என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழைப்பு"
- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
- முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வரும் 16-ந் தேி வரை நடைபெறுகிறது.
- அரியலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் அழைத்துள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக ஆகஸ்ட் 12 -ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போண் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
- அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பெங்களூர்:
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.
அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.
இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
- வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- திருச்சியில் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின்கௌ ரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம்ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர்,ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில்விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்குதங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து டிபிடி மோடுக்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம்ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம்2023 - வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் இலவசஅனுமதியில் கலந்துகொள்ளலாம். இங்கு வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சா ன்றளிப்புத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, வேளாண்அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனைநிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள்ஆகியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனிமாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்டவன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மைஇயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
- மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற் கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"-எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.
அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட் டிற்கு வருகை தந்து பயிற்சி கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள் ளார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல்-(sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது
- இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கடலூர்:
கடலூர் கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செய லாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலை மையில் வடலூரில் நடை பெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், காசிராஜன், நாராயண சாமி, சுப்ரமணி யன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செய லாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், சலீம், இளைய ராஜா, நகர செய லாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், நகராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்புராயலு, பேரூராட்சித் தலைவர் குறிஞ்சிப்பாடி கோகிலா குமார், துணைத்தலைவர் ராமர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் தலைமைமையில் நடை பெறும் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகு திகளின் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வருகிற 1.1.2024 தகுதி யேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.07.2023 வெள்ளி முதல் 21.08.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயத்திற்கான அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- 100 பேர் வரை குழுவாக இணைய முடியும் என விளக்கம்
வேலாயுதம்பாளையம்,
இயற்கை வேளாண் முறையில் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்கு தற்சமயம் கட்டணமின்றி தேசிய பங்கேற்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இயற்கை விவசாயம் செய்யும் ஒரு கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே 7முதல் 25 பேர் வரை கொண்ட ஒரு குழுவாக இணைய வேண்டும். இதில் அதிகபட்சம் 100 பேர் வரை குழுவாக இணைய முடியும். இவ்வாறு இணையும் குழுவினர் அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என்ற உறுதிமொழி ஏற்று இத்திட்டத்தில் இணையலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படும் குழுக்களுக்கு தலைவர், செயலாளர் ஆகியோரை தேர்வு செய்வதுடன் குழுவுக்கு தனியாக பெயர் வைக்க வேண்டும். பின்னர் குழு உறுப்பினர்களின் பெயர், கிராமம், பட்டா, ஆதார் எண், போட்டோ மற்றும் நிலவுடமை ஆவணங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளது
- போட்டியில் கலந்து கொள்ள கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு விடுத்தார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை 18-ம் தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இப்போட்டியில்முதன்மைக் கல்வி அலுவலரால்தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதற்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த கலெக்டர் அழைப்பு
- 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும், விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் கல்லூரியில் தற்போது 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- 19,20-ந்தேதிகளில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு பிகாம், பி.ஏ(ஆங்கிலம்),பி.ஏ(பொருளாதாரம்), பி.காம்(சி.ஏ), பி.எஸ்.சி(கணிதம்), பி.எஸ்.சி(கணினி அறிவியல்), பி.ஏ(டூரிசம் அண்டு டிராவல் மேனேஜ்மெண்ட்), பி.எஸ்.சி(வேதியியல்),பி.எஸ்.சி (இயற்பியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
மேட்டுப்பாளையம் கல்லூரியில் தற்போது 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் கல்லூரியில் மொத்தம் 468 இடங்கள் உள்ளன.
இதற்கு 10,549 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் 2023-24 ம் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.
அதற்கு இதுவரை இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பம் பெற அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கானப்பிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2023 - 2024 ஆம் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 19, 20-ந்தேதிகளில் 2 நாட்கள் மட்டும் காலை 10 மணிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
- நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் பிரபுசங்கர் தகவல்
கரூர்,
கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற வரும், 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில்... பண்பாட்டுத்துறையின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக, தமிழ கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பர தநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயி லாட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசி லம்பாட்டம் (வீரக்கலை) ஆகிய கலைஞர்கள் விண்ணப் பிக்கலாம்.தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலைமன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள், இந்த விருதிற்கு விண் ணப்பம் செய்யக்கூடாது. மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து வரும், 29க்குள், உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப் பள்ளி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.
அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.
மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்