என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூட்டை"
- பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்று விடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கி ழமை கடைக்கு விடுமுறை அளிக்கப்ப ட்டு இருந்தது.
இந்நிலை யில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சுதா–கர் வந்தார். அப்போது கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போக வில்லை.
இது குறித்து சுதாகர் வீரப்பன் சத்திரம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.
இதில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்பு நபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி யது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற–னர்.
- சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையில் கொள்ளையடித்தனர்.
- உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
கொண்டலாம்பட்டி:
சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் நாராயணன் (வயது 27) இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் கார்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் நேற்று மதியம் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.அதே போல் இவரது கடைக்கு அருகில் ஏழுமலை என்பவரின் கண்ணாடி கடையில் இருந்த 85 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அமானி கொண்டலாம்பட்டி எஸ். நாட்டமங்கலம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவரும் இவரது மனைவியும் அந்த பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 5 கிராம் தங்க கம்மல்கள், பணம் ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுப்பிரமணி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- சேலம் சூரமங்கலம் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் பூட்டை உடைத்து கொள்ளையடித்தனர்.
- சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கொண்டலாம்பட்டி:
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் தியாக பரமம் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 54).
இவர் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தை ராசிபுரம் பகுதிக்கு மாறுதல் செய்வதற்காக கடந்த 6 மாத காலமாக பூட்டி வைத்திருந்தார். நேற்று காலை சென்றபோது நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மின்மோட்டார் உட்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சை புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போனது.
- கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையர் உருவத்தை வைத்து விசாரணை நடந்த வருகின்றது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18- ந் தேதி இரவு 10 மணி அளவில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த உறவினர் வீட்டு காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
பின்னர் விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.50,000 பணம், அரை பவுன் மோதிரம், 1 விவோ செல்போன் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நோட்டமிட்டு வீடு புகுந்து செல்போன், பணம், நகைகள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் , செல்போன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் நடமாடும் காட்சி கேமரா வில் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 78), வக்கீல்.
இவர் கடந்த 9-ந் தேதி தனது தங்கையின் மகள் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் 10-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீடு புகுந்து கைவரிைச காட்டி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்