்லாம் நிறுத்த சொல்லுங்க... அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை திசைதிருப்பவே, இப்படியெல்லாம் பேச சொல்லி சிலரை தீனி போட்டு தி.மு.க. வளர்க்கிறது.

    மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டி பார்த்தால், அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும்னு? இதை அவருக்கு எச்சரிக்கையாகவே விடுக்கிறேன். மேலும் இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தாமாக முன்வந்து வழக்கு (சூமோட்டோ) தொடுக்கிறோம். எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிப்போம்.

    சமீபத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், ராதாரவி பேசிய சில கருத்துகளை முன்வைத்து என்னிடம் கேள்வி கேட்பீர்கள். எனக்கு அது நன்றாகவே தெரியும். எந்த கட்சி என்றாலும், எந்த ஆணாக இருந்தாலும், பெண்களை பற்றி கேவலமாக பேச உரிமையே கிடையாது.

    பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது, ரோட்டில் போகும் ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? நான் இதை ஒரு பெண்ணாக சொல்கிறேன், கட்சி ரீதியாக பேசவில்லை.

    யாரோ நாலு பேரின் கைத்தட்டலுக்காக பெண்ணை தவறாக பேசலாமா?. என்னைக்காவது ஆண்களை கேவலமாக பெண்கள் பேசியிருக்கிறார்களா?. ஏனெனில் நாகரிகம் என்னவென்று எங்களுக்கு எங்கள் தாய் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் சிலர் தங்களின் தாயின் வளர்ப்பை அசிங்கப்படுத்துகிறார்கள்.

    தி.மு.க.வின் தாயும், தந்தையும் கருணாநிதிதான். இப்படி மூன்றாந்தர பேச்சின் மூலமாக அந்த கட்சிக்காரர்கள் கருணாநிதியைத்தான் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அது தெரியாமல் சிலர் ரசித்தும் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டுவிட்டு நாளைக்கே தி.மு.க.வினர் என் வீட்டின் மீது கல்வீசுவார்கள். ஏன் ஏற்கனவே இதை பார்த்தவள்தான். எனவே இதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.

    எல்லா கட்சிகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்களை இழிவாக பேச அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? பெண் என்றாலே இழிவாக போச்சா உங்களுக்கு... நான் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுறேன். பெண்களை பார்த்து சொல்கிறேன். நீங்கள் யாருக்குமே பயப்பட வேண்டாம். திருப்பி அடிங்க... நான் இருக்கிறேன். நான் திருப்பி அடிப்பேன். எனக்கு அந்த தைரியம் இருக்கிறது.

    நான் யாரையும் நம்பி தமிழகம் வரலை. என் திறமையை நம்பி மட்டும்தான் வந்தேன். தி.மு.க.வில் இருந்து ஒரு பெண்ணை பற்றி அசிங்கமாக பேசியிருக்காங்க... எவ்வளவு கேவலமான வார்த்தைகள் தெரியுமா?.

    இன்னும் சொல்லப்போனால், வேற இடம் என்றால் நான் செருப்பாலேயே அடிச்சுருப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. பல பேர் அப்படி வாங்கியிருக்காங்க... ஆனால் அவ்வளவு கீழ்த்தரமாக ஒரு ஆணை செருப்பால அடிச்சு, என் செருப்பை அழுக்காக்க விரும்பவில்லை.

    இந்த மாதிரியான ஆம்பளைங்கல முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும். இல்லையென்றால் புத்தி வராது.

    சில தரம்கெட்ட ஆண்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வக்கில்லை. இதனால் இப்படி கேவலமா பேசுறாங்க. கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க. இப்போது கிடையாது. இது ஸ்டாலின் அடிப்படையிலான புது திராவிட மாடல்.

    தமிழ்நாட்டுக்கு நான் வந்து 37 வருஷம் ஆச்சு. இத்தனை வருஷத்தில இப்படி கோபமா நான் பேசியதை யாராவது பார்த்தது உண்டா? பெண்ணுக்கு உள்ள தைரியம் யாருக்கும் கிடையாது.

    இதற்கு முன்பு கூட, என்னை அவதூறாக பேசினார்கள். அப்போது தி.மு.க. தலைவர்கள் யாராவது கண்டனம் தெரிவித்தார்களா?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாரா? எதுவும் இல்லையே... ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டவரை ஏன் கட்சியில் சேர்த்தீங்க?.

    தி.மு.க.வில் பூங்கோதைக்கு என்ன நடந்தது? அதையெல்லாம் மறந்துவிட முடியுமா?.

    நாளைக்கு என் மகள்கள் என்னை பார்த்து, 'உங்களை ஒருத்தன் கேவலமா பேசுறான். ஏம்மா அமைதியா இருந்தீங்க...' என்று கேட்டுவிட கூடாது.

    எனவே தான் நான் பேசுறேன். என் மகள்களுக்காக, அனைத்து பெண்களுக்காகவும் பேசுறேன்.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

    • சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்கு பதிந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டு சமீபத்தில்தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்றைய திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்கு பதிந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திமுக கூட்டத்தில் ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடவடிக்கை.
    • கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு.

    திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டு சமீபத்தில்தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்றைய திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    ×